எசு. இராமச்சந்திர ரெட்டி
எசு. இராமச்சந்திர ரெட்டி | |
|---|---|
| உறுப்பினர்-நாடாளுமன்றம் | |
| பதவியில் 1996–1998 | |
| முன்னையவர் | எசு. கங்காதர் |
| பின்னவர் | எசு. கங்காதர் |
| தொகுதி | இந்துப்பூர் |
| சட்டமன்ற உறுப்பினர்-ஆந்திரப்பிரதேசம் | |
| பதவியில் 1983–1989 | |
| முன்னையவர் | சோமந்தேபள்ளி நாராயண ரெட்டி |
| பின்னவர் | சானே சென்னா ரெட்டி |
| தொகுதி | பென்னுகொண்டா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | பெனுகொண்டா, அனந்தபூர் |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| துணைவர் | எசு. காயத்ரம்மா |
| பிள்ளைகள் | 5 |
| பணி | அரசியல்வாதி |
எசு. இராமச்சந்திர ரெட்டி (S. Ramachandra Reddy)(செப்டம்பர் 6) என்பர் ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தின் பெனுகொண்டா சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் குருபா சாதியைச் சேர்ந்தவர்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]1983ஆம் ஆண்டில், இவர் பெனுகோண்டா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு கங்குலா நாராயண ரெட்டியினைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2] பின்னர் 1985-இல் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு காங்கிரசு கட்சியின் ஜி. வீரண்ணாவினைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[3] இந்த முறை இவர் என். டி. ராமராவின் அரசாங்கத்தில் அமைச்சரானார். இவர் தொழில்துறை மற்றும் துறைமுகங்களுக்கான அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[4] ஆனால் 1989 தேர்தலில் எசு. சென்னா ரெட்டி தோல்வியடைந்தார்.[5] 1996ஆம் ஆண்டில் இவர் இந்துபூர் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கங்காதரை 172,422 வாக்குகள் பெரும்பான்மையுடன் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[6] 1998ஆம் ஆண்டில் இவர் எசு. கங்காதரால் தோற்கடிக்கப்பட்டார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The die is cast(e) in Penukonda". The New Indian Express. https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2009/apr/04/the-die-is-caste-in-penukonda-38380.html.
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 1983". Elections.in.
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 1985". Elections.in.
- ↑ "lsap13". Indiapress.org.
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 1989". Elections.in.
- ↑ "1996 India General (11th Lok Sabha) Elections Results". Elections.in.
- ↑ "1998 India General (12th Lok Sabha) Elections Results". Elections.in.