ஹெச். எம். எஸ் (கப்பல் பெயர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எச். எம். எசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹெச். எம். எஸ் அல்லது எச். எம். எசு (ஆங்கிலம்: H. M. S) என்ற ஆங்கில குறுக்கம், ஹிஸ் அல்லது ஹெர் மெஜஸ்டீஸ் ஷிப் (ஆங்கிலம்: His or Her Majesty's Ship) என்ற ஆங்கிலத் தொடரைக் குறிக்கின்றது. இதற்கு அரசரின் (அல்லது அரசியின்) கப்பல் என்று பொருளாகும். முடியாட்சி அரசமைப்பு உள்ள நாடுகளின் கடற்படைகளின் கப்பல்களுக்கு பெயர்களின் முன்னொட்டாக இக்குறுக்கம் பயன்படுத்தபடுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு போர்க்கப்பலின் பெயர் ”சிட்னி” என்றிருந்தால் அது அதிகாரப்பூர்வமாக ”ஹெச். எம். எஸ். சிட்னி” என்றழைக்கப்படும்.

இந்த முன்னொட்டு வழக்கம் பிரிட்டன், சுவீடன் போன்ற முடியாட்சி நாடுகளில் பின்பற்றப்படுகிறது. பிரிட்டனின் முன்னாள் காலனிகளான ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் கப்பற்படைகளும் இது போன்ற ஒரு பெயரிடல் மரபைப் பின்பற்றுகின்றன. இந்நாட்டுக் கப்பல்கள் அரசர்/அரசியின் ஆஸ்திரேலிய/கனடிய/நியூசிலாந்திய கப்பல்கள் என்றழைக்கப்படுகின்றன. உலகின் பல நாடுகள் பிரித்தானிய பேரரசின் பகுதிகளாக இருந்தபோது அந்நாடுகளின் கப்பற்படைகளும் இப்பெயரிடல் மரபைப் பின்பற்றின. எடுத்துக்காட்டாக பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின் போர்க்கப்பல்கள் அரசரின் இந்தியக் கப்பல் (ஹிஸ் மெஜஸ்டீஸ் இந்தியன் ஷிப்) என்று வழங்கப்பட்டன.