எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்
எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட் | |
---|---|
இயக்கம் | மைக்கேல் கோண்டிரி |
தயாரிப்பு | ஆந்தொனி பெர்க்மான் ஸ்டீவ் கோலின் |
கதை | திரைக்கதை: சார்லி காஃப்மேன் கதை: மைக்கேல் கோண்டிரி பியெர் பிஸ்முத் சார்லி காஃப்மேன் |
இசை | ஜோன் பிரையன் |
நடிப்பு | ஜிம் கேரி கேட் வின்ஸ்லெட் கிர்ஸ்டன் டன்ஸ்ட் மார்க் ருஃப்பால்லோ எலியா வுட் டாம் வில்கின்சன் |
ஒளிப்பதிவு | எல்லன் குராஸ் |
படத்தொகுப்பு | வால்டஸ் ஓஸ்கர்டோட்டிர் |
விநியோகம் | போகஸ் பீச்சர்ஸ் |
வெளியீடு | 19 மார்ச் 2004 |
ஓட்டம் | 108 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $20 மில்லியன் |
மொத்த வருவாய் | $72.2 மில்லியன் |
எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லஸ் மைண்ட் என்பது 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்க உளவியல்-நகைச்சுவை-நாடகவகைத் திரைப்படம். சார்லி காஃப்மேனால் எழுதப்பட்டு மைக்கேல் கோண்டிரியால் இயக்கப்பட்ட இத்திரைப்படமானது அறிவியல் புனைகதையின், சமமற்ற அல்லது நேரற்ற கதைச்சொல்லல் மற்றும் நவீன சர்யலிச கூறுகளைப் பயன்படுத்தி நினைவுத் திறனின் இயல்பையும் உணர்ச்சிகரமான காதலையும் ஆராய்கிறது.[1] வட அமெரிக்காவில் 2004 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுதும் அமெரிக்க $ 70 மில்லியன் டாலரை வசூலித்தது.[2]
கோண்டிரி, இயக்குநர் சார்லி காஃப்மான் மற்றும் பிரெஞ்சு நிகழ்கலை கலைஞர் பியெர் பிஸ்முத் ஆகியோருடன் கதைக்காக பணிபுரிந்தார். இருவரும் இணைந்து, 2005 ஆம் ஆண்டு சிறந்த மூல திரைக்கதைக்கான அகாடெமி விருதினை வென்றனர், அத்தோடு, அவ்வருடத்தில் கேட் வின்ஸ்லெட்டிற்கு சிறந்த நடிகைக்கான நியமனமும் கிடைத்தது. திரைப்படத்தில் ஜிம் கேரி மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்தனர். சிறப்புத் தோற்றமாக கிர்ஸ்டன் டன்ஸ்ட், மார்க் ருஃப்போலோ, டாம் வில்கின்சன், எலைஜா வூட், ஜேன் ஆடம்ஸ், மற்றும் டேவிட் கிராஸ் ஆகியோரைக் கொண்டிருந்தது.
தலைப்பானது அலெக்ஸாண்டர் போப்பின் கவிதையான எலோய்சா டு அபெலார்ட் டிலிருந்து எடுக்கப்பட்டது. அதொரு சோகமான காதல் விவகாரக் கதை, அதில் கதாநாயகியின் ஞாபகமறதியே ஒரே வசதியாக மாறுகிறது.
திரைப்படமானது விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது, அதன் வெளியீட்டிற்குப் பிறகும் கூட எண்ணற்ற பாராட்டுதல்களையும் வலுவான வெறித்தனமான ஆதரவாளர்களையும் உருவாக்கிக்கொண்டது. இத்திரைப்படம் விமர்சகர்களால் 2004 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றெனப் பாராட்டப்பட்டது, மேலும் சமீப காலப் பட்டியல்களில் பத்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்றெனக் கூறப்பட்டுள்ளது.
கதைக்கரு
[தொகு]அடக்கமும் கூச்சப்பண்பும் கொண்ட ஜோயல் பாரிஷ் (ஜிம் கேரி) மற்றும் விடுதலையுணர்வும் உணர்ச்சிமிகுபண்பும் கொண்ட க்ளமெண்டைன் க்ருசின்ஸ்கி (கேட் வின்ஸ்லெட்) ஆகியோர் தங்களுக்கிடையே நியூயார்கிலுள்ள மாண்டாக்கிலிருந்து ராக்வில் மையத்திற்குச் செல்லும் லாங் ஐலாந்து தொடர்வண்டிப்பாதையில் சந்திக்கின்றனர். மாறுபட்ட ஆளுமைகள் கொண்டிருந்த அவர்கள் விளக்கம் அளிக்கப்பட இயலாத முறையில் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகின்றனர்.
ஜோயல் மற்றும் க்ளெமெண்டைன் உண்மையில் இரு ஆண்டுகள் ஒன்றாக இருந்தபிறகு பிரிந்த முன்னாள் காதலர்கள். ஒரு மோசமான சண்டைக்குப் பிறகு, க்ளமெண்டைன் நினைவுகளை அழிக்கும் நிறுவனமான லாகுனாவை அணுகி ஜோயலுடனான தனது உறவு பற்றிய நினைவுகளை அழிக்கிறார். ("லாகுனா" என்பது ஒரு இடைவெளி மற்றும் காணாமற் போகும் பாகமாகும். லாகுனர் அம்னீஷியா ஒரு குறிப்பிட்ட நிகழ்வினைப் பற்றிய ஒருவரது ஞாபக இடைவெளியாகும்.) இதனைக் கண்டறிந்த பிறகு இடிந்து போன ஜோயல் தானும் இந்த முறையைப் பின்பற்ற முடிவெடுக்கிறார். இந்த நினைவு அழிப்புமுறை அவர் தூங்கும் போது நடக்கிறது.
ஜோயலின் சிந்தனைகளிலேயே படத்தின் பெரும்பகுதி நடக்கிறது. அவரது நினைவுகள் அழிப்புமுறையின்போது, ஜோயல் அந்நினைவுகள் தானாகவே காலமுறையில் தலைகீழாக மறுபடியும் நிகழ்வதைக் காண்கிறார். க்ளமெண்டைனுடனான அவரது உறவின் துவக்கக்காலத்தின் மகிழ்ச்சியான நேரங்களைக் கண்ட பிறகு, க்ளமெண்டைனைப் பற்றிய சில நினைவுகளையும் அவர் மீதான தனது காதலையும் பாதுகாக்கப் போராடுகிறார். இருப்பினும் அவரது நினைவுகள் மெதுவாக அழிக்கப்படுகின்றன, அதில் கடைசியாக அவரிடம் மாண்டாக்கில் என்னைச் சந்தி ("மீட் மீ இன் மாண்டாக்") என்று கிளமெண்டைன் சொல்லிய நினைவும் இடம் பெறுகிறது.
ஜோயலின் நினைவு அழிப்பின் போது ஏற்படும் தனித்த ஆனால் தொடர்புடைய கதையில், லாகுனாவின் பணியாளர்களின் கதாபாத்திரங்கள் விவரிக்கப்படுகின்றன. பாட்ரிக் (எலியா வுட்) லாகுனாவின் அழிப்பு வேலைகளை செயல்படுத்துபவர், ஜோயலின் நினைவுகளைக் கண்டபின் ஜோயலின் அணுகுமுறைகளைப் பின்பற்றி க்ளமெண்டைனுடன் காதல் சந்திப்புக்களை ஏற்படுத்துகிறார். மேரி (டன்ஸ்ட்) லாகுனா நிறுவனத்தின் வரவேற்பாளர், உடன் பணிபுரியும் மற்றொரு அழிப்பு வேலைகளை செயல்படுத்துபவரான ஸ்டானைக் காதலிக்கின்றார். திருமணமான மருத்துவரும் நிறுவனத்தின் தலைவருமான (டாம் வில்கின்சன்) உடன் ஒரு உறவைக் கொண்டிருந்ததையும் அந்த உறவை நிறுவனத்தின் தலைவரின் மனைவி கண்டுபிடித்த பிறகு தனது நினைவுகளிலிருந்து அதனை அழிக்க அவர் ஒப்புக்கொண்டதையும் ஜோயலின் நினைவு அழிப்பின் போது அறிகின்றார். மேரி இதனை அறிந்த உடன், நிறுவனத்தின் ஆவணங்களைத் (அழிக்கப்பட்ட நினைவுகள்) திருடி அதன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அனுப்புகிறார்.
ஜோயல் மற்றும் க்ளெமெண்டைன் தொடர்வண்டியில் ஒருவரையொருவர் மீண்டும் சந்தித்த பிறகு தங்களது லாகுனா ஆவணங்களைக் காண்கின்றனர். முன்பு அறிந்திருந்த நினைவுகளோ, உறவுகொண்டிருந்த நினைவுகளோ, அவற்றையெல்லாம் அழிக்கச் சொல்லிய நினைவுகளோ இல்லாததால் அவற்றை நம்பமுடியாமலும் புரிந்துகொள்ள முடியாமலும் குழம்பி அதிர்ச்சியடைகின்றனர். தங்களது உறவுமுறை அதன் எதிர்மறையான திருப்பத்தை மறுபடியும் ஏற்படுத்தும் என அறிந்தபோதிலும் அவர்கள் மீண்டும் இணைகின்றனர்.
நடிப்பு
[தொகு]பாத்திரம் | அசல் நடிகர்கள் | ஒலிச்சேர்க்கை தமிழ் |
---|---|---|
ஜோயல் பாரிஷ்ஷாக | ஜிம் கேரி | |
க்ளெமெண்டைன் க்ருசின்ஸ்கியாக | கேட் வின்ஸ்லெட் | |
மேரி ஸ்வெவொவாக | கிர்ஸ்டன் டன்ஸ்ட் | |
ஸ்டான் பிங்காக | மார்க் ருஃபாலோ | |
பாட்ரிக் | எலிஜா வூட் | |
மருத்துவர் ஹோவார்ட் மியர்ஸ்வியாக் | டாம் வில்கின்சன் | |
கேரியாக | ஜேன் ஆடம்ஸ் | |
ராப்பாக | டேவிட் க்ராஸ் | |
ஹோலிஸ்ஸாக | டியீட்ர் ஓ'கானெல் | |
ரயான் பிராங்க் | தாமஸ் ஜே | |
இளம் ஜோயல் பாரிஷ்ஷாக | ரியான் வைட்னி | |
இளம்பருவத் தொல்லைதருபவனாக | ஜோஷ் ப்ளிட்டர் |
குறிப்பிட்ட நினைவு அழிப்பு
[தொகு]குறிப்பிட்ட நினைவு அழிப்பு என்பது ஓர் கற்பனையான அறுவை சிகிச்சையற்ற வழிமுறை. அதன் நோக்கம் நினைவுகளில் கவனத்திற்குரியதை குறிப்பாக தேவையற்ற மற்றும் வலிமிக்க நினைவுகளை அழிப்பதாகும். அதொரு மென்மையான மூளை பாதிப்பு வடிவம், ஒப்பீட்டு அளவில் "கடுமையான குடிபோதை இரவுக்கு" நிகரானது. இந்த அழிப்பு வழிமுறை தனித்த முறையில் லாகுனா இன்கார்பரேட்டட்டினால் (Lacuna incorporated) செயல்படுத்தப்படுகிறது. கதாபாத்திரங்களான ஜோயல் மற்றும் க்ளமெண்டைன் இருவரும் இந்த வழிமுறையைப் பயன்படுத்தி தங்களது நினைவுகளை அழித்துக்கெள்கின்றனர். திரைப்படத்திற்கான திரைக்கதை மற்றும் மேம்பாட்டின் ஒரு பகுதியாக தொழில்நுட்பத்திற்கு ஒரு பின்னணிக் கதை தயாரிக்கப்பட்டது. அதில் ஒரு விளையாட்டாக ஏமாற்றுகிற விதத்தில் "லாகுனா இன்க்"கிற்கு ஒரு இணையதளமும்[3] இடம்பெற்றிருந்தது. அதுவே பின் வரும் தகவலுக்கான சான்றாகும்.
திரைப்படத்திலிருக்கும் வழிமுறை கற்பனையானதாக இருந்தாலும் கூட, சமீப ஆராய்ச்சி ஒன்று ஆய்வுக் கூடத்திலுள்ள எலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளை வெற்றிகரமாக அழிப்பது சாத்தியமே எனக் காட்டியுள்ளது. அத்தகைய வழிமுறை நோயுற்ற காலத்திற்குப் பிறகான மன அழுத்தத்தை குணப்படுத்த வழிவிடலாம்.[4]
நினைவுகளின் விளக்கங்கள்
[தொகு]திரைப்படம் முழுதும் விரிவான திரைப்பட தொழில்நுட்பங்கள் ஜோயலின் நினைவுகளின் சிதைவிற்கும் அவரது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கான நிலைமாற்றத்தையும் (நினைவுள்ள நிலையிலிருந்து நினைவற்ற நிலை) ஆகிய இரண்டினையும் விளக்கப் பயன்படுததப்பட்டுள்ளன. இவை மிக நுண்ணியமானது முதல் மிகுந்த நாடகத்தன்மை வாய்ந்தது வரையுள்ளன:
- நினைவின் படத்தரம் மற்றும் ஒலி உறுதி எளிமையாகப் படிப்படியாக தரம் குறையும் (ஒரு எடுத்துக் காட்டாக ஜோயல் அவரது அண்டை வீட்டுக்காரருடன் அவர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் தாழ்வாரத்தில் பேசும்போது).
- அரங்க வெளிச்சத்தை வெகுவாகப் பயன்படுத்துதல் (க்ளமெண்டைன் ஜோயலிடமிருந்து இரயில் நிலையத்தில் பிரிக்கப்படும் போது போன்றவை)
- உணர இயலாத விவரங்கள் பார்வையிலிருந்து மறைவது (எடுத்துக்காட்டுகள் க்ளமெண்டைனின் பெயர் ஜோயல் கையில் வைத்துள்ள லாகுனா அஞ்சல் அட்டையிலிருந்து மறைவது அல்லது பேர்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ் புத்தகங்கள் படிப்படியாக வெள்ளையாக மாறுவது).
- ஒரு விஷயத்தில் காலமும் காட்சியும் "இணைக்கப்படுவதாக" உள்ளது. (ஜோயல் க்ளமெண்டைனால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் அவருடன் அனுசரிக்க முயலும் போதான காட்சி. ஜோயல் தெருவின் ஒரு முனையிலிருந்து மற்றொன்றிற்கு செல்ல முடியாதவாறு உணர்கிறார் - இதில் சேர்க்கப்படுவது கடைகளின் காட்சிப் பொருட்களின் விவரங்களாகும். இக்காட்சியில் நாம் மறுபடியும் ஜோயலின் குடியிருப்பில் விளக்கானது காற்றில் ஆடுவதன் பிரதிபலிப்பினையும் கூடக் காணலாம்).
- வெளிப்படையாக நினைவுகள் சிதைவது (இதில் இடம் பெறும் எடுத்துக்காட்டுகள் வானிலிருந்து விழும் கார், ஜோயலும் க்ளமெண்டைனும் அமர்ந்துள்ள கார் மறைவது, வேலி மறைவது, அவர்கள் ஒரு தொடருந்து நிலையம் வழியாக ஓடும் போது அங்கிருக்கும் மக்கள் 'கண் அடிப்பது', கடற்கரை வீடு ஜோயலும் க்ளமெண்டைனும் உள்ளிருக்க இரண்டாகப் பிரிவது).
- கனத்த சப்தம் மற்றும் உருவத்தின் சிதைவு, முகங்கள் வெற்றிடமாகத் தோன்றுவது (ஜோயல் மற்றும் க்ளமெண்டைன் அழியும் நினைவுகளில் நுழையும் போது ஜோயல் மருத்துவர் மியர்ஸ்வியாக்குடன் பேசிக்கொண்டிருப்பார்).
- மூத்த நடிகர்கள் மற்றும் அவர்களது இளம் பருவங்களுக்கு இடையில் மாறி வரும் காட்சியமைப்பு (ஜோயல் அவமானகரமான நினைவை மீண்டும் நினைக்கும் போது சிறுவயதில் சில தடியர்களால் செத்தப் பறவையைச் சம்மட்டியால் அடித்ததை நினைகூர்கையில் காட்சி இளம் நடிகர்களான ஜோயலாக ஜிம் கேரி மற்றும் க்ளமெண்டைனாக கேட் வின்ஸ்லெட்டிற்கு இடையில் மாறி வரும். ஜோயல் தெளிவாக க்ளமெண்டைனின் இளமை மிகுந்த தோற்றத்தைக் காண இயலும் ஏனெனில் அவர்கள் இருவரும் இணைந்திருந்த காலத்தில் அவரது படத்தை அவ்வாறாக பார்த்திருப்பதாலாகும்).
- படத்தின் காட்சிகள் வற்புறுத்தப்பட்ட காட்சி (trompe-l'œil) விளைவினைக் கொண்டு பயன்படுத்துகின்றன, பார்வையாளர்களுக்கு நடிகர்களை அவர்களின் பாத்திரங்கள் சிறிய உலகத்தில் இருந்து வந்தாலும் கூடப் பேரளவில் காட்டுவது, . (எடுத்துக்காட்டுகள் ஜோயலும் க்ளமெண்டைனும் சமையலறைப் பாத்திரம் கழுவுமிடத்தில் இருக்கையில் அல்லது ஜோ தனது தாயிடமிருந்து மறைகையில் மற்றும் அண்டை வீட்டுக் க்ளமெண்டைன் அவரது நினைவில் ஒரு குழந்தையாக மேஜைக்கு அடியில் ஒளியும் போது.)
காட்சி சட்டங்களின் குறியீடுகள்
[தொகு]எடர்னல் சன்ஷைனின் பல படச்சட்டங்களில் குறியீடுகளுள்ளன. படத்தின் துவக்கத்திலும் முடிவிலும் காட்சித்தொகுப்புகளில் காட்டப்படுவது காதலர் தினத்திற்கு சற்று முன்பு, அப்போது அல்லது பின்பு நடப்பது. மீதமுள்ள காட்சிகள் விரிவாக ஜோயலின் நினைவில் நடப்பதாக வகைப்படுத்தப்படலாம், ஆனால் இவைகள் துணைபிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்:
- ஜோயல் உண்மையாகவே நடக்கிறது என நிறைவுகொள்ளும் நினைவுகள் (எ.கா., உறைந்த சார்லஸ் நதியின் மீதான தேதி).
- ஜோயல் குரலில் விவரிக்கும் நினைவுகள் (எ.கா "இறந்த உணவை" உண்பது).
- ஜோயல் நடப்பதாக காணும் நினைவுகள் மற்றும் அவற்றுடன் அவரால் தொடர்பு கொள்ள முடிவது.
- ஜோயல் ஒரு பங்கேற்பாளராக ஆனால் "கதாப்பாத்திரத்தை உடைத்து" காட்சியின் போக்கினை மாற்றக்கூடிய நினைவுகள்
- ஜோயல் தனது குழந்தைப் பருவத்தின் பல்வேறு கணங்களை க்ளமெண்டைனை அங்கிருந்த மனிதர்களில் ஒருவராக நினைவில் மறுபடியும் நிகழ்த்தும் நினைவுகள்
- ஜோயல் காட்சிகளை அங்கொரு தொலைக்காட்சித் திரையில் விரிவதாக இருக்கும் நினைவுகள் (அவரது கட்டடத்தின் முற்றத்தில் ஃபிராங்க்குடன் உரையாடுகையில்)
- அழிக்கப்பட்ட நினைவுகளும் மக்கும் வடிவில் சுணங்கி நிற்பது (எ.கா லாகுனாவின் அலுவலகத்தில் முகமற்ற உயிர்கள்).
ஜோயலின் நினைவு அழிப்பின் போது உண்மையில் நடந்தச் சில நிகழ்வுகள் (அதாவது தொழில் நுட்பவியலாளர்கள் ஸ்டான் மற்றும் பாட்ரிக்கின் உரையாடல் பாட்ரிக் க்ளமெண்டைனின் உள்ளாடைகளைத் திருடியதைப் பற்றியது) ஜோயல் மறுபடியும் நினைக்கையில் இரத்தத்துடன் இருப்பது.
படம் முழுதும் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்பானாக ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடக்கையில் இருப்பது க்ளமெண்டைனின் தலைமுடியின் நிறமாகும். அவர் எப்போதெல்லாம் நீல நிறத் தலைமுடியுடன் காட்டப்படுகிறாரோ அது குறிப்பது நிகழ்காலத்தின் ஏதோ ஒன்று அல்லது சமீப இறந்த காலத்தின் ஒன்று (தம்பதியரின் பிரிவிலிருந்தான நேரம் முதல்). க்ளெமைண்டைன் பச்சை தலைமுடியுடன் ஜோடியின் முதல் சந்திப்பில் வைத்திருப்பார், மேலும் குறுகிய காலத்தில் செம்மையாக அவர்கள் காதல் வயப்பட்டதாக ஆனபோது மாறும். பிறகு தனது தலைமுடியின் நிறத்தைச் செம்மஞ்சளாக (ஆரஞ்சாக) அவர்களது பிரிவு நெருங்குகையில் மாற்றிக் கொள்கிறார்.
முடிவு
[தொகு]காஃப்மான் ஒரு நேர்முகத்தில் வெகு தெளிவாக வெளியிடப்பட்ட படப்பிடிப்பு கதைப்பிரதியுடன்[5] கூடியதில் ஜோயலும் க்ளமெண்டைனும் கூடத்தின் வழியில் அவர்களது உறவுமுறைக்கு மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாமா என ஒப்புக்கொள்ளும்படியான தோற்றத்துடன் காணப்படும் இறுதிக் காட்சியுடன் கதை முடிவதாகக் கூறியிருந்தார். இறுதியில் என்ன நடந்திருக்கும் என்பதை பார்வையாளர்கள் தனிப்பட்டமுறையில் முடிவு செய்யலாம் எனக் கூறினார். இந்த "முடிவற்ற" கதையின் தீர்மானமானது பின் வரும் காட்சியின் வசனத்தினால் மறைக்கப்படுகிறது. அதில் ஜோயல் அவர்கள் முதல் முறையாக கடற்கரை விருந்தில் சந்தித்தப் பிறகு அவர் முன்பு வேலைச் செய்து கொண்டிருந்த புத்தகக் கடையின் எதிரில் வரும் க்ளமெண்டைனின் நினைவை மறுபடியும் நிகழ்த்திப் பார்க்கிறார். ஜோயலும் க்ளெமைண்டைனும் படத்தின் இறுதியில் படைப்பாளர்களின் பெயர்களை இடுவதற்கு முன்னராக மீண்டும் மீண்டும் காட்டப்படும் காட்சியில் பனியில் இருவரும் விளையாடுவது போன்றது விவாதத்திற்குரியதாக உள்ளது. வெளியிடப்பட்ட படப்பிடிப்பு கதைப்பிரதியில் உள்ளடங்கியதின் நேர்முகத்தில், கோண்ட்ரி அவர்கள் இருவரும் பணியில் விளையாடுவது போன்றக் காட்சியை படைப்பாளர்களின் பெயர் வருவது முழுதும் இணைக்க விரும்பியதாகக் கூறினார். இந்த விருப்பம் தெளிவாக துவக்க விருப்பத்திலிருந்து குதித்ததாகும் (துவக்கப் பிரதியில் வெளிக்காட்டப்பட்டிருப்பது). அதில் ஜோயலும் க்ளமெண்டைனும் அவர்களின் மீதமுள்ள வாழ்க்கையைச் சந்திப்பது காதலுக்கு உள்ளேயும் வெளியேயும் விழுவது, நினைவுகளை அழிப்பது மேலும் சுழற்சியை மறுபடியும் செய்வது. இருப்பினும், அது இறுதியில் படைப்பாளிகளின் பெயர்களை இடுவதிலிருந்து திசைத் திருப்பலாம் என்பதால் கோண்ட்ரி இது செய்யப்படவில்லை என்றார்.
நீக்கப்பட்ட மற்றும் நகர்த்தப்பட்ட காட்சிகள்
[தொகு]படப்பிடிப்பு கதைப்பிரதி ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55704-610-7)- மேலும் அதற்கு முன்னரான பிரதிகள் வெட்டப்பட்டது அல்லது படம் பிடிக்கப்படாமலிருந்த ஏராளமான அம்சங்களைக் கொண்டிருந்தது.
படத் தொகுப்பில் ஏற்பட்ட பெரிய மாற்றம் தொடர்காட்சிகளில் ஜோயல் மற்றும் க்ளமெண்டைன் இருவரும் (மீண்டும்) மாண்டாக்கில் சந்திப்பதும் பின்னர் சார்லஸ் நதிக்கு செல்வதும் போன்றதைக் காட்டுவது படத்தின் இறுதியிலிருந்து முன் பகுதிக்கு நகர்த்தப்பட்டதுவேயாகும். படப்பிடிப்பு கதைப்பிரதியுடன் வெளியிடப்பட்ட காஃப்மானின் நேர்முகத்தில் இது பார்வையாளர்கள் க்ளமெண்டைனை விரும்புவதை உறுதி செய்யவே என்றார். இல்லாவிடில் பார்வையாளர்களின் க்ளமெண்டைனைப் பற்றிய துவக்க எண்ணம் ஜோயல் மற்றும் க்ளெமைண்டைனின் முதல் உறவின் காட்சிக்குப் பிறகானதின் அடிப்படையில் மிக எதிர்மறையாக இருந்திருக்கும்.
வெட்டப்பட்ட காட்சிகளில் இரயிலில் வசனம், க்ளமெண்டைனின் வீட்டில் வசனம், ஜோயல் மற்றும் நவோமி இணைந்தக் காட்சிகள் (க்ளமெண்டைனுக்கு முன்பான நண்பி, எல்லென் பாம்ப்போவால் நடிக்கப்பட்டது), ஜோயல் லாகுனா அலுவலகத்தில் க்ளமெண்டைனைப் பற்றி எதிர்மறையாக விரிவாக அவரது உணர்வுகளை விவரிப்பது மற்றும் ஜோயல் மற்றும் க்ளமெண்டைன் ஆகியோரது முதல் "காதல் சந்திப்பின்" காட்சிகள் உள்ளிட்டவை அடங்கும். லாகுனா அலுவலகக் காட்சியின் நீக்கப்பட்ட வசனங்கள் பின்னர் பயன்படுத்தப்பட்டன. அப்போது அவர் ஒரு ஒலிநாடாவை கேட்டுக் கொண்டிருப்பார், அதில் க்ளமெண்டைனின் ஆளுமையின் பிறழ்ச்சிகள் விவரிப்பட்டிருக்கும். மேலும் அவர்களின் முதல் "காதல் சந்திப்பின்" வெட்டப்பட்டக் காட்சிகளின் சுருக்கங்கள் ஜோயல் க்ளமெண்டைனின் நினைவுகளின் எகிறல்களுடன் கலந்து அழிப்புச் செயல்பாடு முடிவிற்கு வருகிறது. உண்மையில், படத்தொகுப்பின் போது பெரும்பாலான படத்தின் காட்சிகள் இடம் மாற்றப்பட்டன. கணிசமான எண்ணிக்கையிலான காட்சிகள் அதே இடத்தில் இயக்குநர் மைக்கேல் கோண்டிரியினால் மாற்றப்பட்டன, அதில் மன்ஹாட்டன் தெருக்களில் ரிங்கிலிங் பிரதர்ஸ் மற்றும் பார்னும் & பெய்லி சர்க்கஸை காட்டும் காட்சிகள் உட்பட இருந்தன. மற்றொரு கைவிடப்பட்டக் காட்சி ஒரு மதுபானக்கடையில் அளவு மீறிக் குடித்த க்ளமெண்டைனைப் பிற ஆணுடன் இணைந்து ஜோயலைப் பொறாமை கொள்ள வைக்க முயற்சிப்பது போன்று நிகழ்வது (மிர்ஸ்வியாக்குடனான ஒலி நாடா நேர் காணலில் ஜோயலை க்ளமெண்டைனை மிகக் கட்டுப்பாடற்ற பாலுணர்வு கொண்டவர் எனப் பேசத் தூண்டியிருக்கலாம்). மற்றொரு நீக்கப்பட்டக் காட்சி டாக்டரின் அலுவலகத்தில் இறுவட்டு சாதனத்தில் மேரி ஸ்வெவோ அவரது வாழ்க்கை ஒலி நாடாவை கேட்பது போன்றதாகும். நீடிக்கப்பட்ட அக்காட்சியில் மேரி ஒலி நாடாவில் குறிப்பாக ஒரு கருக்கலைப்பிற்கு பின்பு இதை ஏன் செய்திருக்க வேண்டும் எனக் கூறுவார். இன்னும் மற்றொன்று ஜோயல் மற்றும் க்ளமெண்டைன் மர்மப் புதினமான 'தி ரெட் ரைட் ஹாண்ட்"டை இணைந்து அவரது சொகுசு இருக்கையில் அமர்ந்து வாசிப்பது (அப்புதினத்தை க்ளெமைண்டைன் மாண்டாக்கின் உணவு விடுதியில் அவரும் ஜோயலும் மறுபடியும் முதல் முறை சந்திக்கும் போது படித்துக் கொண்டிருப்பார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்
[தொகு]எடர்னெல் சன்ஷைனு'க்கு காஃப்மான், கோண்ட்ரி மற்றும் பிஸ்முத் சிறந்த மூலத் திரைக்கதைக்கான 2004 ஆம் ஆண்டின் அகாடெமி விருதை வென்றனர். வின்ஸ்லெட்டும் சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் மில்லியன் டாலர் பேபியில் நடித்த ஹிலாரி ஸ்வான்கிடம் இழந்தார்.
விமர்சன வரவேற்பு
[தொகு]படமானது 93% பசுமை தரக் குறியீட்டை ராட்டன் டொமேட்டோஸ் வலைத்தளத்தில் 211 மறுபார்வைகளின் அடிப்படையில் சான்றளிக்கப்பட்டது. எல்லோரும் ஒப்புக்கொண்டது படமானது "காஃப்மான் பாணியில் திருப்பம், போதையூட்டுவது போன்று காதலைக் கொண்டு நகர்கிறது" என்பதாகும்.[6]
ரோஜர் எபெர்ட் விமர்சனத்தில், "அதன் கதையில் திட்டமிட்ட இழப்புக்களை ஏற்படுத்தும் திருப்பங்களைக் கொண்டிருந்தாலும், எடெர்னல் சன்ஷைன் உணர்ச்சிகரமான மையத்தைக் கொண்டிருக்கிறது, மேலும் அதுவே அதனை வேலைச் செய்ய வைக்கிறது."[7][7] எபெர்ட் பின்னர் தனது சிறந்த படங்கள் வரிசையில் படத்தைச் சேர்த்தார்.[8]
தனது மறுபார்வையில் டைம் அவுட் சுருக்கமாக, "இந்தத் தடுக்க இயலாத கோண்ட்ரி/காஃப்மான்/சேரி அச்சு பல அற்புதங்களை மர்மமான அழகிலும் யதார்த்த பயங்கரத்தையும் ஒருவரின் சொந்த குழப்பமான எண்ணத்துடன் உள்ளுக்குள் சிக்கிக் கொண்டு சுயக்கட்டுப்பாட்டு ஞாபக மறதி நோயால் உடைந்த ஆனால் நம்பிக்கையுடைய இதயத்தைத் தாண்டுவதை வெளிக்காட்டுகிறது."[9]
2006 ஆம் ஆண்டில், எம்பயர் சஞ்சிகையின் 201 ஆம் இதழில், எடர்னெல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட் அவர்களின் அனைத்து காலங்களிலும் வெளி வந்த சிறந்த 201 படங்களின் வரிசையில் 83 வதாக வாசகர்களால் வாக்களிக்கப்பட்டது. அதே வருடத்தில், வின்ஸ்லெட்டின் க்ளமெண்டைனாக நடிப்பு ப்ரிமீயர் இதழின் அனைத்து காலங்களுக்குமான 100 சிறந்த நடிப்புகளில் 81 ஆவது இடத்தில் சேர்க்கப்பட்டது. க்ளாடியா பியூக் யூஎஸ்ஏ டுடே வின் பட விமர்சகர் வின்ஸ்லெட்டின் நடிப்புப் பற்றிக் கூறியது, "அவர் சுதந்திரமாக அற்புதமாக இருக்கிறார், அவரது உணர்வினைப் பொறுத்து தலைமுடியின் நிறம் மாறுகிறது. அவருக்கு சமீபகாலங்களில் இது போன்ற கொழுத்த வேடங்கள் கிடைக்கவில்லை, அதை அவர் மிகச் சரியாகச் செய்கிறார்."[10]
கரோல் வெர்னாலிஸ் சுட்டிக்காட்டுவது கோண்டிரியின் இசை வீடியோக்களை இயக்கும் அனுபவம் படத்தின் மைஸ்-என்- சீன்னிற்கும் ஒலி வடிவமைப்பிற்கும் பங்களித்திருக்கிறது. வெர்னாலிஸ் காட்சியின் சில இடங்கள், ஒலி மற்றும் இசையின் கருக்கள் படம் முழுதும் நீடிப்பது, எப்படி சில கருக்கள் எதிர்முனையில் வேலை செய்கின்ற என்பது பற்றியது என்கிறார்.[11]
2009 ஆம் ஆண்டு நவம்பரில், டைம் அவுட் நியூ யார்க் பத்தாண்டின் சிறந்த படங்களில் மூன்றாவது என்று பட்டியலிட்டது:
கடந்த காலத்தில் இயக்குநர் மைக்கேல் கோண்ட்ரியின் கிண்டர்கார்ட்டன் ஆர்ட்ஸ்-அண்ட்-க்ராஃப்ட்ஸ் ஏஸ்த்தட்டிக்கும் சார்லி காஃப்மேனின் மொபியஸ்-ஸ்ட்ரிப்டீஸ் ஆகிய இரண்டு கதைகளுமே ஏற்க முடியாத அளவு சுவைமிக்கதாகவும் குழப்பமானதாகவும் இருந்தன. ஆகவே இந்த மெட்டா-ராம்-காம் ஏன் எப்போதுமே நம்மை கண்ணீர் பொங்க வைத்து போக வைக்கின்றன?...இந்த இரு படைப்புகளும் இறுதியில் உயர் கருத்துநயம் மற்றும் மனிதநேயம் என்ற சரியான சேர்க்கையைப் பெறுகின்றன. இவை காதலில் தோல்வியுற்ற ஒருவனின் வாழ்க்கையை வேடிக்கையான, வலி மிகுந்த, கவித்துவமான மற்றும் நிலையற்றவிதத்தில் விநோதமான ஒரு உலகிற்கு மாற்றும் ஒரு நிறுவனத்தின் நிகழ்வைப் பொறுத்த உத்திகளைக் கைக்கொண்டிருக்கின்றன.[12]
எண்டெர்டைன்மெண்ட் வீக்லி அதன் பத்தாண்டின் இறுதியிலான பட்டியலில் விட்டது, "சார்லி காஃப்மானின் கிறுக்குத்தனமான பைசாண்டைன் கால மூளையே இந்த 2004 ஆம் ஆண்டு கதையான அனைத்து காதல் ஞாபகங்களையும் அழிப்பதானதை பத்தாண்டின் மிகச் சிறந்த காதல் படங்களில் ஒன்றாக ஆக்க இயலும்."[13] 2009 ஆம் ஆண்டு டிசம்பரில், ஏவி சங்கம் படத்தை பத்தாண்டின் சிறந்த ஒன்றாக அறிவித்தது.[14] ஸ்லாண்ட் இதழ் 2000 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் 87 ஆம் இடத்தை அவர்களின் பட்டியலில் இட்டது.[15]
தி ஆனியனின் ஜனவரி இதழில், காமிக் செய்தித் தாளின் ஏவி சங்கம் எடெர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்டை 2000 ஆம் ஆண்டுகளின் முதலிடப் படமாக தரமிட்டது. அது கிறிஸ்டஃபர் நோலனின் மெமெண்டோ மற்றும் சியோன் சகோதரர்களின் நோ கண்ட்ரி ஃபார் தி ஓல்ட் மென் போன்றவற்றை முறியடித்துப் பெற்றது. கட்டுரை குறிப்பிடுகிறது, "நன்றோ தீதோ எப்போதும் நமக்கு, நாம் தற்போது யார் மற்றும் நாம் யாராக இருப்போம் என்பதைக் காட்டும் அரிதானப் படம், ."
இசை மற்றும் ஒலித்தடம்
[தொகு]எடர்னெல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட் டின் ஒலித்தட தொகுப்பு ஹாலிவுட் ரிக்கார்ட்ஸ்சினால் மார்ச் 16, 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இசைத் தொகுப்பு லாஸ் ஏஞ்செல்ஸ்சின் இசையமைப்பாலர் ஜோன் பிரியனால் கோர்க்கப்பட்டது. இதரப் பாடல்கள் ஜெஃப் லைன்னேவின் E.L.O போன்றவற்றிலிருந்து தோன்றியதாகும்.("மிஸ்டர் ப்ளூ ஸ்கை" விளம்பரத் துண்டுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் இடம்பெற்றது ஆனால் படத்தில் இல்லை), தி போலிபோனிஃக் ஸ்பிரீ, தி வில்லோஸ், மற்றும் டான் நெல்சன் ஆகியோரிடமிருந்து பெறப்பட்டது. ஜோன் பிரியனின் கூட்டணியுடன் பெக் கோர்க்கியின் பிரபல வடிவமான "எவ்ரிபடி காட் டு லேர்ன் சம்டைம்"மை வழங்குகிறார்.
குறிப்பாக, பல குரல் பாடல்கள் ஞாபகங்களை சுற்றியுள்ளன அல்லது சூரியனைச் சுற்றி வருகின்றன.
ஜோயலின் குடியிருப்பிற்குள் க்ளமெண்டைன் நுழையும் போது ஜோயல் க்ளமெண்டைனைப்பற்றிய ஒலிநாடாவைக் கேட்பதையும் அப்போது அவரின் குறைந்தபட்ச ஓவியத்தை வெறித்துப் பார்க்கிறார், அதற்கான அடி நாதம் அழகிய "ஓ மை டார்லிங் க்ளமெண்டைன்." அசரீரி போன்ற குரல்கள் மென்மையான இசை ஒரு இடத்தில் முடிந்து வசனம் "நீ இழக்கப்பட்டு எப்போதும் நீங்கினாய்" என்று வரும் வரையுள்ளது, இசை ஏற்பாட்டாளர் குறைந்து வரும் இசை மீட்டை அசரீரியாக இசைப்பது இருவரும் ஒருவரின் நினைவிலிருந்து மற்றொருவர் முழுதும் நீங்கி எப்போதும் நினைவற்றுப் போவது புரிந்து கொள்ளப்படுகிறது.
பழைய ஹிந்திப் படப் பாடல்கள் பின்னணியில் இசைக்கப்படுவதை கேட்கலாம். "மேரா மன் தேரா ப்யாஸா' (என் இதயம் உனக்காக ஏங்குகிறது ) கேம்ப்லர் படத்திலிருந்து (1971) முகம்மது ரஃபியால் பாடப்பட்டது, லதா மங்கேஷ்கரின் "தேரா சங் ப்யார் மேன்" மற்றும் "வாதா நா தோட்" (சத்தியத்தை மீறாதே ) லதா மங்கேஷ்கரின் குரலில் தில் துஜ்கோ தியா (என் இதயத்தை உனக்கு கொடுத்தேன் ) (க்ளமெண்டைன் ஜோயலை தனது குடியிருப்பிற்கு பானம் அருந்த அழைத்தப்போது) ஆகியன இடம் பெற்றன. அனைத்து மூன்றுப் பாடல்களும் மூல இசைத்தடத்தின் படைப்பு பெயர் பட்டியலில் உள்ளன.
படத்தின் துவக்கக் காட்சியின் இசைக் கோர்ப்புகள் தொலைக்காட்சி மற்ரும் திரைப்பட விளம்பரங்களிலும் கூட இங்கிலாந்தில் செல்பேசி நிறுவனமான வோடாஃபோனிற்காக பயன்படுத்தப்பட்டது.
படத்துடன் தொடர்புடைய இசை
[தொகு]பல இசைக்குழுக்கள் படத்தை ஒரு பாடலில் மேற்கோள் காட்டுகின்றன, அதில் பிரேக்கிங் பெஞ்சமினின் பாடலான "பர்கட் இட்", பேசைட்"மாண்டெக்"கில், OAR லவ் அண்ட் மெமரீஸ் பாடலில், பேக்சீட் குட்பை "டெக்னிகலர் ஐஸ்" பாடலில், தி ஆட்டம்ன்ஸ் "க்ளெம்" பாடலில், எபிக் ஹை "ப்ரீ ம்யூசிக் பாடலில், கிறிஸ்மஸ் ஃபுல்லர் பிராஜெக்ட் "மீட் மீ இன் மாண்டக்"கில், சிக்னல்ரன்னர்ஸ் தடமான "மீட் மீ இன் மாண்டக்"க்கில் மற்றும் சிர்கா சர்வைவ் மீண்டும் ஒருமுறை "மீட் மீ இன் மாண்டக்" எனும் தலைப்பில் அதைப்போல பல பாடல்கள் தங்களின் 2005 ஆம் ஆண்டு தொகுப்பான ஜூடுர்னா வில் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது. ராப் பாடகர் ஜே எலக்டிரானிகா ஒலித்தடத்திலிருந்த பாடல்களிலிருந்து தனது பாடலான "ஆக்ட் 1: எடெர்னல் சன்ஷைன் (தி பிளட்ஜ்)லிருந்துப் பெற்றார். ஸ்டார்ஸ்சின் யுவர் எக்ஸ்லவ்வர் இஸ் டெட்டும் படத்திற்கான குறிப்பாகும், மேலும் பாடலுக்கான வீடியோவும் படத்தினை நினைவூட்டும்படி குழுவானத பனி உறைந்த ஏரியின் மேல் இசைக்கும் என்பதாக இருக்கும் காரணத்தினால் இருக்கிறது. வியன்னா டெங் படமானது அவரது பாடலான "ரெஷஷெனல்"லை பாதித்ததாகக் கூறினார்.
ரையான் ஸ்டார்ஸ்சின் "லாஸிங் யுவர் மெமரி", சாங்க்ஸ் ஃபிரம் தி ஐ ஆஃப் அன் எலிபெண்ட் தொகுப்பிலிருந்து "ஐ வேக் இன் மாண்டக் வித் யூ நியர்" எனும் பாடலையும் உள்ளிட்டிருக்கிறது. பாடலின் சூழலில், அது படத்தை குறிக்கிறது என்பது தெளிவானது.
படத்தின் பின்னணியும் இடங்களும்
[தொகு]படமானது பெரும்பாலும் லாங் ஐலாந்தின் புறநகரான மண்டாக்கின் ராக்வில் மையம், லாங் ஐலாந்து மற்றும் நியூயார்க் நகரத்தையும் பின்னணியாகக் கொண்டுள்ளது.
படத்தின் இறுதியிலான படைப்பாளிகளின் பெயர்ப் பட்டியலில் இடம் பெறுவது ப்ரூக்ளின், மன்ஹட்டன், மாண்டாக், மவுண்ட் வெர்னான், வைன்ஸ்கோட் மற்றும் நியூயார்க்கின் யாங்க்கர்ஸ், அத்தோடு பாயோன்னெ மற்றும் வெஸ்ட் ஆரஞ்ச், நியூ ஜெர்சி ஆகியனவாகும். பேர்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ் காட்சி கொலம்பியா யுனிவெர்சிட்டி புக் ஸ்டோரில் படமாக்கப்பட்டது. க்லளமெண்டைனின் வீடு ப்ரூக்ளினின் வில்லியம்ஸ்பர்க்கில் படமாக்கப்பட்டது. 100 ஆண்டுகாலப பழைமையான சொத்து தற்போது விற்பனைக்கு உள்ளது.[16] யாங்க்கர்சின் சில காட்சிகள் ரிவர்டேல் அவன்யூ மற்றும் வேலண்டைன் சந்திலும் படமாக்கப்பட்டது. மேலும் சார்லஸ் நதிக் காட்சி நிய யார்க்கின் யார்க்டவுனின் FDR ஸ்டேட் பார்க்கில் படமாக்கப்பட்டது.
அனைத்து இரயில் காட்சிகளும் மெட்ரோ-நார்த் இரயில் ரோட் இரயிலின் உட்புறத்தில் படமாக்கப்பட்டது அத்தோடு நியூ ஹெவன் லைன், மவுண்ட் வெர்னான் கிழக்கு நிலையம் ராக்வில் மையம் நிலையத்திற்கு மாற்றாகக் கொண்டது.
வீட்டுக் காணொளி
[தொகு]எடெர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட் அமெரிக்காவில் தனித்த அனமோர்பிக் அகலத்திரை மற்றும் முழுத்திரை பதிப்புக்களில் செப்டம்பர் 28, 2004 ஆம் ஆண்டு முதல் கிடைக்கிறது. அகலத்திரை மற்றும் முழுத்திரை இரண்டின் பதிப்புக்களும் ஆங்கில டால்பி டிஜிட்டல் 5.1 சர்ரவுண்ட், ஆங்கில டிடிஎஸ் 5.1 சர்ரவுண்ட் மற்றும் பிரஞ்சு டால்பி ட்ஜிட்டல் 5.1 தடங்களைக் கொண்டுள்ளன.
அது ஒற்றைத் தகடு அகலத்திரை சேகரிப்பாளர் பதிப்பாக உலகம் முழுதும் கிடைக்கிறது. இந்த தகடில் கூடுதல் கூறுகளாக பின்வருபவையுள்ளன:[17]
- அ லுக் இன்சைட் எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்- படமெடுத்தவர்களின் மூளைக்குள் சென்று பின்னணிக் காட்சியில் படத்தைப் பார்க்க
- ஜிம் கேரி மற்றும் இயக்குநர் மைக்கேல் கோண்ட்ரியுடன் உரையாடல்- இணையற்ற வகையில் ஜிம் கேரி மற்ரும் மைக்கேல் கோண்ட்ரியின் படமாக்கல் சமயத்திலான விருப்பமான தருணங்களை பிரதிபலிப்பது
- அழகான விவரனை மைக்கேல் கோண்ட்ரி மற்றும் எழுத்தாளர் சார்லி காஃப்மானுடன்
- நீக்கப்பட்ட காட்சிகள்
- தி போலிபோனிக் ஸ்பிரீ "லைட்&டே இசை காணொளி
- லாகுனா இன்ஃபோமெர்சியல்
சிறப்பு இறுவட்டு அகலத்திரைசேகரிப்பாளர் பதிப்பு இறுவட்டு அமெரிக்காவில் 2005 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் நாள் வெளியிடப்பட்டது. கூடுதல் கூறுகளாக பின்வருபவையுள்ளன:[18]
- விருது பெற்ற திரைக்கதை புத்தகம்
- கூறுகளின் விவரிப்பு - மைக்கேல் கோண்ட்ரி மற்றும் சார்லி காஃப்மான்
- கேட் வின்ஸ்லெட் மற்றும் மைக்கேல் கோண்ட்ரியுடன் ஒரு உரையாடல்
- ஜிம் கேரி மற்றும் மைக்கேல் கோண்ட்ரியுடன் உரையாடல்
- அ லுக் இன்சைட் எடர்னல் சன்ஷைன் அஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்
- இன்சைட் தி மைண்ட் ஆஃப் மைக்கேல் கோண்ட்ரி
- நீக்கப்பட்ட/விரிவாக்கப்பட்ட காட்சிகள்
- அனாடமி ஆஃப் அ சீன் வித் ஜின் கேரி அண்ட் மைக்கேல் கோண்ட்ரி
- தி போலிபோனிக் ஸ்பிரீ "லைட்&டே இசை காணொளி
- லாகுனா இன்ஃபோமெர்சியல்
திரைப்படமானது உயர்வரை இறுவட்டு வடிவில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன் கூடுதல் சிறப்பம்சங்களாவன:[19]
- அ லுக் இன்சைட் எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லஎஸ் மைண்ட்
- அ லுக் இன்சைட் எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்- படமெடுத்தவர்களின் மூளைக்குள் சென்று பின்னணிக் காட்சியில் படத்தைப் பார்க்க
- நீக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட காட்சிகள்
- ஜிம் கேரி மற்றும் இயக்குநர் மைக்கேல் கோண்டிரியுடன் ஒரு உரையாடல்
- நடிகரும் இயக்குநரும் அவர்களின் விருப்பமான படத்தள நேரங்களை பிரதிபலிக்கின்றனர்
- கேட் வின்ஸ்லெட் மற்றும் இயக்குநர் மைக்கேல் கோண்ட்ரியுடன் ஒரு உரையாடல்
- இயக்குநர் மைக்கேல் கோண்ட்ரியின் உள் மனதினுள்
- மைக்கேல் கோண்ட்ரி மற்றும் சார்லி காஃமானின் அம்சங்கள் விமர்சனம்
- காட்சியின் ஒரு விவரக்கூறு: சரடோகா அவென்யூ
- தி போலிபோனிக் ஸ்பிரீ "லைட்&டே இசை காணொளி
- நீக்கப்பட்ட, விரிவாக்கப்பட்டக் காட்சிகள்
- லாகுனா கமெர்ஷியல்
மேற்குறிப்புகள்
[தொகு]- ↑ "Eternal Sunshine of the Spotless Mind". Slant Magazine. பார்க்கப்பட்ட நாள் 2008-10-27.
- ↑ "Eternal Sunshine of the Spotless Mind". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2007-06-02.
- ↑ "Lacuna Inc." spoof website
- ↑ "Power of the Memory Molecule". பார்க்கப்பட்ட நாள் 2008-11-23.
- ↑ Amazon.com: Eternal Sunshine of the Spotless Mind: The Shooting Script (Newmarket Shooting Script Series): Charlie Kaufman, Michel Gondry: Books
- ↑ Rotten Tomatoes, Main Page of Eternal Sunshine of the Spotless Mind reviews
- ↑ 7.0 7.1 Reviews :: Eternal Sunshine of the Spotless Mind பரணிடப்பட்டது 2013-03-26 at the வந்தவழி இயந்திரம் from Roger Ebert's website
- ↑ Ebert, Roger, 2010-01-02. Great Movies review பரணிடப்பட்டது 2013-03-26 at the வந்தவழி இயந்திரம் of Eternal Sunsine of the Spotless Mind . rogerebert.suntimes.com.
- ↑ "Eternal Sunshine of the Spotless Mind movie review - Film - Time Out London". Archived from the original on 2005-03-05. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
- ↑ Puig, Claudia, 2006. USA Today, Movie Review: Eternal Sunshine of the Spotless Mind
- ↑ Vernallis, Carol. "Music video, songs, sound: experience, technique and emotion in Eternal Sunshine of the Spotless Mind ." திரை 49.3. (2008) pp.277–97.
- ↑ "The TONY top 50 movies of the decade". Time Out New York. Nov 26–Dec 2, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-12-02.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Geier, Thom; Jensen, Jeff; Jordan, Tina; Lyons, Margaret; Markovitz, Adam; Nashawaty, Chris; Pastorek, Whitney; Rice, Lynette; Rottenberg, Josh; Schwartz, Missy; Slezak, Michael; Snierson, Dan; Stack, Tim; Stroup, Kate; Tucker, Ken; Vary, Adam B.; Vozick-Levinson, Simon; Ward, Kate (December 11, 2009), "THE 100 Greatest MOVIES, TV SHOWS, ALBUMS, BOOKS, CHARACTERS, SCENES, EPISODES, SONGS, DRESSES, MUSIC VIDEOS, AND TRENDS THAT ENTERTAINED US OVER THE PAST 10 YEARS". எண்டர்டெயின்மெண்ட் வீக்லி. (1079/1080):74-84
- ↑ "The best films of the '00s". Archived from the original on 2010-06-04. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
- ↑ "Best of the Aughts: Film". Slant Magazine. பார்க்கப்பட்ட நாள் 10 February 2010.
- ↑ "Capri Jet Realty". Archived from the original on 2010-03-30. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
- ↑ "Eternal Sunshine of the Spotless Mind". DC-DVD.net. Archived from the original on 2009-02-20. பார்க்கப்பட்ட நாள் 2008-06-13.
- ↑ "Eternal Sunshine of the Spotless Mind". DC-DVD.net. Archived from the original on 2009-02-20. பார்க்கப்பட்ட நாள் 2008-06-13.
- ↑ "Eternal Sunshine of the Spotless Mind". DC-DVD.net. Archived from the original on 2009-02-20. பார்க்கப்பட்ட நாள் 2008-06-13.