உள்ளடக்கத்துக்குச் செல்

எடுவார்டு பால் நோபெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எடுவார்டு பால் நோபெல் (Edward Ball Knobel) (21 அக்தோபர் 1841 – 25 ஜூலை 1930) ஓர் இங்கிலாந்து வணிகரும் பயில்நிலை வானியலாளரும் அவார். இவர் இங்கிலாந்தில் இலண்டன் மாநகரில் பிறந்தார்.

இவர் சட்டப் படிப்பில் முதலில் சேர்ந்துள்ளர். அனல், இவரது புவியியல் ஆர்வம் அரசு சுரங்கப் பள்ளிக்கு(இப்போது இது இம்பீரியல் கல்லூரி, இலண்டன்) 1861 இல் மாறவைத்துள்ளது.இவர்1862 இல் மறுபடியும் தன் வாழ்க்கைப்பணியை மாற்றிக் கொண்டார். இவர் தேறல் வடிப்புத் துறையில் பகுமுறை வேதியியலாளராக பர்ட்டனில் உள்ள பாசு(பீர்) பாசு குழுமத்தில் வேலை செய்யத் தொடங்கினார். இவர் அங்கு மேலாளராகவும் முதன்மை தேறல்வடிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார். பிறகு, இவர் 1875 இல் பாக்கிங்கில் அமைந்த சாமுவேல் கோர்ட்டவுல்டு தொழிலகத்தின் பட்டு ஆலை மேலாளரானார். இவரது இறுதி பதவி இல்போர்டு ஒளிப்படக் குழுமத்தில் அமைந்தது.

இவர் 1872 இல் தன் வானியல் ஆர்வத்தை நிறைவு செய்ய, 8.5 அங்குல ஒளித்தெறிப்புவகைத் தொலைநோக்கியை வாங்கியுள்ளார்.இவர் 1875 இல் விண்மீன் அட்டவணைகளின் காலநிரலை வெளியிடத் தொடங்கிய பணி,, தொடக்கநிலை அராபிய வானியலாளர்களை பற்றியும் அரபு, பாரசீக மொழிகளைப் பற்றியும் படிக்கவைத்தது. இவர் 1879 இல் உலூக் பெக்கின் கைப்படியாக இருந்த பாரசீக அட்டணையை மொழிபெயர்த்து வெளியிட்டார்.இவர் பிறகு, கிரேக்க, அரபிய, இலத்தீன மொழிகளில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, புதிய விண்மீன் அட்டவணையை ஆல்மகெசுட்டு எனும் பெயரில் உருவாக்கி வெளியிட்டார். இவர் 1915 இல் சி. எச். எஃப். பீட்டர்சுடன் இணைந்து நெடுங்காலத்துக்குப் வேலை செய்து இறுதியாகத் தொகுத்த பதிப்பை வெளியிட்டார்.[1] இவர் பிரித்தானிய வானியல் கழகத்திலும்(1892–1893) அரசு வானியல் கழகத்திலும் (1900–1901) தலைவராக இருந்துள்ளார்.

நோபெல் குழிப்பள்ளம் கேல் குழிப்பள்ளத்துக்கு அருகில் அமைகிறது

செவ்வாய்க் கோளின் ஒரு மொத்தல் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Richard Hawley Tucker (1916). Review of Ptolemy's Catalogue of Stars. A Revision of the Almagest. பக். 930–932. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடுவார்டு_பால்_நோபெல்&oldid=3952609" இலிருந்து மீள்விக்கப்பட்டது