எடித் எலன் பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடித் எலன் பால்
பிறப்பு14 சனவரி 1902[1][2]
சுனார், உத்தரப்பிரதேசம், இந்தியா
இறப்பு1975 (வயது 73)
பணிசெவிலியர்
விருதுகள்பத்மசிறீ
புளோரன்சு நைட்டிங்கேல் பதக்கம்

எடித் எலன் பால் (14 ஜனவரி 1902 - 1975) என்பவர் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்புடைய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மருத்துவ செவிலியர் ஆவார்.[3][4]

வாழ்க்கை[தொகு]

பால், புளோரன்சு நைட்டிங்கேல் உதவித்தொகையுடன் இலண்டனில் உள்ள பெட்போர்ட் கல்லூரியில் செவிலியப் படிப்பை மேற்கொண்டு தனது சேவஒஉஒனை 1928-ல் தொடங்கினார்.[5] இவர் புது தில்லி, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அலகாபாத், கோகுல்தாஸ் தேஜ்பால் மருத்துவமனை, மும்பை மற்றும் ஜஹாங்கிர் மருத்துவமனை, புனே போன்ற பல புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் மூத்த செவிலிய பதவியினை வகித்துள்ளார். இவர் ஆறு ஆண்டுகளாக செவிலிய சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார்.[5]

விருதுகள்[தொகு]

1964ஆம் ஆண்டு புளோரன்சு நைட்டிங்கேல் பதக்கத்தை வென்றவர்.[5] 1967ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் இவரது சமூக பங்களிப்புகளுக்காக நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Edith Helen Paull, hospital sister in Surrey. 1939 England and Wales Register
  2. California, Passenger and Crew Lists, 1882-1959; Edith Helen Paull; Departure: Calcutta, India; Arrival: 25 Aug 1946 - San Francisco, California
  3. "A warm tribute to late Miss Edith Helen Paull". Nurs J India 66 (8): 184. August 1975. பப்மெட்:1105448. https://archive.org/details/sim_nursing-journal-of-india_1975-08_66_8/page/184. 
  4. Korah M (June 1975). "Reminiscence of a friend whose demise has left a void (Miss Edith Helen Paull)". Nurs J India 66 (6): 126. பப்மெட்:1096091. https://archive.org/details/sim_nursing-journal-of-india_1975-06_66_6/page/126. 
  5. 5.0 5.1 5.2 "International Red Cross" (PDF). International Red Cross. 1964. பார்க்கப்பட்ட நாள் 9 May 2015.
  6. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடித்_எலன்_பால்&oldid=3521037" இலிருந்து மீள்விக்கப்பட்டது