எச். ரைடர் அக்கார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச். ரைடர் அக்கார்டு
பிறப்புஹெச். ரைடர் ஹக்கார்ட்
சூன் 22, 1856(1856-06-22)
பிராடென்ஹாம், நார்ஃபோக், இங்கிலாந்து
இறப்பு14 மே 1925(1925-05-14) (அகவை 68)
லண்டன், இங்கிலாந்து
தொழில்எழுத்தாளர், அறிஞர்
தேசியம்பிரிட்டானியர்
காலம்19ம் மற்றும் 20ம் நூற்றாண்டு
வகைசாகசப் புனைவு, கனவுருப்புனைவு,
நேசப்புனைவு, அறிபுனை, வரலாற்றுப் புனைவு
கருப்பொருள்ஆப்பிரிக்கா
குறிப்பிடத்தக்க படைப்புகள்கிங் சாலமன்ஸ் மைன்ஸ், ஆலன் குவார்ட்டர்மெய்ன், ஷீ
இணையதளம்
http://www.riderhaggardsociety.org.uk

ஹெச். ரைடர் ஹக்கார்ட் அல்லது எச். ரைடர் அக்கார்டு (Henry Rider Haggard, ஜூன் 22, 1856மே 14, 1925) ஒரு ஆங்கில எழுத்தாளர். இவரது சாகசப் புனைவுக் கதைகள் உலகப் புகழ்பெற்றவை. இவர் தொலைந்த உலகுப் புனைவு இலைக்கியப் பாணியினைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகிறார். பிரிட்டானியப் பேரரசில் விவசாய சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தவும் பாடுபட்டுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கில இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஹக்கார்ட், தனது இளவயதில் பணி நிமித்தமாக ஆப்பிரிக்காவில் பல ஆண்டுகள் வாழ்ந்தார். அங்கு அவர் சந்தித்த மனிதர்களும், கேள்விப்பட்ட விஷயங்களும் அவரது மனதில் பெரும் தாக்கத்தை ஏறபடுத்தின. இங்கிலாந்து திரும்பியபின், சாகசக் கதைகளை எழுதத் தொடங்கிய ஹக்கார்ட், அவற்றை பயன்படுத்தி தனக்கென ஒரு தனிக் கதைக்களத்தை உருவாக்கினார். 1885ல் அவரது கிங் சாலமன்ஸ் மைன்ஸ் (சாலமன் அரசரின் சுரங்கங்கள்) வெளியாகி பெருவெற்றி பெற்றது. இக்கதைக்காக ஹக்கார்ட் உருவாக்கிய ஆலன் குவார்ட்டர்மெய்ன் என்ற வெள்ளை வேட்டைக்காரர் கதாப்பாத்திரம் வாசகர்களின் மனதைக் கவர்ந்தது. அதனால், ஹக்கார்ட் மேலும் பல குவார்ட்டர்மெய்ன் கதைகளை எழுதினார். ஹக்கார்ட்டின் கதைகள் பெரும்பாலும் ஆப்பிரிக்கத் தொலைந்த உலகு கதைக்களத்தைக் கொண்டிருந்தன. ஆப்பிரிக்கப் பின்னணியில் இவர் எழுதிய ஆலன் குவார்ட்டர்மெய்ன், ஷீ, ஆயீஷா போன்ற புதினங்கள் ஹக்கார்டிற்கு பெரும் புகழைத் தேடித் தந்தன. வெளியாகி நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஹக்கார்டின் படைப்புகளுக்கு வாசகர் உலகில் வரவேற்பு குறையவில்லை. பல திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், பட புதினங்கள், படக்கதைகள் ஹக்கார்டின் படைப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன். ஹக்கார்டின் படைப்புகள் ஆர்தர் கானன் டாயிலின் லாஸ்ட் வோர்ல்ட், எட்கர் ரைஸ் பர்ரோசின் டார்சான் , ராபர்ட் ஈ. ஹோவார்டின் கோனன் தி பார்பாரியன், இண்டியானா ஜோன்ஸ் ஆங்கிலத் திரைப்பட வரிசை போன்ற சாகசப்புனைவுப் படைப்புகள் உருவாக உந்துதலாக அமைந்துள்ளன.

தாக்கங்கள்[தொகு]

ஆர். எல். ஸ்டீவன்சன்

பின்பற்றுவோர்[தொகு]

எட்கர் ரைஸ் பர்ரோஸ், சி. எஸ். லூயிஸ்,
ஜே. ஆர். ஆர். டோல்கீன், ராபர்ட் ஈ. ஹோவார்ட்,
கார்ல் குஸ்டாவ் யங், ஜோசப் கொன்ராட், ஹென்ரி மில்லர்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._ரைடர்_அக்கார்டு&oldid=3459584" இருந்து மீள்விக்கப்பட்டது