எச். பாலசுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எச். பாலசுப்பிரமணியம்
பிறப்புஏப்ரல் 10, 1932(1932-04-10)
கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி, தமிழ்நாடு இந்தியா
இறப்பு2 ஏப்ரல் 2021(2021-04-02) (அகவை 88)
தில்லி, இந்தியா
பிள்ளைகள்வெங்கடேஷ்
உமா

எச். பாலசுப்பிரமணியம் (H. Balasubramaniyam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு தமிழறிஞராவார். இவர் 1932 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். இந்திய உள்துறை அமைச்சகத்தில் ஓர் அதிகாரியாகவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் இந்தி பேராசிரியராகவும், பணியாற்றியுள்ளார். மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தில் இயங்கும் இந்தி மொழி அஞ்சல் வழிக் கல்விப் பிரிவில் துணை இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். தமிழ், இந்தி மொழிகளுக்கு இணைப்புப் பாலமாக இருந்த பாலசுப்பிரமணியம் பாரதியார் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.[1][2].தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளான திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.[3] எழுத்தாளர்கள் கி.இராசநாராயணன் வைரமுத்து உள்ளிட்ட சமகால படைப்பாளிகளின் படைப்புகளையும் பாலசுப்பிரமணியம் இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.[4] தில்லி தமிழ்ச்சங்கத்தில் மூத்த உறுப்பினர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

கல்வி[தொகு]

இளங்கலைத் தமிழ், இளங்கலைச் சமசுகிருதம், முதுகலை இந்தி இலக்கியம் (1953), இந்தி சாகித்ய ரத்னா (1956), இதழியல் பட்டயப்படிப்பு (1973), பயன்பாட்டு மொழியியல் முதுநிலை பட்டயப்படிப்பு (1974) முதலானவற்றைப் பயின்ற இவர் இந்தி மற்றும் தமிழ் வாக்கிய கட்டமைப்புகளின் முரண்பாட்டு பகுப்பாய்வு குறித்து மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார் (1982). தமிழ், மலையாளம், இந்தி, சமசுகிருதம், ஆங்கிலம் எனப் பலமொழிகளில் புலமை பெற்றிருந்தார்.[5]

பதவி[தொகு]

இந்தி பிரத்யாபக், உள்துறை அமைச்சகம் (1961-68), இணை இயக்குனர், மத்திய இந்தி இயக்குநரகம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (1968-90) என மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றியவர். புதுதில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர்.

விருது[தொகு]

2002ஆம் ஆண்டு தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமியின் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[6]

1997இல் இராஷ்ட்ர பாஷா கௌரவ் விருது பாராளுமன்ற இந்திக் குழுவால் வழங்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் நாளன்று பாலசுப்பிரமணியம் பெருந்தொற்று நோயால் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. காலமானாா் முனைவா் எச். பாலசுப்பிரமணியம். பிபிசி தினமணி நாளிதழ். 4 ஏப்ரல் 2021. https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/apr/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3597017.html. 
  2. இந்தி, தமிழ் மொழி அறிஞர் பேராசிரியர் எச்.பாலசுப்பிரமணியம் காலமானார். தி இந்து தமிழ் நாளிதழ். 4 ஏப்ரல் 2021. https://www.hindutamil.in/news/india/654847-h-balasubramaniyam.html. 
  3. കുന്നമ്പത്ത്, ശ്രീലക്ഷ്മി. "ഒരു കുടുംബം, നാലുപേർ, അഞ്ചു ഭാഷ, നൂറിലേറെ പുസ്തകങ്ങൾ". Mathrubhumi (in ஆங்கிலம்). 2021-05-16 அன்று பார்க்கப்பட்டது.
  4. "மொழிபெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியன் காலமானார்". Dinamalar. 2021-04-04. 2021-05-16 அன்று பார்க்கப்பட்டது.
  5. https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/257/articles/20-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88
  6. "TAMIL – Sahitya Akademi" (in ஆங்கிலம்). 2021-05-16 அன்று பார்க்கப்பட்டது.