எக்சாசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எக்சாசின்
Kekulé and aromatic, skeletal formulae of hexazine
Ball and stick, and spacefill models of hexazine
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
எக்சாசின்[1]
வேறு பெயர்கள்
எக்சாசாபென்சீன்
இனங்காட்டிகள்
7616-35-5 N
ChEBI CHEBI:36869 N
ChemSpider 10140271 N
Gmelin Reference
1819
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் பப்கெம் [http://pubchem.ncbi.nlm.nih.gov/compound//correct pubchem 11966278 பப்கெம் pubchem]
பண்புகள்
N6
வாய்ப்பாட்டு எடை 84.04 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

எக்சாசின் (Hexazine) என்பது N6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கருத்தியலான வேதியியல் சேர்மமாகும். நைட்ரசனின் புறவேற்றுமை வடிவமான இச்சேர்மத்தை எக்சாசாபென்சீன் என்றும் அழைக்கலாம். ஆறு நைட்ரசன் அணுக்கள் பென்சீன் கட்டமைப்பை ஒத்த ஒரு வளையமாக அமைந்து எக்சாசின் உருவாகிறது. அசாபென்சீன் ஓரினவரிசையில் இறுதி உறுப்பினராக எக்சாசின் இடம்பெறுகிறது. பென்சீன் மூலஊறிலுள்ள இடம்பெற்றிருக்கும் அனைத்து மெத்தின் குழுக்களும் இங்கு நைட்ரசன் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். பிரிடின், பிரிமிடின், பிரிடாசின், பிரசின், டிரையசின்கள், டெட்ராசின்கள் போன்ற சேர்மங்கள் அறியப்பட்டாலும் இவ்வரிசையில் உள்ள கடைசி இரண்டு உறுப்பினர்களான எக்சாசினும் பென்டாசினும் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

நிலைப்புத் தன்மை[தொகு]

அதிக நிலைப்புத்தன்மை கொண்ட பென்சீன் சேர்மத்தை போல கட்டமைப்பு ஒற்றுமை கொண்ட மூலக்கூறாக எக்சாசின் காணப்படுகிறது. இதுவரை தயாரிக்கப்படவில்லை என்றபோதிலும் பென்சீனை போலவே இதுவும் ஓர் அரோமாட்டிக் மூலக்கூறாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது. எக்சாசின் மூலக்கூறு மிகவும் நிலைப்புத்தன்மை அற்றதாக இருக்கும் என்று கணக்கீட்டு முறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. நைட்ரசன் அணுக்களில் உள்ள தனி இணை எலக்ட்ரான்களின் ஒன்றையொன்று எதிர்க்கும் மின்னியல் விலக்க விசை இதற்குக் காரணமாக இருக்கலாம், அல்லது எதிர் சிக்மா மூலக்கூற்று பிணைப்புகளுக்கு எலக்ட்ரான் கொடையளித்தல் காரணமாகவும் இருக்கலாம் [2].

இவற்றையுன் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சாசின்&oldid=3063845" இருந்து மீள்விக்கப்பட்டது