எடித் அலைசு மூல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எடித் அலைசு மூல்லர் (Edith Alice Müller) (5 பிப்ரவரி 1918 – 24 ஜூலை 1995[1]) ஒரு சுவீடன் வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.[2]

மூல்லர் மாட்ரிடுவில் பிறந்தார். மாட்ரிடு செருமன் பள்ளியில் படித்தார். பின்னர் ஈடிஎச் சூரிச்சில் படித்தார்.[3] இவர் சூரிச் பல்கலைக்கழகத்தில் 1943 இல் கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை "Application of Group Theory and Structural Analysis to the Moorish Adornments of the Alhambra in Granada" என்பதாகும்.[2] இசுலாமிய வடிவமைப்பு புத்தியல் அறிவியல் தொழில்நுட்பத்தில் இடமில்லை எனக் கருதிய அந்தக் காலத்தில் இந்த ஆய்வு இசுலாமிய வடிவியல் பாணிகளப் பயன்படுத்தும் அரிய பகுதயாக அமைந்தது; ஆனால் இவரது ஆய்வு 1980 கள் வரை கலை வரலாற்ரில் சுட்டப்படாமலே இருந்தது.[4]

பின்னர் ஈடிஎச் சூரிச்சில் படித்தார்.[3] இவர் சூரிச் பல்கலைக்கழகத்தில் 1943 இல் கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை "கிரேனடாவில் அமைந்த அல்காம்பிரா நகர மூரிழ்சு கவிகட்டிட்துக்கு குலக்கோட்பட்டையும் கட்டமைப்பு பகுப்பாய்வு முறையையும் பயன்படுத்தல் (Application of Group Theory and Structural Analysis to the Moorish Adornments of the Alhambra in Granada)" என்பதாகும்.[2] இசுலாமிய வடிவமைப்பு புத்தியல் அறிவியல் தொழில்நுட்பத்தில் இடமில்லை எனக் கருதிய அந்தக் காலத்தில் இந்த ஆய்வு இசுலாமிய வடிவியல் பாணிகளைப் பயன்படுத்தும் அரிய பகுதியாக அமைந்தது; ஆனால் இவரது ஆய்வு 1980 கள் வரை கலை வரலாற்றில் சுட்டப்படாமலே இருந்தது.[4]

இவர் 1946 முதல் 1951 வரை சூரிச் வான்காணகங்களிலும் 1952 முதல் 1954 வரை மிச்சிகான் பல்கலைக்கழகத்திலும் 1955 முதல் 1962 வரை பேசல் பல்கலைக்கழகத்திலும் பல ஆய்வு இருக்கைகளில் பதவி வகித்தார். பின்னர் இவர் நியூசாட்டல் பல்கலைக்க்ழகத்தில் 1962 இல் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். இவர் 1972 ஜெனிவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார்.[3]

இவர் முதன்மையாகச் சூரிய இயற்பியலில் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தில் 1976 முதல் 1979 வரை பொதுச் செயலாளராக இருந்தார். இப்பதவியை வகித்த முதல் பெண்மணி இவரே ஆவார்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. Chmielewski (1998), pp. 6–8
  2. 2.0 2.1 2.2 Chmielewski (1998), p. 6
  3. 3.0 3.1 3.2 Riedtmann 2010.
  4. 4.0 4.1 Chorbachi (1989) p. 755
  5. Chmielewski (1998), p. 7

நூல்தொகை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எடித்_அலைசு_மூல்லர்&oldid=3235954" இலிருந்து மீள்விக்கப்பட்டது