உள்ளடக்கத்துக்குச் செல்

எங்கோ தொலைவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்கோ தொலைவில்
இயக்கம்கே. எஸ். பாலச்சந்திரன்
தயாரிப்புகனேடிய தமிழ் கலைஞர் கழகம்
திரைக்கதைகே. எஸ். பாலச்சந்திரன்
இசைதாரணி மதிவாசன்
நடிப்புஎஸ். ரி. செந்தில்நாதன்
எஸ். மதிவாசன்
துஷி ஞானப்பிரகாசம்
மேகலா
சுப்புலட்சுமி காசிநாதன்
எஸ். ஆர். காசிநாதன்
சத்தியவரதன்
சித்திரா பீலிக்ஸ்
பட்றிக் பாஸ்கரன்
சபேஷ்
ராதிகா
ஒளிப்பதிவுஎம். ஜெயக்குமார்
படத்தொகுப்புகண்ணன்
விநியோகம்பாரதி புறொடக்ஷன்ஸ்
வெளியீடு1998
நாடுகனடா
மொழிதமிழ்

எங்கோ தொலைவில் கனேடிய தமிழ் கலைஞர் கழகத்தினரால் தயாரிக்கப்பட்டு, 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த, கே. எஸ். பாலச்சந்திரனின் "எங்கோ தொலைவில்" என்ற சிறுகதை மேடைநாடகமாக்கப்பட்டு வின்னிபெக், சஸ்கட்டூன், வன்கூவர் நகரங்களிலும், ரொரன்ரோவில் உலக பண்பாட்டு மகாநாட்டிலும் மேடையேறியது. அந்த நாடகமே பின்னர் திரைப்படமாகியது.

இந்த திரைப்படத்தில் எஸ். ரீ. செந்தில்நாதன், எஸ். மதிவாசன், துஷி ஞானப்பிரகாசம், மேகலா, சுப்புலட்சுமி காசிநாதன், எஸ். ஆர். காசிநாதன் முதலானோர் நடித்தார்கள். இரட்டைப்பாதை சேகர் எழுதிய பாடலுக்கு, தாரணி மதிவாசன் இசையமைக்க, சித்திரா பீலிக்ஸ் பாடியிருந்தார். எம். ஜெயக்குமார் (கண்ணன்) படப்பிடிப்பு, படத்தொகுப்பு இரண்டினையும் செய்தார்.

குறிப்பு

[தொகு]
  • கோவிலூர் செல்வராஜன் இயற்றி, பயாஸ் - இரத்தினம் இசையமைத்து, நோர்வேயில் வசிக்கும் பொன். சுபாஸ்சந்திரன் பாடிய "சொந்த நாடு என்றாலே சொர்க்கபுரிதான்" என்ற பாடலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
  • கனடாவில் TVI நிலையத்தால் ஒளிபரப்பட்ட முதலாவது கனேடிய முழுநீளத் திரைப்படம் இதுவேயாகும்.
  • கனடாவில் வேறு மாநிலங்களிலும் திரையிடப்பட்டது.

வெளி இணைப்புக்கள்

[தொகு]

என் படைப்புக்கள்- எங்கோ தொலைவில் - வலைத்தளம்[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கோ_தொலைவில்&oldid=3235887" இலிருந்து மீள்விக்கப்பட்டது