எச்ச உறுப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எச்ச உறுப்புகள்[தொகு]

    இன்று உலகில் வாழும் மனிதன் பல பரிணாம வளர்ச்சி நிலைகளை தாண்டித்தான் இன்றைய நிலையை அடைந்துள்ளான். பரிணாம வளர்ச்சி நிலையில், முதுகெலும்புள்ள விலங்குகளில் மீன்கள், நீர்நில வாழ்வன, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என்ற வரிசையில், மனிதன் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறான்.

நிக்டி டேடிங் சவ்வு[தொகு]

    மனிதனிடத்தில் இருக்கும் சில உறுப்புகள் தற்போது பயன்படுவது இல்லை. உதாரணமாக கண்ணில் இருக்கும் "நிக்டி டேடிங் சவ்வு" என்ற உறுப்பு கண்களின் ஓரத்தில் சிறிய தசை திரட்சியாக இருக்கிறது. இந்த உறுப்பினால் எந்த பயனும் இல்லை. ஆனால் இதே உறுப்பு மீன்கள் நீர்நில வாழ்வன போன்ற விலங்குகளில் நீருக்குள் இருக்கும் போது நிக்டி டேடிங் சவ்வு கண்களை முழுவதுமாக மூடி பாதுகாக்கும் பணியை செய்கின்றன. நீர்நில வாழ்வன என்ற வகையை தாண்டி ஊர்வன, பறப்பன என பரிணாம வளர்ச்சி அடையும் போது நிக்டி டேடிங் சவ்வின் பணி மிகவும் குறைந்து விடுகிறது. அடுத்ததாக பாலூட்டிகள் என பரிணாம வளர்ச்சி அடைந்த போது நிக்டி டேடிங் சவ்வின் பணி தேவையில்லாமல் பயனற்ற உறுப்புகளின் வரிசையில் அமைந்துவிடுகிறது இதனையே எச்ச உறுப்புகள் என்கிறோம். எச்சம் எனும் தமிழ் சொல்லுக்கு மிச்சம், மீதம் என்ற பொருளும் உண்டு. இத்தகைய உறுப்புகள் எல்லாம் பரிணாம வளர்ச்சியின் எச்சங்களே. இத்தகைய எச்ச உறுப்புகள் மணிதனிடத்தில் ஏறத்தாழ 150 உறுப்புகள் உள்ளன. அவற்றுள் சில

உதாரணமாக[தொகு]

1.உள் நாக்கு - ஊர்வன விலங்குகளில் மிக நீலமாக இருக்கும், இந்த நாக்கை வெளியே நீட்டி இறையை பிடிக்க பயண்படுத்துகிறது. 2.குடல் வால் - ஊர்வன மற்றும் சில பாலூட்டிகளில், இந்த உறுப்பின் தொடர்ச்சியே வாலாக நீண்டு இருக்கின்றது. 3.காதுமடல் தசைகள் - பாலூட்டிகளில் பல விளங்குகளில் காதை அசைப்பதற்க்கு பயன்படுகிறது, மனித இனத்தில் எந்த பயனும் இல்லை. 4.முன் கடவாய் பற்கள் - சிறுவர், சிறுமியர் பருவத்தில் மட்டுமே பயன்பட்ட இந்த பற்கள் வளர்ந்த மனிதனுக்கு பயன்படா உறுப்பே.

 இந்த உறுப்புகள் எல்லாம் மனிதன் படிப்படியாக பல பரிணாம வளர்ச்சி நிலைகளை தாண்டிதான் இந்த நிலைக்கு வந்துள்ளான் என்பதற்க்கான ஆதாரங்களே இந்த எச்ச உறுப்புகள்.

==மேற்கோள்கள்==[1]

  1. Vermax Agarwal, Arumugam. Animal physicology, Evolution by Arumugam. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்ச_உறுப்புகள்&oldid=2377758" இருந்து மீள்விக்கப்பட்டது