எடித் கெல்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எடித் கெல்மன் (Edith Kellman) (ஏப்பிரல் 4, 1911, வால்வர்த், விசுகான்சின் – மே 11, 2007, வால்வர்த், விசுகான்சின்[1]) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் யெர்க்கேசு உடுக்கண வகைபாட்டு முறைக்காகப் பெயர்பெற்றவர். இது MKK அமைப்பு எனவும் வழங்கப்படுகிறது.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் 1911 ஏப்பிரல் 4 இல் விசுகான்சினில் உள்ள வால்வர்த்தில் பிறந்தார். இவரது தந்தையார் உலூத்விக் ஆவார். இவரது தாயார் எலன் இலாவெண்டெர் கெல்மன் ஆவார்.[1] இவர் இல்லினாயிசில் உள்ள வீட்டன் கல்லூரியில் படித்தார்.[2]

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் யெர்க்கேசு வான்காணகத்தில் ஒளிப்பட உதவியாளராகப் பணிபுரிந்தார்.இங்கு இவர் வில்லியம் மார்கனுடனும் பிலிப் கெனானுடனும் இணைந்து யெர்க்கேசு விண்மீன் வகைபாட்டு முறையை உருவாக்கினார். அந்த வான்காணகத்தை விட்டு சென்றதும், வில்லியம் பே உயர்நிலைப் பள்ளியில் கணிதவியல் கற்பித்தார்.[2] MKK வகைபாட்டு முறை 1943 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையை மார்கனும் கெனானும் கெல்மனும் பயன்படுத்தி, ஓ, பீ வின்மீன்களைக் கொண்டு நம் பால்வெளியாகிய பால்வழியின் சுருள் கட்டமைப்பைப் படம் வரைந்தனர். இதன் திருத்திய வடிவம் இன்றும் விண்மீன்களின் வகைபாட்டில் பயன்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Edith M. Kellman". Lake Geneva News (May 2007). பார்த்த நாள் 4 February 2014.
  2. 2.0 2.1 Long, Jeff (14 May 2007). "Edith M. Kellman: 1911 - 2007: Teacher played key role in astronomers' work". Chicago Tribune. பார்த்த நாள் 28 December 2014.
  3. John Daintith, PH.D., E Tootill, D Gjertsen, S Mitchell, தொகுப்பாசிரியர் (1994). Biographical Encyclopedia of Scientists, Second Edition. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780750302876. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடித்_கெல்மன்&oldid=2499389" இருந்து மீள்விக்கப்பட்டது