எக்சாமெதிலீன்டெட்ரமீன்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,3,5,7-டெட்ராசாட்ரிவளைய[3.3.1.13,7]டெக்கேன்
| |||
வேறு பெயர்கள்
எக்சமீன்; மெத்தனமீன்;
யூரோட்ரோபின்; 1,3,5,7- டெட்ராஅசாடாமன்டேன், பார்மின், அமினோபார்ம் | |||
இனங்காட்டிகள் | |||
100-97-0 ![]() | |||
ChEBI | CHEBI:6824 ![]() | ||
ChEMBL | ChEMBL1201270 ![]() | ||
ChemSpider | 3959 ![]() | ||
EC number | 202-905-8 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | D00393 ![]() | ||
ம.பா.த | மெத்தமீன் | ||
பப்கெம் | 4101 | ||
SMILES
| |||
UNII | J50OIX95QV ![]() | ||
பண்புகள் | |||
C6H12N4 | |||
வாய்ப்பாட்டு எடை | 140.186 கி/மோல் | ||
தோற்றம் | வெண்ணிறப் படிகத்திண்மம் | ||
அடர்த்தி | 1.33 கி/செமீ3 (20 °செல்சியசில்) | ||
உருகுநிலை | 280 °C (536 °F; 553 K) (பதங்கமாதல்பதங்கம்) | ||
85.3 கி/100 மிலி | |||
காடித்தன்மை எண் (pKa) | 4.89[1] | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எளிதில் தீப்பற்றக்கூடியது, தீங்கு விளைவிக்கக்கூடியது | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 250 °C (482 °F; 523 K) | ||
Autoignition
temperature |
410 °C (770 °F; 683 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
எக்சாமெத்திலீன்டெட்ரமீன் (Hexamethylenetetramine) அல்லது மீத்தேனமீன் (methenamine) ஒரு கரிம பல்வளையச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு (CH2)6N4. வெண்மையான இந்த படிகச் சேர்மம் நீர் மற்றும் முனைவுத்தன்மை கொண்ட கரிமக் கரைப்பான்களில் கரையும் தன்மை கொண்டது ஆகும். இது அடமண்டேன் என்ற சேர்மத்தைப் போன்று கூண்டைப் போன்ற வடிவம் கொண்டது. இந்த சேர்மம் வேறு பல சேர்மங்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க பயன்படுகிறது. உதாரணமாக, நெகிழிகள், மருந்துப் பொருட்கள், இரப்பர் சேர்க்கைப் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது. இது வெற்றிடத்தில் 280° செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாகிறது.
தொகுப்பு, அமைப்பு, வினைதிறன்[தொகு]
இந்த சேர்மமானது அலெக்சாண்டர் புட்லெரோவ் என்பவரால் 1859 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.[2][3][3][4]
எக்சாமெதிலீன்டெட்ரமீனானது தொழில் முறையில் பார்மால்டிஹைடு மற்றும் அம்மோனியா இவற்றின் சேர்க்கையால் தயாரிக்கப்படுகிறது.[5] 6CH2O + 4NH3 → (CH2)4 N4 + 6H2O
இந்த வினையானது கரைசலில் வாயு நிலையில் நடைபெறுகிறது. இந்த மூலக்கூறானது ஒரு ஒழுங்கமை நான்முகி வடிவ அடமண்டேன் சேர்மத்தின் வடிவத்தைப் போல் கூண்டையொத்த அமைப்பைப் பெற்றுள்ளது. இந்த அமைப்பின் முனைகளானது நைட்சன் அணுக்களாலும், விளிம்புகள் மெத்திலீன் பாலங்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. மூலக்கூறானது கூண்டு வடிவத்தைப் பெற்றிருந்த போதும் உட்புறத்தில் வேறு அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை இணைப்பதற்கான வெற்றிடம் ஏதும் இந்த அமைப்பில் இல்லை. இந்த மூலக்கூறானது புரோட்டான் ஏற்றம் மற்றும் N-அல்கைலேற்றம் ஆகிய வினைகளில் ஈடுபட்டு ஒரு கார அமீனைப் போலச் செயல்படுகிறது.
பயன்பாடுகள்[தொகு]
எக்சாமெதிலீன்டெட்ரமீனின் மாவு போன்ற அல்லது திரவ பீனாலிக் பிசின்கள் மற்றும் பீனாலிக் வார்ப்புரு சேர்மங்கள் தயாரிப்பில் பெருமளவு பயன்படுகிறது. இந்த சேர்மங்களில் எக்சாமெதிலீன்டெட்ரமீனானது கடினப்படுத்துவதற்கான காரணியாக சேர்க்கப்படுகிறது. வாகனங்களின் தடைப்பட்டை, உரசிணைப்பி பட்டை, உராய்வுப் பொருட்கள், நெய்யப்படாத துணிகள் ஆகியவற்றைத் வார்ப்பிடுதல் முறை மூலம் தயாரிக்கப் பயன்படுகிறது.[5]
எக்சாமெதிலீன்டெட்ரமீனானது தானாகவே ஒழுங்கமைக்கபட்ட மூலக்கூறு படிகங்களுக்கு மூலக்கூறை கட்டமைக்கும் காரணியாக முன்மொழியப்பட்டது.[6][7]
மருத்துவத்துறை பயன்கள்[தொகு]
மேண்டேலிக் அமிலத்தின் உப்பினைப் போல (மீதேனமின் மேண்டலேட்டு, USP[8]) இதுவும் சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்றுகைளத் தடுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. அமிலத்தன்மைக்கான pH மதிப்புள்ள திரவங்களில் இது சிதைவைடந்து பார்மால்டிகைடு மற்றும் அம்மோனியாவைத் தருகிறது. இவ்வாறு வெளிவரும் அம்மோனியாவானது பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. மேண்டலிக் அமிலம் இந்த விளைவிற்குத் துணை செய்கிறது. வைட்டமின் - சி (அஸ்கார்பிக் அமிலம்) அல்லது அம்மோனியம் குளோரைடு ஆகிவற்றை இணைத்துக் கொடுப்பதன் மூலமாக சிறுநீரின் அமிலத்தன்மையானது வகை மாதிரிக்குப் பொருத்தமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த மருந்தானது அளவுக்கு மிகுதியாக பயன்படுத்தப்படும் நேர்வுகளில் வேதிப்பொருட்களால் தூண்டப்பட்ட இரத்த இழப்புடன் கூடிய சிறுநீரக அழற்சி ஏற்படக்கூடிய கேடான விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகளினால் 1990 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் இந்த மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக குறைத்துக் கொள்ளப்பட்டது.[9]. ஆனால் இம்மருந்தின் பயன்பாடானது பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்களின் மீதான எதிருயிரி எதிர்ப்புத் தன்மையின் தாக்கத்தின் காரணமாக தற்போது மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தானது சிறுநீரகத் தொற்றுக்கான நீண்ட காலத் தடுப்பு மருந்தாகச் சிறப்பான முறையில் பயன்படுகிறது. ஏனெனில் பாக்டீரியாக்களால் பார்மால்டிகைடில் போராட முடிவதில்லை. சிறுநீரகத்தின் செயல்திறன் குறைவாக இருக்கும் நேர்வுகளில் இம்மருந்தைப் பயன்படுத்தலாகாது. மீத்தேனமீன் களிம்பு மற்றும் தெளிப்பான் வடிவத்தில் அதிகமான வியர்வை மற்றும் ஒத்த தன்மைக்கான சிகிச்சையில் பயன்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Cooney, A. P.; Crampton, M. R.; Golding, P. (1986). "The acid-base behaviour of hexamine and its N-acetyl derivatives". J. Chem. Soc., Perkin Trans. 2 (6): 835. doi:10.1039/P29860000835.
- ↑ Butlerow, A. (1859). "Ueber einige Derivate des Jodmethylens" (in German). Ann. Chem. Pharm. 111 (2): 242–252. doi:10.1002/jlac.18591110219. https://books.google.com/books?id=NYs8AAAAIAAJ&pg=PA242#v=onepage&q&f=false.
- ↑ 3.0 3.1 http://library.istu.edu/hoe/books/ruschem.pdf
- ↑ Butlerow, A. (1860). "Ueber ein neues Methylenderivat" (in German). Ann. Chem. Pharm. 115 (3): 322–327. doi:10.1002/jlac.18601150325. https://books.google.com/books?id=14lKAAAAYAAJ&pg=PA322#v=onepage&q&f=false.
- ↑ 5.0 5.1 "Amines, Aliphatic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2000). Wiley-VCH Verlag GmbH. DOI:10.1002/14356007.a02_001. ISBN 9783527306732.
- ↑ Markle, R. C. (2000). "Molecular building blocks and development strategies for molecular nanotechnology". Nanotechnology 11: 89. doi:10.1088/0957-4484/11/2/309.
- ↑ Garcia, J. C.; Justo, J. F.; Machado, W. V. M.; Assali, L. V. C. (2009). "Functionalized adamantane: building blocks for nanostructure self-assembly". Phys. Rev. B 80: 125421. doi:10.1103/PhysRevB.80.125421.
- ↑ "Methenamine mandelate, USP". Edenbridge Pharmaceuticals. http://www.methenaminemandelate.com/.
- ↑ Ross, R. R.; Conway, G. F. (1970). "Hemorrhagic cystitis following accidental overdose of methenamine mandelate". Am. J. Dis. Child. 119 (1): 86–87. doi:10.1001/archpedi.1970.02100050088021. பப்மெட்:5410299.