எங்களது சவுக்கு மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எங்களது சவுக்கு மரம் (Our Casuarina Tree) என்பது தோரு தத் என்ற இந்திய கவிஞரால் 1881-ம் ஆண்டு எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு ஆகும். ஒரு நேர்த்தியான இலக்கியப் படைப்பிற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. இதில் சவுக்கு] மரத்தின் கம்பீரத்தை தான் எவ்வாறு சிறு வயதில் தன் சகோதரர்களுடன் அந்த மரத்தின் அடியில் பொழுதை கழித்தார் என்ற நினைவுகளை தோரு தத் நினைவு கொள்கிறார். நவீன இந்திய இலக்கியத்தின் சிறந்த செய்யுள்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.

கவிதைத் தொகுப்பு[தொகு]

இதில் தோரு தத் சவுக்கு மரத்தினைப்பற்றி அழகுற விவரிக்கிறார். மரத்தின் மீது படர்ந்துள்ள கொடியானது பெரிய பாம்பினைப் போன்று உள்ளது. மரமானது வலுவாக உள்ளது. சவுக்கு மரத்தில் சிவப்பு நிறமுடைய மலர்கள் கூட்டமாக உள்ளன. மலர்கள் ஒருபோர்வையைப் போல் மரத்தினை மூடியுள்ளன. இரவு நேரத்தில் தோட்டத்தில் நைட்டிங்கேல் பறவையின் சத்தம் ஒலிக்கிறது. குளிர்காலத்தில் யூன் என்ற குரங்கு வகைகள் சவுக்கு மரத்தின் உச்சியில் அமர்ந்து பார்க்கின்றன. மரத்தின் நிழல் பெரிய நீர்த்தொட்டியில் விழுகிறது. தோரு தத் மற்றும் அவரது உடன் பிறந்தோரும் மரத்தின் அடியில் பல மகிழ்ச்சியான தருணங்களை கடந்த்தை நினைவுகூருகிறார். கவிஞர் சவுக்கு மரத்தின் பரிசுத்தத்தை நினைவுகூருகிறார். வேர்ட்ஸ் வொர்தின் மரம் பற்றிய கவிதையினை சவுக்கு மர கவிதையோடு ஒப்பிடுகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்களது_சவுக்கு_மரம்&oldid=3457659" இலிருந்து மீள்விக்கப்பட்டது