எக்குவடோரில் எசுப்பானிய மீள்வெற்றிக்கு எத்தனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எக்குவடோரில் எசுப்பானிய மீள்வெற்றிக்கு எத்தனம் (attempted Spanish reconquest of Ecuador) என்பது 1846இல் எசுப்பானிய அரசியின் அன்னை மாரியா கிறிஸ்டினாவும் எக்குவடோரின் நீக்கப்பட்ட அரசுத்தலைவர் யுவான் ஒசே பிளோரெசும் திட்டமிட்ட சதியாகும். முன்னதாக எக்குவடோர் அங்கம் வகித்த குயிட்டோ அரச இராச்சியத்தை மீளவும் அமைத்து அரசியின் மகன்களில் ஒருவரை அரசராக்குவதே அவர்கள் திட்டமாக இருந்தது. தெற்கில் ஆட்சியை விரிவுபடுத்தி பெரு, பொலிவியா குடியரசுகளையும் இணைத்து எக்குவடோர், பெரு, பொலிவியா ஐக்கிய இராச்சியம் உருவாக்குவதும் இந்த திட்டத்தின் அங்கமாக இருந்தது.

பெரும்பாலான ஆவணங்கள் மாரியா கிறிஸ்டியானாவின் இரண்டாம் திருமணம் மூலம் பிறந்த அகஸ்டின் முனோசுக்கு எக்குவடோர் அரசராக முடி சூட்டும் திட்டம் இருந்ததைக் குறிப்பிட்ட போதிலும் சிலவற்றில் பிரான்சிய அரசர் முதலாம் லூயி பிலிப்பும் இத்திட்டத்தில் இணைந்து மாரியாவின் மகளை தனது மகன் திருமணம் புரிந்த நிலையில் அவர்களது வாரிசை தென்னமெரிக்க அரியாசனத்தில் அமர்த்தவிருந்ததாக குறிப்பிடுகின்றன.[1] இருப்பினும் பிரான்சிய அரசு இந்ததிட்டத்தை நிராகரித்து எக்குவடோரில் எசுப்பானிய மீள்வெற்றிக்கு ஆதரவளிக்கவில்லை.[2]

மேற்சான்றுகள்[தொகு]