உள்ளடக்கத்துக்குச் செல்

எக்சாகந்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சாகந்தகம்
Ball and stick model of hexathiane
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
எக்சா தயேன்[1]
இனங்காட்டிகள்
13798-23-7
ChemSpider 123119 Y
InChI
  • InChI=1S/S6/c1-2-4-6-5-3-1 Y
    Key: FEXCMMPRRBSCRG-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139602
  • S1SSSSS1
பண்புகள்
S6
வாய்ப்பாட்டு எடை 192.36 g·mol−1
தோற்றம் தெளிவான ஆரஞ்சு, ஒளிபுகா படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எக்சாகந்தகம் (Hexasulfur) என்பது S6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வேதியியல் முறைப்படி இச்சேர்மம் எக்சா தயேன் என்றும் வளைய-எக்சாகந்தகம் என்றும் பெயரிடப்படுகிறது. ஆறு கந்தக அணுக்கள் ஒரு வளையம் போல கட்டமைந்து இச்சேர்மம் உருவாவதால் இதை அறுகந்தகம் என்றும் அழைக்கலாம். ஓர் எளிய வளையசல்பேனாகவும் மற்றும் கந்தகத்தின் ஒரு புறவேற்றுமை வடிவம் என்றும் இது கருதப்படுகிறது. தயேன் பல்லினவரிசைச் சேர்மங்களில் இதுவே கடைசி உறுப்பினர் ஆகும். ஏனெனில் இதில் ஒவ்வொரு கார்பனும் கந்தக அணுவால் பதிலீடு செய்யப்பட்டுள்ளது.

பெயரிடுதல்[தொகு]

ஐயுபிஏசி முறையிலும், சேர்மம் உருவாதலுக்குக் காரணமான பகுதிக்கூறுகள் அடிப்படையிலும் இச்சேர்மத்திற்கு எக்சாகந்தகம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. பதிலீட்டு முறை வேதிப்பெயரான எக்சா தயேன் என்ற பெயரையும் ஐயுபிஏசி பரிந்துரைக்கிறது. கூட்டுசேர் பொருள் அடிப்படையிலான பெயரான வளைய- எக்சா கந்தகம் என்ற பெயரும் இதற்கு பொருந்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "S6 - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சாகந்தகம்&oldid=2660380" இலிருந்து மீள்விக்கப்பட்டது