உள்ளடக்கத்துக்குச் செல்

எசு. நர்மதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசு. நர்மதா
S. Narmada
பிறப்பு(1942-09-22)22 செப்டம்பர் 1942
பெங்களூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு30 மார்ச்சு 2007(2007-03-30) (அகவை 64)
பெங்களூர், Karnataka, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடனம், நடன ஆசிரியை
அறியப்படுவதுபரதநாட்டியம்
விருதுகள்சங்கீத நாடக அகாதமி விருது
கர்நாடக சங்கீத நிருத்ய அகாடமி விருது, ராச்யோத்சவ பிரசாசுட்டி,சாந்தலா நாட்டிய சிறீ விருது

எசு. நர்மதா (S. Narmada) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பரதநாட்டிய நிபுணர் மற்றும் ஆசிரியர் ஆவார். குரு நர்மதா என்று பிரபலமாக அறியப்படுகிறார். சங்கீத நாடக அகாடமி விருது, கர்நாடக சங்கீத நிருத்ய அகாடமி விருது, ராச்யோத்சவ பிரசாசுட்டி விருது மற்றும் சாந்தலா நாட்டிய சிறீ விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

எசு. நர்மதா 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். வி.எசு.கௌசிக்கிடம் நடனத்தில் அடிப்படைப் பயிற்சி பெற்றார்.[1] கே.பி. கிட்டப்பா பிள்ளையின் முக்கிய சீடரான இவர், தஞ்சாவூர் பரதநாட்டியத்தை இருபதாண்டுகளுக்கும் மேலாக அவரது பயிற்சியின் கீழ் பயிற்சி செய்தார்.[2]

பரதநாட்டியத்தின் சிறந்த ஆசிரியையான நர்மதா, தனது தாயாரின் நினைவாக 1978-ஆம் ஆண்டு பெங்களூரில் சகுந்தலா நடனப் பள்ளியைத் தொடங்கி, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல நடனக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.[1]லட்சுமி கோபாலசாமி, மஞ்சு பார்கவி, சத்தியநாராயண் ராசு, நிருபமா ராசேந்திரா, மாலதி ஐயங்கார், பிரவீன் மற்றும் அனுராதா விக்ராந்த் ஆகியோர் இவரது சீடர்களில் அடங்குவர்.

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • சங்கீத நாடக அகாடமி விருது 2006 [2]
  • கர்நாடக சங்கீத நிருத்ய அகாடமி விருது 1998 [2]
  • ராச்யோத்சவ பிரசசுட்டி 1996 [2]
  • சென்னை மியூசிக் அகாடமியின் சிறந்த ஆசிரியர் விருது 1992 [2]
  • கர்நாடக அரசின் சாந்தலா நாட்டியசிறீ விருது 2001 [3]
  • கர்நாடக கலாச்சார சங்கம், விருது கலிபோர்னியா [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Profiles - Guru Narmada is no more". narthaki.com.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "S.Narmada" (PDF). Sangeet Natak Akademi.
  3. "Karnataka Government". www.karnataka.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._நர்மதா&oldid=3760331" இலிருந்து மீள்விக்கப்பட்டது