எச்எம்எஸ் விக்டோரியா (1887)
ராயல் நேவியின் இரண்டு போர்க்கப்பல்களின் வகுப்பில் முன்னணிக் கப்பலாக எச்எம்எஸ் விக்டோரியா இருந்தது. 22 ஜூன் 1893 இல் , பயிற்சியின்போது லெபனானின் திரிபோலிக்கு அருகில் HMS கேம்பர்டவுன் கப்பலுடன் மோதியது , இதில் பிரிட்டிஷ் மத்தியதரைக் கடற்படையின் தளபதி, வைஸ் அட்மிரல் சர் ஜார்ஜ் டிரையன் உட்பட 358 பணியாளர்கள் இறந்தனர். [1] தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவர் நிர்வாக அதிகாரி ஜான் ஜெல்லிகோ, இவர் பின்னர் ஜட்லாண்ட் போரில் பிரிட்டிஷ் கிராண்ட் ஃப்ளீட்டின் தளபதியாக இருந்தார்.
வடிவமைப்பு
[தொகு]
கப்பல், வடிவமைப்பில் புதுமை மற்றும் விரைவான வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் விக்டோரியா கப்பல் கட்டப்பட்டது. இது ஆரம்பத்தில் (Renown) புகழ் என்ற பெயரில் அழைக்கப்பட்டது , ஆனால் விக்டோரியா மகாராணியின் பொன்விழா கொண்டாடத்தின் போது கட்டுமானத்தில் இருந்த இந்த கப்பல் விக்டோரியா என பெயர் மாற்றப்பட்டது, இது கப்பல் ஏவப்பட்ட ஆண்டில் நடந்தது. அதனால் இதன் வருகை கணிசமான விளம்பரத்துடன் இருந்தது. இது மிகப்பெரிய, வேகமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த இரும்புக் கவசப் போர்க்கப்பல், அதோடு கனமான துப்பாக்கிகளையும் கொண்டிருந்தது.
இது ஹம்ப்ரிஸ், டெனன்ட் மற்றும் டெப்ட்ஃபோர்டின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மூன்று விரிவாக்கபட்ட நீராவி என்ஜின்களால் இயக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் ஆகும் [2] 43 அங் (1,100 mm), 62 அங் (1,600 mm) மற்றும் 96 அங் (2,400 mm) விட்டம் கொண்ட சிலிண்டர்களைக் கொண்டிருந்தன. இதன் ஸ்ட்ரோக் 4 அடி 3 அங் (1.30 m) .சாதாரண இழுவையின் போது 7,500 ihp (5,600 kW) யும், முழு இழுவையின் போது 12,000 ihp (8,900 kW) உற்பத்தி திறனையும் கொண்டிருந்தது. இது நீராவி டர்பைன் கொண்டு டைனமோவை இயக்கிய முதல் ராயல் நேவி கப்பல்.
கப்பலின் விரிவான மாதிரி 1892 இல் ராயல் நேவி கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது, மேலும் ராயல் நேவி மற்றும் ராயல் மரைன்களின் அதிகாரிகளால் வெள்ளியில் செய்யப்பட்ட மற்றொரு மாதிரி,விக்டோரியா மகாராணிக்கு ஜூபிலி பரிசாக வழங்கப்பட்டது.
வடிவமைப்பு வரம்புகள்
[தொகு]கப்பலின் பல ஈர்க்கக்கூடிய அம்சங்கள் இருந்தபோதிலும், வடிவமைப்பில் சமரசம் செய்ததால், இதன் சேவையில் வெற்றிபெறவில்லை.
கப்பலுக்கு 'தி ஸ்லிப்பர் ' என்று செல்லப்பெயரும் இருந்தது. ஏனெனில், காலணிகளை போன்ற தோற்றம் கொண்ட முன்புறம் தாழ்வான தளமும் , பின்புறம் உயர்ந்த மேல்கட்டுமானமும் அமைந்திருந்ததால் இப்படி அழைக்கப்பட்டது.
முன்னோக்கி தளத்தில் நீளமான இரண்டு BL 16.25 அங் (413 mm) மார்க் I துப்பாக்கிகள் பொருத்தபட்டிருந்தன.ஏனெனில், இதேபோன்ற பெரிய துப்பாக்கிகள் வெளிநாட்டு கப்பல்களில் பயன்படுத்தப்பட்டதாலும் , கடற்படையின் சிபாரிசான 13.5 அங் (340 mm) துப்பாக்கியில் உள்ள வடிவமைப்பு குறைபாடுகளாலும் 16.25 அங் (413 mm) துப்பாக்கி தேர்ந்தெடுக்கப்பட்டது. இரண்டு துப்பாக்கிகளுடன் கூடிய முன்னோக்கி பகுதியின் அதிக எடை காரணமாக, கப்பலின் நிலைத்தன்மை குலைந்துவிடாமல் இருக்க, அதைத் தாழ்வாக பொறுத்த வேண்டியிருந்தது, இதன் பின்புறத்தை பாதுகாப்பதற்கு பெரிய துப்பாக்கியை பொருத்துவதற்கு பதிலாகதுப்பாக்கி கவசத்தால் பாதுகாக்கப்பட்ட பிஎல் 10 அங் (250 mm) துப்பாக்கி பொருத்தபட்டிருந்தன. இதன் அசல் திட்டம் , இரும்புக் கவசப் போர்க்கப்பலான Conqueror போலவே முன்னும் பின்னுமாக பிரதான ஆயுதங்களுக்கான பகுதியாக அமைக்கபட்டிருந்தது , இதனால், கப்பல் தனது முக்கிய ஆயுதங்களை பக்கவாட்டாக அல்லது முன்னோக்கி மட்டுமே சுட முடியும். துப்பாக்கிகள் முன்னோக்கிச் சுடப்படும்போது ஏற்படும் பின்னோக்கிய தாக்கம் தளத்தை வளைப்பது கண்டறியப்பட்டது.

துப்பாக்கியின் குழாய்கள் மிக கனமாக இருந்ததால் அவை பொருத்தப்பட்ட இடம் வளைந்து காணப்பட்டது, அதனால் இவைகள் உடையாமல் இருப்பதற்காக முறைக்கு 75 சுற்றுகள் மட்டுமே சுடபட்டன.
அதன் முக்கிய கவசம், மொத்தம் 340 அடி (100 m) நீளம் 16–18 அங் (41–46 cm) தில் இருந்தது , சுமார் 162 அடி (49 m) வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டது.
இதனோடு ஒப்பிடுகையில், இதே நேரத்தில் கட்டப்பட்ட பிரஞ்சு போர்க்கப்பலான அமிரல் பாடின் 21.5 அங் (55 cm) கவசத்தை கொண்டிருந்தது. இருப்பினும், பிரிட்டிஷ் வடிவமைப்பு அதிக தூரம் மற்றும் பெரிய துப்பாக்கிகளுடன் கூடிய வேகமான கப்பளாக இதை உருவாக்கியது.
கேப்டன்கள் மற்றும் கடற்படைத் தளபதிகள்
[தொகு]விக்டோரியா முதன்முதலில் மார்ச் 1890 இல் கேப்டன் ஜேஇ ஸ்டோக்ஸால் நியமிக்கப்பட்டார், அவர் கப்பலை மத்தியதரைக் கடலுக்கு எடுத்துச் சென்றார். இந்த குழுவினர் பின்னர் கேம்பர்டவுன் குழுவினருடன் தங்கள் கப்பல்களை மாற்றிக்கொண்டனர், இதனால் கேப்டன் ஜேசி பர்னெல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பின்னர் இந்தக் கப்பல் வைஸ் அட்மிரல் சர் அந்தோனி ஹோஸ்கின்ஸ் தலைமையிலான மத்திய தரைக்கடல் படைப்பிரிவின் முதன்மையான கொடிக்கப்பலாக இருந்தது. 1891 ஆம் ஆண்டில், சர் ஜார்ஜ் ட்ரையன் கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார் மேலும் கேப்டன் மாரிஸ் போர்க் விக்டோரியாவில் புதிய கொடி கேப்டனாக ஆனார்.
1892 தரை தட்டுதல்
[தொகு]
29 ஜனவரி 1892 அன்று, விக்டோரியா கிரேக்கக் கடற்கரையில் உள்ள பிளாட்டியாவுக்கு அருகில் உள்ள ஸ்னைப் பாயிண்ட் என்ற இடத்தில் தரைதட்டியது. டார்பிடோக்கள் மற்றும் சுரங்கங்கள் கொண்ட பயிற்சிகளுக்கான தளமாக பிரிட்டிஷ் கப்பல்கள் பயன்படுத்துவதற்கு வசதியான நட்பு துறைமுகமாக பிளாட்டியா தேர்ந்தெடுக்கப்பட்டது, மேலும் மத்தியதரைக் கடற்படையின் ஒவ்வொரு கப்பலும் குளிர்காலத்தில் அங்கு செல்லும். உண்மையான போர் நிலைமைகளில் வேகமாக நகரும் கப்பல்களில் இருந்து டார்பிடோக்கள் ஏவப்படும், ஆனால் பயிற்சிக்காக ஆழமற்ற நீரில் இவை விடப்படும், இதன் மூலம் டார்பிடோக்களை மீட்டெடுக்க முடியும் (அவற்றின் மோட்டார்கள் நிறுத்தப்பட்டவுடன் அவை மிதக்கும், ஆனால் சில நேரங்களில் மூழ்கும்). ஆழமற்ற நீரில் தனது கப்பலை இயக்குவதில் உள்ள சாத்தியமான சிரமங்களை கேப்டன் போர்க் உணர்ந்திருந்தார் , மேலும் 60 அடி (18 மீ) ஆழத்திற்கு நீர் நிரம்பி இருந்த இடத்தில் ஒரு மிதவையை கடலோரத்தில் அமைக்க ஒரு குழுவினருக்கு உத்தரவிட்டார். ஆனால் குழுவினர் மிகவும் ஆழமற்ற இடத்தைத் தவறவிட்டனர், மேலும் விக்டோரியா 9 கி.மீ (10 மைல்; 17 கி.மீ/மணி) வேகத்தில் பாறை ஆழமற்ற இடங்களில் தரையிறங்கி வேகமாக சிக்கிக் கொண்டது. கப்பலின் முன் முனை, வழக்கத்தை விட 7 அடி (2.1 மீ) உயரத்தில் இருந்தது, ஏனெனில் விசை அதை ஆழமற்ற பகுதிக்கு கொண்டு சென்றது. இதனால் கப்பலின் அடிப்பகுதி சேதமடைந்தது, மேலும் மூன்று பெட்டிகள் நீரில் மூழ்கின.இருப்பினும், கப்பல் பின்பகுதி இன்னும் 66 அடி (20 மீ) ஆழத்தில் இருந்தது. அட்மிரல் ட்ரையனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வியப்பில் சம்பவ இடத்திற்கு புறப்பட்டார், மேலும் பம்பிங் உபகரணங்கள் மற்றும் ஹவ்ஸர்களுடன் கூடிய டாக்யார்டு டக் சாம்ப்சனையும் ஆர்டர் செய்தார். டார்பிடோ-டிப்போ கப்பலான ஹெக்லா ஏற்கனவே பிளாட்டியாவில் இருந்தது, விக்டோரியாவை மீட்க இரண்டு முறை முயற்சி மேற்கொண்டது. அவையும் தோல்வியடைந்தன, ஆனால் மேலும் உதவி வரும் வரை கப்பலின் பின்புறத்தை நிலையாக வைத்திருக்க நங்கூரங்கள் பயன்படுத்தப்பட்டன Phaeton, Edinburgh, Dreadnought, Scout மற்றும் Humber ஆகிய கப்பல்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
விக்டோரியா கப்பலின் பாரம் 1,253 long tons (1,273 t) அகற்றப்பட்டது, அதோடு 475 long tons (483 t) நிலக்கரி அகற்றப்பட்டது . தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்துவதன் மூலமும், ஓட்டைகளை அடைக்க மரம் மற்றும் போர்ட்லேண்ட் சிமெண்டைப் பயன்படுத்துவதன் மூலமும் கசிவுகள் சரிசெய்யப்பட்டன. Dreadnought மற்றும் Edinburgh கப்பல்கள் ஒவ்வொன்றும் விக்டோரியா கப்பலை கயிறுகளால் பின்பக்கமாக இழுத்தன, .அதே சமயத்தில் , விக்டோரியா கப்பலின் இன்ஜின்களும் இயக்கப்பட்டன , இவையனைத்தும் கப்பலை நகர்த்துவதற்கு இது போதுமானதாக இருந்தது, பிப்ரவரி 4 அன்று மாலையில் கப்பல் மீண்டும் மிதந்தது.

கப்பல் பழுதுபார்ப்பதற்காக மால்டாவில் உள்ள புதிய ஹாமில்டன் கப்பல்துறைக்குச் சென்றது, அதைப் பயன்படுத்திய முதல் கப்பல் இதுவாகும். 70 அடி (21 மீ) தூரத்திற்கு மேலடுக்கு முலாம் அடுக்கு கிழிந்தது, சில தட்டுகள் 'S' வடிவங்களில் மடிக்கப்பட்டிருந்தன, இருப்பினும் லேசான எஃகு விரிசல் ஏற்படுவதற்குப் பதிலாக வளைந்திருந்தது.மே மாதத்தில் கோடைகால கடற்படை பயணத்திற்காக பழுதுபார்ப்புகள் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டன.[1]
மூழ்குதல்
[தொகு]ஜூன் 22, 1893 இல், கிழக்கு மத்தியதரைக் கடலில் மத்திய தரைக்கடல் கடற்படையின் வருடாந்திர பயிற்சிகளுக்கு விக்டோரியா கப்பல் தலைமை தாங்கியது. முதல் பிரிவை விக்டோரியா கப்பல் தலைமை தாங்கியது , அதே சமயத்தில் 1 கிமீ இடைவெளியில் HMS Camperdown இரண்டாவது பிரிவை தலைமை தாங்கியது,அதில் ஐந்து கப்பல்கள் இருந்தன. அட்மிரல் ட்ரையன் பயிற்சி அணிவகுப்பிற்கு உத்தரவிட்டார், இதன்படி ஒவ்வொரு கப்பலும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து எதிர் திசையில் வேகமெடுக்கும் வகையில் திருப்பவேண்டும். எதிர் திசையில் நீராவி வருவதைப் பார்க்க வேண்டும். [3] இருப்பினும், கப்பல்களின் இடைவெளி வெறும் 1 கிமீ ஆகவும் குறைந்தபட்ச திருப்புவட்டம் 1.5 கிமீ ஆகவும் மதிப்பிடப்பட்டது[4] முதலில் திரும்பிய கப்பலான விக்டோரியா, திரும்பும்போது கேம்பர்டவுன் கப்பலின் கவச முன்பகுதி மோதியது, இதனால் கப்பலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. விக்டோரியா இறுதியில் சுமார் 15 நிமிடங்களில் மூழ்கியது, அட்மிரல் ட்ரையன் உட்பட 358 குழுவினர் இறந்தனர்.
சிதைவு தளம்
[தொகு]பத்து ஆண்டுகள் நீடித்த தேடுதலுக்குப் பிறகு, 2004 ஆகஸ்ட் 22 அன்று 140 மீட்டர்கள் (460 அடி) கப்பலின் சிதைவுகள் பிரிட்டிஷ் மூழ்காளர் மார்க் எலியாட்டின் உதவியுடன் லெபனான்-ஆஸ்திரிய மூழ்காளர் கிறிஸ்டியன் பிரான்சிஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. கப்பல் அதன் மொத்த நீளத்தில் 30 மீட்டர் சேற்றில் புதைந்து, கப்பலின் பின்புறம் மேற்பரப்பை நோக்கி செங்குத்தாக நின்றுகொண்டிருந்தது.
ரஷ்ய மானிட்டர் Rusalka இதேபோல சிதைவடைந்த நிலையில் கண்டறியபடுவதற்கு முன்னர்வரை கப்பல் விபத்துகளில் HMS விக்டோரியா கப்பலின் சிதைவு நிலை தனித்துவமானது என அறியப்பட்டது , இந்த விபத்தின் அசாதாரண சிதைவு நிலை, பிரதான ஆயுதத்தின் எடை காரணமாக கப்பல் முன்னோக்கிச் சென்றதாலும், ப்ரொப்பல்லர்கள் கீழ்நோக்கி விசை காரணமாகவும் கப்பல் சிதைவு இப்படி காணப்படுகிறது.
References
[தொகு]- ↑ "The Mediterranean Disaster". The Times: 11. 24 June 1893. https://archive.org/details/sim_los-angeles-times_the-los-angeles-times_1893-06-24/page/10.
- ↑ Macintyre, Donald; Bathe, Basil W (1974). Man of War a History of the Combat Vessel. Mcgraw-hill Inc. p. 95. ISBN 978-0-07-044585-7.
- ↑ "The Loss of the Victoria – Admiral Markham's Despatches". The Times: 6. 3 July 1893. https://archive.org/details/sim_new-york-times_the-new-york-times_1893-07-03_42_13060/page/5.
- ↑ William Laird Clowes; Clements Robert Markham; Alfred Thayer Mahan; Herbert Wrigley Wilson; Theodore Roosevelt; Leonard George Carr Laughton. The Royal Navy, A History from the Earliest Times to the Present. Vol. VII. London: Sampson, Low, Marston and Company. pp. 415–426.
Bibliography
[தொகு]- Chesneau, Roger; Koleśnik, Eugène M.; Campbell, N.J.M. (1979). Conway's All the World's Fighting Ships 1860–1905. London: Conway Maritime Press. ISBN 0-85177-133-5.
- Bennett, Geoffrey (1968). Charlie B: A Biography of Admiral Lord Beresford of Metemmeh and Curraghmore. London: Peter Dawnay Ltd.
- Andrew Gordon, The Rules of the Game: Jutland and British Naval Command, John Murray.
- David Brown, Warrior to Dreadnought: Warship development 1860–1905, Chatham Publishing.
- Fraser, Kenneth (2020). "Warship Notes: An Unpublished Account of the Loss of HMS Victoria". In Jordan, John (ed.). Warship 2020. Oxford, UK: Osprey. pp. 192–194. ISBN 978-1-4728-4071-4.
- Richard Hough, Admirals in Collision, Hamish Hamilton, London. Copyright 1959.
- Parkes, Oscar (1990). British Battleships. Annapolis, Maryland: Naval Institute Press. ISBN 1-55750-075-4.
- Louis Decimus Rubin, The Summer the Archduke Died: Essays on Wars and Warriors, University of Missouri Press, [2008], பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8262-1810-5
- Rear-Admiral C. C. Penrose Fitzgerald, Life of Vice-Admiral Sir George Tryon K.C.B., William Blackwood and sons, Edinburgh and London, 1897
- The Times, The Loss of HMS Victoria, 2 November 1893, page 4, issue 34098, column A. (Admiralty minutes describing the sinking)
- Minutes of Proceedings at a Court-Martial held on board her Majesty's ship Hibernia at Malta, on Monday, the seventeenth day of July 1893; and by adjournment, every day thereafter (Sunday excepted) to the Twenty-seventh day of July 1893, to enquire into the loss of her Majesty's ship Victoria, Her Majesty's Stationery Office, printed by Darling & son Ltd, 1893.
- Thursfield, James R. (1894). "Chapter XI: The Loss of H.M.S. Victoria". In Brassey, T. A. (ed.). The Naval Annual, 1894. Portsmouth, UK: J. Griffin and Co. pp. 164–178.