எசுடுஎசுஎசு ஜோ815+4729

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசுடிஎசெசு ஜோ81554.26+472947.5, (SDSS J081554.26+472947.5), பெரும்பாலும் அதன் பகுதி ஆயத்தொலைவுகளான ஜோ815+4729 என்று சுருக்கப்படுகிறது, இது புலி விண்மீன் குழுவில் உள்ள மிகக் குறைந்த பொன்மத்(உலோகத்)தன்மையைக் கொண்ட ஒரு விண்மீனாகும் . இது ஒப்பீட்டளவில் அதிகக் கரிமச் செறிவையும் கொண்டுள்ளது. [1] விண்மீனின் மேற்பரப்பு வெப்பநிலை 6,215 கெ. இது சூரியனில் இருந்து 7,500 ஒளி ஆண்டுகள் (2.3 கிலோபுடைநொடிகள் ) தொலைவில் உள்ளது மேலும் நம் பால்வழி மையத்தில் இருந்து 33,000 ஒளி ஆண்டுகள் (10 கிலோபடைநொடிகள்) தொலைவில் உள்ளது. [1] அதன் [ இரும்பு/நீரக] விகிதம் முதலில் -5.8 டெக்சுக்குக் கீழே இருப்பதாக நம்பப்பட்டது, இது இதுவ்வரை கண்டறியப்பட்ட குறைந்த உலோகத்தன்மை விண்மீனாக மாற்றப்பட்டது. , [1] ஆனால் 2020 இல் -5.49 டெக்சு என திருத்தப்பட்டது

ஜோ815+4729 கரிம/ இரும்பு விகிதம், [C/Fe] குறைந்தது 5.0 டெக்சு ஆகும். [1] இந்த விண்மீன் காலகத்தாலும் உயிரகத்தாலும் பெரிதும் செறிவூட்டப்பட்டுள்ளது, இது ஒற்றை சுழிய-உலோக சூப்பர்நோவாவால் மாசுபடுத்தப்பட்ட தொல்பழங்கால வளிம முகிலிலிருந்து உருவாகிறது. இரும்பு உள்ளிட்ட அடர்தனிமங்களின் பற்றாக்குறை, இவை பெரும்பாலும் சரிந்து விழும் மீவிண்மீன் வெடிப்பு எச்சங்கள் வழியாக விளக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Aguado, David S; Hernández, Jonay I. González; Prieto, Carlos Allende; Rebolo, Rafael (2018). "J0815+4729: A Chemically Primitive Dwarf Star in the Galactic Halo Observed with Gran Telescopio Canarias". The Astrophysical Journal 852 (1): L20. doi:10.3847/2041-8213/aaa23a. Bibcode: 2018ApJ...852L..20A.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Aguado" defined multiple times with different content
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுடுஎசுஎசு_ஜோ815%2B4729&oldid=3845941" இலிருந்து மீள்விக்கப்பட்டது