உள்ளடக்கத்துக்குச் செல்

எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா
19ஆவது இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
19 சூன் 1989 – 17 திசம்பர் 1989
பரிந்துரைப்புநீதிபதி குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தியத் தலைமை நீதிபதி இ. சு. பதக்
நியமிப்புஇந்தியக் குடியரசுத் தலைவர் ரா. வெங்கட்ராமன்
முன்னையவர்இ. சு. பதக்
பின்னவர்சபையாசாசி முகர்ஜி
தலைமை நீதிபது, பம்பாய் உயர் நீதிமன்றம்
முன்னையவர்பிரகாசு சந்திர தாதியா
டீ. என். பாட்டீல் (பொறுப்பு)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-12-18)18 திசம்பர் 1924
இறப்பு24 செப்டம்பர் 1997(1997-09-24) (அகவை 72)

எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா (Engalaguppe Seetharamiah Venkataramiah)(18 திசம்பர் 1924 - 24 செப்டம்பர் 1997 [1]) என்பவர்இந்தியாவின் 19வது தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இவர் 19 சூன் 1989 முதல் 17 திசம்பர் 1989 அன்று ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.

இவர் 1946-ல் தனது வழக்கறிஞர் பணியினைத் தொடங்கினார். நவம்பர் 1970-ல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மார்ச் 1979-ல், இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சூன் 1989-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியானார். கர்நாடகாவிலிருந்து இந்தியாவின் தலைமை நீதிபதி ஆன முதல் நபர் இவர்தான். இவர் 24 செப்டம்பர் 1997 அன்று மாரடைப்பால் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Obituary Events in 1997". Archived from the original on 2003-12-31. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.