எசு. ஏ. இராசமன்னார்
தோற்றம்
எசு. ஏ. இராசமன்னார் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | எம். பி. வடிவேல் |
| பின்னவர் | எம். அப்துல் லத்தீப் |
| தொகுதி | வாணியம்பாடி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 19 மே 1919 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | ஆலை நிறுவனர் |
எசு. ஏ. இராசமன்னார் (Rajamannar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேட்டைப் பகுதியினைச் சேர்ந்தவர். வாணியம்பாடி இசுலாமிய உயர்நிலைப் பள்ளியிலும், இசுலாமியக் கல்லூரியிலும், பெங்களூர் புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எசு. ஏ. இராசமன்னார் | 26,946 | 50.77% | +10.41 | |
| திமுக | வடிவேல் | 25,308 | 47.69% | -7.18 | |
| சுயேச்சை | முனுசாமி கவுண்டர் | 819 | 1.54% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,638 | 3.09% | -11.41% | ||
| பதிவான வாக்குகள் | 53,073 | 75.70% | 6.29% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 72,746 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -4.09% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 188.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.