உள்ளடக்கத்துக்குச் செல்

எக்சானைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்சானைட்டு (Hexanite) என்பது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதல் உலகப் போருக்கு முன்னர் செருமானியப் பேரரசின் கடற்படைக்காக உருவாக்கப்பட்ட ஒரு செருமானிய இராணுவ வெடிபொருளாகும். டி.என்.டி எனப்படும் டிரை நைட்ரோ தொலுவீன் வெடிபொருள் பற்றாக்குறை காரணமாக இது உருவாக்கப்பட்டது. டிரை நைட்ரோ தொலுவீன் வெடிபொருளை விட எக்சானைட்டு குறைந்த சக்தி வெடிபொருளாகும். [1] எக்சானைட்டு எடையால் 60% டி.என்.டி மற்றும் 40% எக்சாநைட்ரோடைபீனைலமீன் என்ற பொதுவான வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு வெடிபொருளாகும்.

பொதுவாக நீருக்கடி கடற்படை ஆயுதங்களில் எக்சானைட்டு பயன்படுத்தப்பட்டது. ஜி7ஏ மற்றும் ஜி7ஈ வரிசைத் தொடர் நீர்மூழ்கிக் குண்டுகள், [2][3] 300 கிலோகிராம் (660 பவுண்டு) அலுமினியத்தால் மூடப்பட்ட மிதவை குண்டுகள், [4] நங்கூரமிடப்பட்ட நீர்மூழ்கிப் படகிலிருந்து 200, 300 அல்லது 500 மீட்டர் தொலைவு இலக்கை தாக்கவல்ல மின்காந்த விசை காந்த நீர்மூழ்கிக் குண்டுகள் போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். [5] [6]

எக்சானைட்டு வெடிபொருள் வழக்கற்றுப் போனதாகக் கருதப்படுகிறது, எக்சானைட்டு நிரப்பப்பட்ட ஆயுதங்கள் இரண்டாம் உலகப் போரிலிருந்து வெடிக்காத வெடிபொருள் வடிவத்தில் இருக்கின்றன.

சப்பானியர்கள் எக்சானைட்டை இரண்டாம் உலகப் போரில் வெடிக்கும் கலவை வகை 97 & 98 ஆகப் பயன்படுத்தினர். [7] .

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.ibiblio.org/hyperwar/USN/rep/WDR/WDR58/WDR58-3.html#fn9
  2. http://www.navweaps.com/Weapons/WTGER_WWII.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-02. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.
  4. "Archived copy". Archived from the original on 2017-06-23. பார்க்கப்பட்ட நாள் 2008-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. http://www.navweaps.com/Weapons/WAMGER_Mines.htm
  6. "Archived copy". Archived from the original on 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 2008-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. http://www.ibiblio.org/hyperwar/USN/rep/WDR/WDR58/WDR58-3.html#cn9
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சானைட்டு&oldid=3792279" இலிருந்து மீள்விக்கப்பட்டது