எசுத்தர் எசுபோசிதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுத்தர் எசுபோசிதோ
பிறப்பு26 சனவரி 2000 (2000-01-26) (அகவை 23)
மத்ரித், எசுப்பானியா
பணிநடிகை
வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2013–இன்று வரை
உயரம்1.66 m (5 அடி 5+12 அங்) [1]

எசுத்தர் எசுபோசிதோ (ஆங்கில மொழி: Ester Expósito) (பிறப்பு: 26 சனவரி 2000) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகை மற்றும் வடிவழகி ஆவார்.[2] இவர் நெற்ஃபிளிக்சில் ஒளிபரப்பப்பட்ட எசுப்பானியா நாடகத் தொடரான எலைட் என்ற தொடரில் 'கார்லா' என்ற வேடத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.[3][4]

வாழ்க்கை மற்றும் நடிப்புத்துறை[தொகு]

எசுத்தர் 26 சனவரி 2000 ஆம் ஆண்டில் மத்ரித்தில் பிறந்தார். இவர் தனது சிறு வயதிலிருந்தே கலை உலகில் ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் தனது பள்ளிப் படிப்பை முடித்ததும் நடிப்பு சார்ந்த கல்லூரி படிப்புகளை படித்தார். இவர் 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகை என்ற பிரிவில் மத்ரித் தியேட்டர் விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[5][6]

இவர் 2016 ஆம் ஆண்டு 'லாக்டு அப்' என்ற தொடர் மூலம் நடிப்புத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து எஸ்டாய் விவோ (2017), எலைட் (2018-2020)[7] போன்ற தொடர்களிலும் மற்றும் யுவர் சன் (2018) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுத்தர்_எசுபோசிதோ&oldid=3545597" இருந்து மீள்விக்கப்பட்டது