எக்சுனோரா இண்டர்நேசனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எக்சுனோரா இண்டர்நேசனல் (Exnora International) என்பது ஒரு அரசு சாரா சுற்றுச்சூழல் சேவை அமைப்பாகும். இந்த அமைப்பு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்த்ன் தலைநகரம் சென்னையில் 1989 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட்து. எம்.பி.நிர்மல் என்ற சமூக ஆர்வலர் இதைத் தொடங்கினார். இயற்கையை காத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை தடுத்தல் ஆகிய செயல்பாடுகளில் இவ்வமைப்பு முக்கியக் கவனம் செலுத்துகிறது [1][2][3].

எக்சுனோரா என்ற பெயர் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அப்பிரச்சினைகளை உருவாக்குபவர்களாலேயே தீர்த்தல் என்ற கருத்தை மையமாகக் கொண்டு excellent, novel மற்றும் radical என்ற ஆங்கிலச் சொற்களின் முதல் இரண்டு எழுத்துகளையும் சேர்த்து எக்சுனோரா என்ற பெயர் உருவாக்கப்பட்டது [3].

அமைவிடம்[தொகு]

தற்போது கோயம்பேட்டில் தலைமையாமாகக் கொண்டு இயங்கி வருகிறது

நோக்கம்'[தொகு]

உலகளாவிய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு உள்ளுரில் செயல்படுதல்

இயக்கத்தின் பணி[தொகு]

தெருக்களை தூய்மையாக்குதல் திட்டத்தின் பகுதியாக 17,000 தெரு அமைப்புகள் மூலம் சென்னை நகரின் 40% மற்றும் புறநகர்ப்பகுதிகளில் 75% மற்றும் தமிழ்நாட்டின் வேறு சில பகுதிகளில் தெருக்களின் துப்புரவு சேவைகளை இவ்வமைப்பு வழங்குகிறது. தெருக்கள் சுத்தம் செய்தல் என்ற செயல்பாட்டிற்குள் வீடுகளில் குப்பை சேகரிப்பு, வகைப் பிரித்தல், மக்கும் குப்பைகளை உரமாக்குதல், மறு சுழற்சி செய்தல் போன்ற பணிகளும் அடங்கும். கிடைக்கும் வருவாயில் தெருக்களை அழகுபடுத்துதல் பணி மேற்கொள்ளுதல் திட்டத்தின் சிறப்பம்சமாகும். இவை தவிர கழிவுநீர் சுத்திகரிப்பு, நீர் வழங்கல் பிரச்சினைகள் மற்றும் தெரு விளக்குகளுக்கு பழுது நீக்குதல் உட்பட்ட குடிமைச் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளுடன் ஒத்துழைப்பை நாடி அவற்றை களையவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது [4].

சிறப்பு[தொகு]

மாநகர காவல் ஆணையருடன் இணைந்து ஒரு லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகளை நட தொடங்கி வைத்தார்கள்மேலும் பசுமையே நாட்டின் வளமை என்பதை மூச்சாக வாழ்பவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Community Participation for Clean Surroundings - EXNORA India". யுனெசுகோ. பார்த்த நாள் 2009-08-06.
  2. "Exnora award for Bhilai Steel Plant chief". தி இந்து. 22 January 2008. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Exnora-award-for-Bhilai-Steel-Plant-chief/article15148676.ece. பார்த்த நாள்: 14 January 2019. 
  3. 3.0 3.1 "ExNoRa International (EI)". The World Bank Group. பார்த்த நாள் 2009-08-06.
  4. Ghosh, Archana; Friedrich-Ebert-Stiftung (2003). Urban environment management : local government and community action. Institute of Social Sciences. Concept Publications. பக். 52–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8069-040-2. இணையக் கணினி நூலக மையம்:260087843.