எக்சுவீடியோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எக்சுவீடியோசு
XVideos logo.svg
உரலிwww.xvideos.com
வணிக நோக்கம்ஆம்
தளத்தின் வகைஆபாச வீடியோ பகிர்தல்
உரிமையாளர்டபில்யூ ஜி சீ இசட் ஹோல்டிங்[1][2]
வெளியீடுமார்ச்சு 1, 2007; 13 ஆண்டுகள் முன்னர் (2007-03-01)
அலெக்சா நிலைRed Arrow Down.svg 43 (உலகளவில்)[3]
தற்போதைய நிலைவலைதளம்


எக்சுவீடியோசு (Xvideos) என்பது உலகின் மிகப்பெரிய ஆபாச வீடியோ பகிர்வு மற்றும் பார்க்கும் வலைத்தளங்களில் ஒன்றாகும். இது டபில்யூ ஜி சீ இசட் ஹோல்டிங் என்னும் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.[1][4] அக்டோபர் 24, 2018 ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி, உலகிலேயே அதிகளவில் பார்க்கப்பட்ட பிரபலமான வலைத்தளத்தில், இது 29 ஆவது இடத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

எக்சுவீடியோசு ஆபாச ஊடக வலைதளமாகும். இது வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை அணுகும் வலைத்தள வகையாகும். இதில் வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இந்த வலைதளத்தில் கணக்கு ஒன்று இருந்தால் மட்டுமே முடியும். 2012இல் இவ்வலைதளத்தை, உலகலவில் மாதத்திற்கு 4.4 பில்லியன் பேரால் பார்க்கப்பட்டது.

இந்தியாவில் தடை[தொகு]

இந்தியாவில் இந்த வலைதளத்தை அக்டோபர் 2018 அன்று, ஜியோ நிறுவனம் தடை செய்துள்ளது. அதாவது ஜியோ தொலைத்தொடர்பை பயன்படுத்தும் எவராலும், இந்த வலைதளத்தை பார்வையிட முடியாது.[5] இந்த மாதிரியான வலைத்தளத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது.

தடை செய்யப்பட்ட நாடுகள்[தொகு]

மலேசியா[தொகு]

2015 ஆம் ஆண்டில், மலேசிய அரசாங்கம் தொலைத்தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தை மீறியதற்காக, இவ்வலைதளத்தை தடை செய்தது. இச்சட்டமானது டிஜிட்டல் முறையில் விநியோகிக்கப்படும் "ஆபாச உள்ளடக்கத்தை" தடை செய்கிறது.[6]

பிலிப்பீன்சு[தொகு]

சனவரி 14, 2017 அன்று, பிலிப்பீன்சு சனாதிபதியான ரொட்ரிகோ துதெர்த்தெ என்பவர் இவ்வலைதளத்தை, குடியரசு சட்டம் 9775 அல்லது ஆபாசத்திற்கு எதிரான குழந்தைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சுவீடியோசு&oldid=2958093" இருந்து மீள்விக்கப்பட்டது