எசார் பாந்தெர் மின்னுற்பத்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எசார் பாந்தெர் மின்னுற்பத்தி நிலையம் (Essar Bhander Power Plant) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலம், சூரத் மாவட்டத்தில் இருக்கும் அசீரா என்ற துறைமுக நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள வாயு அடிப்படையிலான அனல்மின் நிலையம் ஆகும். இம்மின்னுற்பத்தி நிறுவனம், எசார் ஆற்றல் பொதுத்துறை நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

கொள்திறன்[தொகு]

500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட இம்மின் உற்பத்தி நிலையம், அக்டோபர் 2008 முதல் செயற்படத் தொடங்கியது.[1]

மேற்கோள்கள்[தொகு]