உள்ளடக்கத்துக்குச் செல்

எக்சா அம்மீன்பிளாட்டினம்(IV) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்சா அம்மீன்பிளாட்டினம்(IV) குளோரைடு (Hexaammineplatinum(IV) chloride) என்பது Cl4H18N6Pt என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். உலோக அம்மீன் ஒருங்கிணைவுச் சேர்மமான [Pt(NH3)6]4+ சேர்மத்தின் குளோரைடு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. பிளாட்டினம்(II) அயனியுடன் இணைக்கப்பட்ட ஆறு அம்மோனியா (ஒருங்கிணைப்பு வேதியியலில் அம்மீன்கள் என அழைக்கப்படுகிறது) ஈந்தணைவிகளால் நேர்மின் அயனி உருவாகிறது. இது வெள்ளை நிறம் கொண்டு நீரில் கரையக்கூடிய திடப்பொருளாகக் காணப்படுகிறது.

அமைப்பு

[தொகு]

பிளாட்டினம்(IV) ஒருங்கிணைவுச் சேர்மங்களில் குறிப்பாக எக்சா அம்மீன்பிளாட்டினம்(IV) குளோரைடு காந்தவியல் மற்றும் இயக்கவியல் செயலற்று உள்ளது. எ.கா. வலுவான அமிலங்களால் இது பாதிக்கப்படாது. நேர்மின் அயனி 18-எலக்ட்ரான் விதிக்குக் கீழ்ப்படிகிறது.

தயாரிப்பு

[தொகு]

மெத்திலமீன் ஒருங்கிணைவுச் சேர்மமான [Pt(NH2CH3)4Cl2]Cl2 சேர்மத்தை அமோனியாவுடன் சேர்த்து சூடுபடுத்துவன் மூலம் எக்சா அம்மீன்பிளாட்டினம்(IV) குளோரைடு தயாரிக்கலாம்[1]

[Pt(NH3)6]4+ ஒருங்கிணைவுச் சேர்மம் நான்கு நேர்மின்னயனி ஒருங்கிணைவுச் சேர்மத்திற்கு ஓர் அரிய உதாரணமாகும். இதனுடைய இணை காரங்களாக [Pt(NH3)5NH2]3+ மற்றும் [Pt(NH3)4(NH2)2]2+ ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன. ref>B. Klein, L. Heck (1975). "Deprotonierung von Komplexliganden. I. Amidoamminkomplexe des Platin(IV)". Zeitschrift für anorganische Chemie 416 (3): 269–284. doi:10.1002/zaac.19754160311. </ref>

மேற்கோள்கள்

[தொகு]
  1. L. N. Essen (1974). "Hexaammineplatinum(IV) Chloride". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. 15. p. 93. doi:10.1002/9780470132463.ch21. ISBN 9780470132463.

வெளி இணைப்புகள்

[தொகு]