எச். எஸ். வெங்கடேசமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர். எச். எஸ். வெங்கடேசமூர்த்தி
பிறப்பு1944 (அகவை 78–79)
படித்த கல்வி நிறுவனங்கள்பெங்களூரு, மத்திய கல்லூரி
பணிகவிஞர், நாடக ஆசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்உத்தராயண மெட்டு; கன்னடிய சூர்யா; வைதேகி; சுனிதா பாவம்
பெற்றோர்நாராயண பட்டா, நாகரத்னம்மா
வாழ்க்கைத்
துணை
மறைந்த இராசலட்சுமி மூர்த்தி

எச். எஸ். வெங்கடேசமூர்த்தி (H. S. Venkateshamurthy) பிரபலமாக எச். எஸ். வி எனவும் கொடிகரே எஸ். வெங்கடேசமூர்த்தி எனவும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய கன்னடக் கவிஞரும், நாடக ஆசிரியருமாவார். 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 5,6 மற்றும் 7 ஆம் தேதிகளில் குல்பர்கா நகரில் நடைபெற்ற கன்னட இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்த 85 வது அகில இந்திய இலக்கியக் கூட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

எச். எஸ். வி என பிரபலமாக அறியப்படும் இவர், (பிறந்த தேதி 23.6.1944), இன்றைய கன்னட கவிஞர்கள் மற்றும் நாடக எழுத்தாளர்களிடையே ஒரு முன்னணி வெளிச்சமாகத் திகழ்கிறார். இவர் பழமைவாத பெற்றோர்களான திருமதி. நாகரத்னம்மா மற்றும் நாராயணபட்டா என்பவருக்கு தாவண்கரே மாவட்டம், சென்னகிரியின் ஹொடிகெரே என்ற தொலைதூர கிராமத்தில் பிறந்தார். பின்னர் இவர், தனது சொந்த கிராமத்தில் பள்ளிப்படிப்பைப் பெற்றார். ஹோலால்கெரேவிலும் படித்தார். பின்னர் சித்ரதுர்காவில் கல்லூரிப் பயிற்சியையும் பெற்றார். பெங்களூரு மத்திய கல்லூரியில் கன்னடத்தில் முதுகலைப் படித்தார். [2] பெங்களூரு புனித சூசையப்பர் வணிகக் கல்லூரியில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிய இவர் ஓய்வு பெற்ற பின்னர் பெங்களூரில் குடியேறினார். கன்னடடள்ளி கதனா கவனகலு பற்றிய ஆராய்ச்சிக்காக இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை[தொகு]

இவர், பின் நவீனத்துவ எழுத்தாளராக அங்கீகரிக்கப்படுகிறார். [3] இவர் பாவகீதக் கவிஞர் என்றும் நன்கு அறியப்பட்டவர். கன்னடத்தில் நன்கு அறியப்பட்ட இரண்டு இலக்கிய இயக்கங்களின் கலவையாகவும் இவர் கருதப்படுகிறார் - பின் நவீனத்துவத்திர்கு-முன் மற்றும் பின் நவீனத்துவத்திர்கு பிந்தைவர். 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, கன்னடத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]