எக்குவட்டோரியல் கினி
எக்குவட்டோரியல் கினி குடியரசு Republic of Equatorial Guinea எக்குவட்டோரியல் கினி | |
|---|---|
| குறிக்கோள்: Unidad, Paz, Justicia "ஒற்றுமை, அமைதி, நீதி" | |
| நாட்டுப்பண்: | |
| தலைநகரம் | சியூதாத் டி லா பாசு 1°35′20″N 10°49′21″E / 1.58889°N 10.82250°E |
| பெரிய நகர் | பாட்டா, மலாபோ |
| ஆட்சி மொழி(கள்) | |
| பிராந்திய மொழிகள் | பட்டியல்
|
| இனக் குழுகள் (2020[3]) |
|
| சமயம் (2020)[4] |
|
| மக்கள் | எக்குவட்டோகினியன் |
| அரசாங்கம் | பரம்பரை சர்வாதிகார அரசின்கீழ் ஒற்றையாட்சி சனாதிபதிக் குடியரசு[5][6][7] |
• அரசுத்தலைவர் | தியோடோரோ ஒபியாங்கு உங்குவேமா உம்பாசோகோ |
| சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மேலவை |
• கீழவை | பிரதிநிதிகள் சபை |
| விடுதலை | |
• அறிவிப்பு | 12 அக்டோபர் 1968 |
• 1979 இராணுவப் புரட்சி | 3 ஆகத்து 1979 |
| பரப்பு | |
• மொத்தம் | 28,050 km2 (10,830 sq mi) (141-ஆவது) |
• நீர் (%) | negligible |
| மக்கள் தொகை | |
• 2025 மதிப்பீடு | 1,795,834 [8] (154-ஆவது) |
• அடர்த்தி | 67/km2 (173.5/sq mi) (147-ஆவது) |
| மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2025 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| மொ.உ.உ. (பெயரளவு) | 2025 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| மமேசு (2023) | மத்திமம் · 133-ஆவது |
| நாணயம் | நடு ஆப்பிரிக்க பிராங்கு (XAF) |
| நேர வலயம் | ஒ.அ.நே+1 (மே. ஆ.நே) |
| அழைப்புக்குறி | +240 |
| இணையக் குறி | .gq |
| |
எக்குவட்டோரியல் கினி (Equatorial Guinea, எசுப்பானியம்: Guinea Ecuatorial, கினியா எக்குவட்டோரியல், [giˈnea ekwatoˈɾjal] ⓘ) என்பது நடு ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையில் உள்ள ஒரு நாடு. இதன் பரப்பளவு 28,000 சதுரகிமீ ஆகும். எசுப்பானிய கினியா என அழைக்கப்பட்ட இந்த முன்னாள் எசுப்பானியக் குடியேற்ற நாட்டின், விடுதலைக்குப் பிந்தைய பெயர், நலநடுக்கோட்டிற்கு அருகிலும், ஆப்பிரிக்க கினியாவின் பகுதியிலும் அதன் இருப்பிடத்தைக் குறிக்கிறது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டின் மக்கள் தொகை 1,795,834 ஆக இருந்தது,[8] இவர்களில் 85%-இற்கும் அதிகமானோர் நாட்டின் ஆதிக்க இனக்குழுவான பாங் மக்களைச் சேர்ந்தவர்கள். பயோக்கோவைப் பூர்வீகமாகக் கொண்ட பூபி மக்கள், மக்கள் தொகையில் தோராயமாக 6.5% இல் இரண்டாவது பெரிய குழுவாக உள்ளனர்.
எக்குவட்டோரியல் கினி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. பெருநிலப்பகுதியான ரீயோ முனி, வடக்கே கமரூன், தெற்கு, கிழக்கில் காபோன் ஆகியவற்றால் எல்லையாக உள்ளது. இது பெரும்பான்மையான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. எக்குவட்டோரியக் கினியின் மிகப்பெரிய நகரமான பாட்டா, நாட்டின் தலைநகரான சியூதாத் டி லா பாசு ஆகியவற்றின் இருப்பிடமாகும். ரீயோ முனியின் சிறிய கடல் தீவுகளில் கோரிஸ்கோ, எலோபே கிராண்டே, எலோபே சிக்கோ ஆகியவை அடங்கும். இந்தத் தீவுப் பகுதி கினி வளைகுடாவில் உள்ள பயோக்கோ (முன்னர் பெர்னாண்டோ போ) தீவுகளையும் அன்னோபோனையும் கொண்டுள்ளது. பயோக்கோ தீவு எக்குவட்டோரியல் கினியின் வடக்குப் பகுதியாகும், இது நாட்டின் முன்னாள் தலைநகரான மலாபோவின் தளமாகும். போர்த்துகீசிய மொழி பேசும் தீவு நாடான சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி பயோக்கோவிற்கும் அன்னோபோனுக்கும் இடையில் அமைந்துள்ளது.
1968 அக்டோபர் 12 அன்று எசுப்பானியாவிடமிருந்து விடுதலை பெற்றதிலிருந்து, 2026 சனவரி 2 வரை, அரசுத்தலைவரின் ஆணையால் சியூதாத் டி லா பாசு நாட்டின் புதிய தலைநகராக அறிவிக்கப்படும் வரை, மலாபோ இந்நாட்டின் தலைநகராக இருந்தது.[11] சியூதாத் டி லா பாசு ஒரு நன்கு திட்டமிடப்பட்ட தலைநகராகக் கட்டியெழுப்பப்பட்டது. இதன் கட்டுமானம் 2011 இல் தொடங்கியது.[11]
இன்றைய எக்குவட்டோரியல் கினியின் பகுதியில் குடியேறிய முதல் உறுதிப்படுத்தப்பட்ட மக்கள் பிக்மிகள் ஆவர், அதைத் தொடர்ந்து கிமு 6 ஆம் நூற்றாண்டில் பாண்டு மொழி பேசும் குழுக்களின் இடம்பெயர்வு ஏற்பட்டது. போர்த்துகீசிய ஆய்வாளர் பெர்னாண்டோ போ 1472-இல் இந்தப் பகுதியை ஆராய்ந்தார். 1778-ஆம் ஆண்டு எல் பார்டோ ஒப்பந்தத்தின் மூலம், போர்த்துகல் பேரரசு பியாஃப்ரா பெருங்குடாவில் உள்ள பகுதிகளை எசுப்பானியாவுக்குக் கையளித்தது; ஆபிரிக்காவுக்கான போட்டியின் போது புதிய பிரதேசம் எசுப்பானிய கினியாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசுத்தலைவர் பிரான்சிஸ்கோ மாகியாஸ் நுகுமாவின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் 1968-இல் விடுதலை பெற்றது. அவர் 1972-இல் தன்னை வாழ்நாள் அரசுத்தலைவராக அறிவித்தார், ஆனால் 1979-இல் அவரது மருமகன் தியோடோரோ ஒபியாங் நுகுமா உம்பாசோகோவால் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார், ஒபியாங் அன்றிலிருந்து நாட்டின் அரசுத்தலைவராக இருந்து வருகிறார். ஒபியாங்கின் ஆட்சி வெளிநாட்டுப் பார்வையாளர்களால் பரவலாக ஒரு சர்வாதிகாரமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1990களின் நடுப்பகுதியில் இருந்து, எக்குவட்டோரியல் கினி சகாரா கீழமை ஆபிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது.[12] பின்னர் இது ஆப்பிரிக்காவின் தனிநபர் பணக்கார நாடாக மாறியது;[13] இருப்பினும், செல்வம் மிகவும் சமமற்ற முறையில் விநியோகிக்கப்படுகிறது, எண்ணெய் வளத்தால் சிலரே பயனடைகிறார்கள். 2023 மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் இந்த நாடு 133-ஆவது இடத்தில் உள்ளது,[10] மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவர்களே சுத்தமான குடிநீர் வசதியைக் கொண்டுள்ளனர், 7.9% குழந்தைகள் ஐந்து வயதுக்கு முன்பே இறக்கின்றனர்.[14][15]
எக்குவட்டோரியல் கினி ஒரு முன்னாள் எசுப்பானியக் குடியேற்ற நாடாக இருந்ததால், எசுப்பானிய மொழி முக்கிய அதிகாரப்பூர்வ மொழியாகும். பிரான்சியம், (2010 நிலவரப்படி) போர்த்துகீசிய மொழியும் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டுள்ளன.[16] ஆப்பிரிக்காவில் எசுப்பானிய மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ள ஒரே இறையாண்மை கொண்ட நாடு இது மட்டுமே ஆகும்.[17] எக்குவட்டோரியல் கினியின் அரசாங்கம் சர்வாதிகார, சுல்தானியமானது[18] உலகின் மிக மோசமான மனித உரிமை பதிவுகளில் ஒன்றைக் கொண்டுள்ளது, இது "பிரீடம் ஹவுசின்" அரசியல், குடியுரிமைகள் குறித்த வருடாந்திரக் கணக்கெடுப்பில் "மோசமானவற்றில் மோசமானது" என்று தொடர்ந்து தரவரிசைப்படுத்துகிறது.[19] எல்லைகளற்ற செய்தியாளர்கள் அரசுத்தலைவர் ஒபியாங்கை அதன் பத்திரிகை சுதந்திரத்தை "வேட்டையாடுபவர்களில்" தரவரிசைப்படுத்துகிறது.[20] மனிதக் கடத்தல் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையாகும், "அமெரிக்க நபர் கடத்தல் அறிக்கை" எக்குவட்டோரியல் கினியை கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் கடத்தலுக்கான ஆதாரமாகவும் இலக்கு நாடாகவும் அடையாளம் காட்டுகிறது.[21] இந்த நாடு ஐக்கிய நாடுகள் அவை, ஆப்பிரிக்க ஒன்றியம், பிரான்கோபோனி, ஓப்பெக், போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History, language and culture in Equatorial Guinea". Archived from the original on 13 September 2021. Retrieved 13 September 2021.
- ↑ "Equatorial Guinea Adds Portuguese as the Country's Third Official Language". 14 October 2011. Archived from the original on 26 September 2022. Retrieved 26 September 2022.
- ↑ Equatorial Guineaபரணிடப்பட்டது 9 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம். Cia World Factbook.
- ↑ "Religions in Equatorial Guinea | PEW-GRF". Global Religious Futures. Archived from the original on 9 April 2022. Retrieved 19 April 2022.
- ↑ Melly, Paul (2021-05-30). "Africa's political dynasties: How presidents groom their sons for power". BBC News. Retrieved 2025-04-20.
- ↑ "Section 3. Freedom to Participate in the Political Process". Equatorial Guinea 2020 Human Rights Report (PDF). U.S. Embassy in Equatorial Guinea (Report). 2020. p. 15. Archived from the original (PDF) on 16 July 2021. Retrieved 8 August 2021.
- ↑ "Democracy Index 2020". Economist Intelligence Unit (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 3 March 2021. Retrieved 17 December 2021.
- ↑ 8.0 8.1 "Equatorial Guinea". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2026 ed.). நடுவண் ஒற்று முகமை. Retrieved 2 September 2024. (Archived 2024 edition)
- ↑ 9.0 9.1 9.2 9.3 "World Economic Outlook Database, April 2025" (in ஆங்கிலம்).
- ↑ 10.0 10.1 "Human Development Report 2025" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 6 May 2025. Archived (PDF) from the original on 6 May 2025. Retrieved 6 May 2025.
- ↑ 11.0 11.1 "Decreto Ley por el que se declara la Ciudad de la Paz, Djibloho, capital de la República de Guinea Ecuatorial". Guinea Ecuatorial (in ஸ்பானிஷ்). 2 January 2026. Retrieved 8 January 2026.
- ↑ Appel, Hannah (13 December 2019). The Licit Life of Capitalism. Duke University Press. doi:10.1515/9781478004578. ISBN 978-1-4780-0457-8. S2CID 242248625.
- ↑ GDP – per capita (PPP) – Country Comparison பரணிடப்பட்டது 10 மே 2011 at the வந்தவழி இயந்திரம். Indexmundi.com. Retrieved on 5 May 2013.
- ↑ "Mortality rate, under-5 (per 1,000 live births) | Data". data.worldbank.org. Archived from the original on 10 April 2021. Retrieved 27 March 2021.
- ↑ "Equatorial Guinea profile". BBC. 21 March 2014. Archived from the original on 21 September 2014. Retrieved 23 September 2020.
- ↑ "Guiné Equatorial oficializa português – Portugal – DN". 19 August 2011. Archived from the original on 19 August 2011. Retrieved 11 November 2020 – via web.archive.org.
- ↑ "Guinea Ecuatorial se convierte en el valedor del español en África". La Vanguardia (in ஸ்பானிஷ்). 16 March 2016. Archived from the original on 24 October 2021. Retrieved 11 November 2020.
- ↑ Comparing Political Regimes: A Thematic Introduction to Comparative Politics, Fourth Edition. University of Toronto Press. 31 December 2022. ISBN 978-1-4875-3692-3.
- ↑ Worst of the Worst 2010. The World's Most Repressive Societies. freedomhouse.org
- ↑ Equatorial Guinea – Reporters Without Borders பரணிடப்பட்டது 15 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம். En.rsf.org. Retrieved on 5 May 2013.
- ↑ "Equatorial Guinea". Trafficking in Persons Report 2020 பரணிடப்பட்டது 17 பெப்ரவரி 2021 at the வந்தவழி இயந்திரம். U.S. Department of State (16 June 2020). This source is in the public domain.
வெளி இணைப்புகள்
[தொகு]- Wikimedia Atlas of Equatorial Guinea
- Official Government of Equatorial Guinea website
- Guinea in Figures – Official Web Page of the Government of the Republic of Equatorial Guinea. பரணிடப்பட்டது 3 மே 2021 at the வந்தவழி இயந்திரம்.
- Country Profile from BBC News.
- Equatorial Guinea. த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை.
- Equatorial Guinea from UCB Libraries GovPubs (archived 7 June 2008)
- எக்குவட்டோரியல் கினி
- நடு ஆப்பிரிக்க நாடுகள்
- எசுப்பானியம் அதிகாரபூர்வ மொழியாக உள்ள நாடுகளும் ஆள்புலங்களும்
- போர்த்துக்கேயம் அதிகாரபூர்வ மொழியாக உள்ள நாடுகளும் ஆள்புலங்களும்
- பிரான்சியம் அதிகாரபூர்வ மொழியாக உள்ள நாடுகளும் ஆள்புலங்களும்
- ஆப்பிரிக்க நாடுகள்
- முன்னாள் போர்த்துக்கேயக் குடியேற்றங்கள்
- முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்கள்
- ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
- குடியரசுகள்
