எக்சாமெதிலீன்டைஅமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எக்சாமெதிலீன்டைஅமீன்[1][2]
Skeletal formula of hexamethylenediamine
Ball and stick model of hexamethylenediamine
Spacefill model of hexamethylenediamine
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சேன்-1,6-டைஅமீன்[3]
வேறு பெயர்கள்
 • 1,6-டைஅமினோஎச்சேன்
 • 1,6-எக்சாடைஅமீன்
இனங்காட்டிகள்
124-09-4 Yes check.svgY
Beilstein Reference
1098307
ChEBI CHEBI:39618 N
ChEMBL ChEMBL303004 N
ChemSpider 13835579 N
DrugBank DB03260 N
EC number 204-679-6
Gmelin Reference
2578
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த 1,6-diaminohexane
பப்கெம் 16402
வே.ந.வி.ப எண் MO1180000
UN number 2280
பண்புகள்
C6H16N2
வாய்ப்பாட்டு எடை 116.21 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி 0.84 கி/மிலி
உருகுநிலை
கொதிநிலை 204.6 °C; 400.2 °F; 477.7 K
490 கி லி−1
மட. P 0.386
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−205 கிலோயூல்மோல்−1
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word DANGER
H302, H312, H314, H335
P261, P280, P305+351+338, P310
தீப்பற்றும் வெப்பநிலை 80 °C (176 °F; 353 K)
வெடிபொருள் வரம்புகள் 0.7–6.3%
Lethal dose or concentration (LD, LC):
 • 750 மிகி கிகி−1 (வாய்வழி, எலி)
 • 1.11 கி கிகி−1 (உட்தோல்வழி, முயல்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

எக்சாமெதிலீன்டைஅமீன் (Hexamethylenediamine) H2N(CH2)6NH2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இந்த மூலக்கூறானது அமீன் வேதிவினைக் குழுக்களைக் கொண்டு முடியப்பெற்ற எக்சாமெதிலீன் ஐதரோகார்பன் சங்கிலியைக் கொண்டுள்ள டைஅமீன் ஆகும். இது நிறமற்ற திண்மமாகும். சில வணிகரீதியிலான மாதிரிகள் மஞ்சள் நிறத்தைக் கொண்டிருக்கலாம். இது கடுமையான அமீன் நாற்றத்தைக் கொண்டு, விந்தினை ஒத்ததாக இருக்கிறது. ஆண்டொன்றுக்கு நுாறு கோடி கிலோகிராம் அளவுக்கு இச்சேர்மம் உற்பத்தி செய்யப்படுகிறது.[4]

தொகுப்பு முறை தயாரிப்பு[தொகு]

எக்சாமெதிலீன்டைஅமீன் முதன் முதலில் தியோடர் கர்டியசு என்பவரால் கண்டறியப்பட்டது. [5] இது அடிப்போநைட்ரைலின் ஐதரசனேற்றத்தால் தயாரிக்கப்படுகிறது.

NC(CH2)4CN + 4 H2 → H2N(CH2)6NH2

இந்த ஐதரசனேற்றமானது, அம்மோனியாவால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட உருகிய அடிப்போநைட்ரைலைக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது.[சான்று தேவை] இவ்வினைக்கான வினைவேக மாற்றிகள் கோபால்ட்டு மற்றும் இரும்பினை அடிப்படையாகக் கொண்டவையாகும். விளைபொருள் நல்ல அளவில் கிடைக்கப் பெறுகிறது. ஆனால் வணிகரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிடத்தக்க இணை விளைபொருட்கள், பகுதியளவு ஐதரசனேற்றம் செய்யப்பட்ட வினையிடைப்பொருட்களின் வினைத்திறனைப் பொறுத்து கிடைக்கப் பெறுகின்றன. 1,2 -டைஅமினோவளையஎக்சேன், எக்சாமெதிலீன்இமின் மற்றும் டிரைஅமீன் பிஸ் (எக்சாமெதிலீன்டிரைஅமீன்) ஆகியவையும் இந்த இணை விளைபொருட்களுள் உள்ளடங்கும்.

மற்றொரு மாற்று செயல்முறையில், இரானே நிக்கல் வினைவேக மாற்றியாகவும் எக்சாமெதிலீன்டைஅமீனையேக் கரைப்பானாகக் கொண்டு நீர்த்துப் போகச் செய்யப்பட்ட அடிப்போநைட்ரைலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் செயல்முறையானது அம்மோனியா இல்லாமலும், குறைவான அழுத்தம் மற்றும் வெப்பநிலையிலும் நிகழ்கிறது.

பயன்பாடுகள்[தொகு]

பலபடிகளின் உற்பத்தியில், ஏறத்தாழ தனிப்பட்ட முறையில் எக்சாமெதிலீன்டைஅமீன் பெருமளவு பயன்படுகிறது. இதன் இரண்டு வினைசெயல் தொகுதிகளைக் (அல்லது வேதிவினைக்குழு) கொண்ட அமைப்பு இதற்கு நன்மை செய்யும் விதத்தில் உள்ளது. அடிபிக் அமிலத்துடனான குறுக்க வினை வழியாக, நுகர்வு செய்யப்படும் பெரும்பான்மையான டைஅமீன்களானவை, நைலான் 66 உற்பத்திக்கே செலவிடப்படுகிறது. இல்லாவிடில், இந்த டைஅமீனிலிருந்து பாலியூரித்தேன் தயாரிப்பின்போது, ஒற்றை மூலக்கூறு நுழைநிலை மூலமாக, எக்சாமெதிலீன் டைஐசோசயனேட்டானது உற்பத்தியாகிறது. டைஅமீனானது, இப்பாக்சி பிசின்களில் குறுக்குப் பிணைப்பு ஏற்படுத்தும் காரணியாகவும் பயன்படுகிறது.

பாதுகாப்பு[தொகு]

எக்சாமெதிலீன்டைஅமீனானது மிதமான நச்சுத்தன்மை உடையதாகும். இதன் LD50 மதிப்பானது 792-1127 மிகி/கிகி ஆக உள்ளது. மற்ற கார அமீன்களைப் போலவே இது தீவிரமான காயங்களையும் கடுமையான எரிச்சலையும் உண்டாக்க வல்லவை. இத்தகைய காயங்கள் பிரித்தானிய நாட்டில், பில்லிங்காம் அருகில், சீல் சாண்ட்ஸ் எனும் இடத்தில்ப பி.எ.எசு.எப் இல் 2007 ஆம் ஆண்டு சனவரி 4 ஆம் நாள் அன்று ஏற்பட்ட விபத்தின் விளைவாக உண்டானது உலகத்தால் அறியப்பட்டதாகும். இந்த நிகழ்வில் 37 நபர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டார். [6][7]

நிலைத்தன்மை[தொகு]

எக்சாமெதிலீன்டைஅமீன்னாது காற்றில் நிலைத்தன்மை வாய்ந்ததாகும். ஆனால், தீப்பற்றக்கூடியதும் ஆகும். வலிமையான ஆக்சிசனேற்றிகளுடன் இது ஒத்துப்போக இயலாத ஒரு சேர்மமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Merck Index, 11th Edition, 4614.
 2. MSDS
 3. "1,6-diaminohexane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information (26 March 2005). பார்த்த நாள் 29 May 2012.
 4. Robert A. Smiley "Hexamethylenediamine" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:629 10.1002/14356007.a12 629
 5. Curtius, Theodor and Clemm, Hans (1900) "Synthese des 1,3-Diaminopropans und 1,6-Diaminohexans aus Glutarsäure resp.
 6. BBC News
 7. BBC News