எக்சு கதிர் படத்தாள் பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எக்சு கதிர் படத்தாள் பெட்டி (Casset) என்பது கதிர்படத் துறையில் பயன்படும் ஒரு முக்கிய எளிய கருவியாகும். பல அளவு படத்தாள்களுக்கும் ஏற்ப பல அளவுகளில் இப்பெட்டிகள் உள்ளன. பெட்டியின் அடிப்பகுதி மெல்லிய காரீயத் தகட்டால் ஆனது. இது எக்சு-கதிர்களைக் கடத்தாது. மேல்பகுதி நெகிழியால் ஆனது. இது எளிதில் எக்சு கதிர்களைக் கடத்தும். பெட்டியினுள் இருபக்கமும் மென்மையான நுரைபொருளாலான (Foam) அட்டைகள் ஒட்டப்பட்டுள்ளன. இவைகளின் மீது, பக்கத்திற்கு ஒன்றாக இரு வலுஊட்டும் திரைகள் (Intensifying screen) வைக்கப்பட்டுள்ளன. படத்தாளைப் பெட்டியினுள் வைத்து மூடினால், வலுஊட்டும் திரைகள் படத்தாளினைச் சீராக முழுதும் அழுத்தி வைக்கின்றன. இந்த பெட்டி நோயாளியின் மேசையின் கீழ் வைத்து நிலைபெறச் செய்ய முடியும்.

படத்தாளினை இப்பெட்டியில் வைத்தே கதிர்வீச்சு கதிர்படம் எடுக்கப்படுகிறது. இப்பெட்டி சதாரண ஒளிக் கசிவின்றி உள்ளது.