எகிப்தில் இந்தியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்தில் இந்தியர்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கெய்ரோ · சாம்-எல்-சேக்
மொழி(கள்)
அரபு மொழி · இந்திய மொழிகள் · ஆங்கிலம்
சமயங்கள்
இந்து சமயம் · இசுலாம் · சீக்கியம் · கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வெளிநாடு வாழ் இந்தியர்கள்

எகிப்தில் இந்தியர்கள் (Indians in Egypt) ஒரு சிறிய சமுதாயமாகும். இந்திய நாட்டவர்கள் மற்றும் எகிப்தியர்கள், அத்துடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எகிப்திய குடிமக்கள் ஆவர். பெரும்பாலான இந்திய குடியிருப்பாளர்கள் முதல் நிலை வேலைகளைக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களாக உள்ளனர். இவர்கள் முக்கியமாக உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களாகவும், பொதுவாக அவர்கள் குறைந்தபட்சம் முப்பதுகளில் இருப்பவர்களாகவும் தங்கள் குடும்பங்களுடன் வசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.[1] எகிப்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது முழுக்க முழுக்க தனியார் துணை நிறுவனங்கள் அல்லது அலுவலகங்களில் சுமார் 300 இந்திய நிறுவனங்கள் தற்போது உள்ளன. விப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா, ஜிண்டால்ஸ் மற்றும் டாடாஸ் ஆகியவை எகிப்தில் முதலீடுகளைக் கொண்ட சிறந்த இந்திய நிறுவனங்களில் சில ஆகும்.[2]

2011 எகிப்திய புரட்சியின் போது, பல இந்தியர்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், நாட்டில் பரவி வரும் நெருக்கடியால் இந்தியா திரும்பினர். நெருக்கடியின் போது சில இந்திய சுற்றுலா பயணிகள் ஷர்ம்-எல்-ஷேக்கில் சிக்கிக்கொண்டனர். அமைதியின்மை தொடங்கியதிலிருந்து எந்தவொரு இந்தியனும் காயமடைந்ததாக அல்லது தாக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. அமைதியின்மை இருந்தபோதிலும், பல இந்திய நிறுவனங்கள் இயல்பான நடவடிக்கைகளைத் தொடர்கின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. "India and Egypt". www.shvoong.com. Archived from the original on 7 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 June 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. ": The Hindu Business Line - Most Indian firms in Egypt continue normal operations". Archived from the original on 2014-01-08. பார்க்கப்பட்ட நாள் 2020-12-23.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்தில்_இந்தியர்கள்&oldid=3928124" இலிருந்து மீள்விக்கப்பட்டது