எக்கிமைசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்கிமைசு
புதைப்படிவ காலம்:பிளிஸ்டோசீன் முதல் அண்மைக்காலம் வரை
மிக்சோசௌ கிரிசுரசு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ரோடெண்டியா
குடும்பம்: எக்கிமிடே
பேரினம்: எக்கிமைசு
எப் குவியர், 1809[1]
மாதிரி இனம்
மிக்சோசௌ கிரிசுரசு
சிற்றினம்

எக்கிமைசு கிரிசுரசு
எக்கிமைசு சாட்டர்னசு
எக்கிமைசு வையெரை

வேறு பெயர்கள்

எக்கினோமைசு வாக்னர், 1840[2]
லோச்சரசு இலிஜர், 1811
நெலோமைசு ஜோர்டான், 1837

எக்கிமைசு (Echimys) என்பது முள்ளெலி குடும்பமான எக்கிமிடே சார்ந்த பேரினமாகும்.[1][3] இந்த பேரினத்தின் சிற்றினங்கள் ஒட்டுமொத்தமாக மர முள்ளெலி என்று அழைக்கப்படுகின்றன.

எக்கிமைசு என்ற பேரினப் பெயரும், இதன் இணையான எக்கினோமைசு,[2] என்பது இரண்டு பண்டைக் கிரேக்க வார்த்தைகளான ἐχῖνος (ekhînos), அதாவது "முள்ளம்பன்றி" மற்றும் μῦς (mûs), அதாவது "சுண்டெலி, எலி" ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது.[4][5]

வகைப்பாடு[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது மூன்று சிற்றினங்கள் உள்ளன.

  • வெண்முக மர முள்ளெலி- எக்கிமைசு கிரிசுரசு
  • கரு மர முள்ளெலி - எக்கிமிசு சாட்டர்னசு
  • எக்கிமிசு வையெரை

காலிசுடோமிசு, மகலாடா, பட்டோனோமைசு மற்றும் பிலோமிசு ஆகிய பேரினங்களின் சிற்றினங்கள் அனைத்தும் முன்பு எக்கிமைசு பேரினத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டன.

தொகுதிப் பிறப்பு[தொகு]

எக்கிமைசு என்பது பிலோமிசுக்கும் பின்னர் மகலதாவுக்கும் சகோதர இனமாகும். இந்த வகைப்பாட்டியல் பிரிவு பாட்டனோமிசு மற்றும் டோரோமைசு வகைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. இதையொட்டி, இந்த ஐந்து பேரினங்களும் மூங்கில் எலிகளான டாக்டிலோமைசு, ஓலாலமைசு, கன்னபேடியோமிசு மற்றும் டிப்ளோமைசு மற்றும் சாண்டமார்டமிசு ஆகியவற்றைக் கொண்ட இனக்குழுக்களுடன் தொகுதிப் பிறப்பு தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Cuvier, Frédéric (1809), "Extrait des premiers Mémoires de M. F. Cuvier, sur les dents des Mammifères considérées comme caractères génériques", N. Bull. Sci. Soc. Philomath. Paris (பிரெஞ்சு), 1 (24): 393–395
  2. 2.0 2.1 Wagner, Johann Andreas (1840), "Beschreibung einiger neuer Nager, welche auf der Reise des Herrn Hofraths v. Schubert gesammelt wurden: mit Bezugnahme auf einige andere verwandte Formen", Abhandl. Math.—Physik. König. Bayer. Akad. Wiss. München (ஜெர்மன்): 191–210
  3. வார்ப்புரு:MSW3 Hystricognathi
  4. Bailly, Anatole (1981-01-01). Abrégé du dictionnaire grec français. Paris: Hachette. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2010035289. இணையக் கணினி நூலக மையம்:461974285. 
  5. Bailly, Anatole. "Greek-french dictionary online". www.tabularium.be. October 20, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  6. Fabre, Pierre-Henri; Upham, Nathan S.; Emmons, Louise H.; Justy, Fabienne; Leite, Yuri L. R.; Loss, Ana Carolina; Orlando, Ludovic; Tilak, Marie-Ka et al. (2017-03-01). "Mitogenomic Phylogeny, Diversification, and Biogeography of South American Spiny Rats". Molecular Biology and Evolution 34 (3): 613–633. doi:10.1093/molbev/msw261. பன்னாட்டுத் தர தொடர் எண்:0737-4038. பப்மெட்:28025278. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்கிமைசு&oldid=3448322" இருந்து மீள்விக்கப்பட்டது