உள்ளடக்கத்துக்குச் செல்

எச்சு (கிண்ணக்குழி)

ஆள்கூறுகள்: 54°18′S 174°36′E / 54.3°S 174.6°E / -54.3; 174.6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச்சு (கிண்ணக்குழி)
எச்சு பள்ள்ம்
ஆள்கூறுகள்54°18′S 174°36′E / 54.3°S 174.6°E / -54.3; 174.6
விட்டம்88 km
கிண்ணக்குழி ஆழம்தெரியவில்லை
Colongitude188° at sunrise
Eponym

எச்சு பள்ளம் (Hess Crater ) என்பது சந்திரனின் மேற்பரப்பிலுள்ள கிண்ணக்குழி வடிவிலான ஒரு விண்கல் வீழ் பள்ளமாகும். நிலவின் தெற்கு அரைக்கோளத்தில் பூமியை நோக்காத நிலவின் மறு பக்கத்தில் இப்பள்ளம் காணப்படுகிறது. எச்சு பள்ளத்தின் விளிம்பு அடுத்தடுத்த தாக்கங்களால் உண்டாக்கிய இலேசான அரிப்பு நிறைந்த வெளிச் சுவருடன் காணப்படுகிறது. எரிமலைக் குழம்பு பாய்ந்து மறுசீராக்கம் செய்யப்பட்டது போல் உள்ள இதன் தட்டையான உட்பரப்பு வேறுவித குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏதுமின்றியும் காணப்படுகிறது. இந்தத் தரைப்பகுதி அதைச்சூழ்ந்துள்ள நிலப்பகுதியைக் காட்டிலும் கருமையான நிறத்துடன் வெண் எகிர்சிதறல் பண்புடன் காணப்படுகிறது.

எச்சு பள்ளத்தின் வடகிழக்கு விளிம்பிற்கு அருகில் பாயில் பள்ளம் இணைக்கப் பட்டும் தெற்கில் அப்பே பள்ளமும் உள்ளன. இதற்கு மேற்கில் பெருஞ்சுவர் படுகை கொண்டுள்ள புவான்கரே பள்ளம் காணப்படுகிறது. எச்சு பள்ளத்தின் கிழக்கு விளிம்பில் ஆழமாக அரிக்கப்பட்ட வெளிச்சுவர் காணப்படுகிறது. எச்சு பள்ளத்தின் வடக்கு விளிம்பு செயற்கைக்கோள் பள்ளமான எச்சு இசட் மீது சிறிதளவாக அதன் மேல் இழைந்துள்ளது. சிறிய பள்ளமான எச்சு எம் அப்பே பள்ளத்தின் வடமேற்கில் உள்ள எச்சு பள்ளத்தின் தெற்குதென்மேற்கு விளிம்பில் இணைந்துள்ளது.

செயற்கைக்கோள் பள்ளங்கள்

[தொகு]

சந்திரனின் வரைபடங்கள் மீது விண்கல் வீழ் பள்ளத்தின் மையப் பகுதியில் எச்சு பள்ளத்திற்கு அருகில் புள்ளிகள் வைத்து மாநாட்டின் மூலம் இந்த அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன.

எச்சு அட்சரேகை தீர்க்கரேகை விட்டம்
எம் 55.9° தெ 173.7° கி 27 கி.மீ
டபள்யூ 52.6° தெ 171.4° கி 28 கி.மீ
இசட் 52.0° தெ 174.0° கி 73 கி.மீ

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சு_(கிண்ணக்குழி)&oldid=4071791" இலிருந்து மீள்விக்கப்பட்டது