எசு. பார்த்தசாரதி ஐயங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசு. பார்த்தசாரதி ஐயங்கார் (S. Parthasarathy Aiyangar) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வைணவ அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் குண்டலம் சிறீரங்கப்பட்டினம் கிருட்டிணமாச்சாரியாருக்கும் வேதம்மாவுக்கும் மகனாக 1840 ஆம் ஆண்டு பிறந்தார். 1859 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் தொகுதி மாணவர்களில் ஒருவராக இருந்தார். 1862 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

விசிசுடாத்வைதம் பற்றிய படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து அவற்றை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த சரசுவதி பண்டாரம் குழுவின் செயலாளராகவும் எசு.பார்த்தசாரதி நியமிக்கப்பட்டார். விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்கான பணிகளிலும் இவர் ஈடுபட்டார். [1]

சிறீ வேதா வேதாந்த வர்த்தினியின் நிறுவன உறுப்பினர்களில் பார்த்தசாரதியும் ஒருவர். [2] [3]

தனது கடைசி காலத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டி அங்கேயே இவர் குடியேறினார். [4]

நூலியல்[தொகு]

  • Lokacharya, Pillai; Aiyangar, Parthasarathy (1900). "Bow to the blest Ramanuja, Tattva-Traya : or aphorisms on the three verities, soul, matter and God". Sreshtalur Viraraghava Chariar, Madras. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The man who made it possible: Vivekananda's Chicago visit". 2012. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
  2. "svvv-handbook.pdf". Google Docs. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
  3. svvvchennai (2012-11-12). "srI vEdha vEdhAntha vardhinI". srivedhavedhanthavardhini (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
  4. "Yogi Parthasarathy Aiyangar". Śrī Rāmānujāchārya (1017 - present) (in ஆங்கிலம்). 2021-01-18. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.