எகிப்தின் முதலாம் அப்பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப்பாசு ஹெல்மி
Abbas I1.png
எகிப்து மற்றும் சூடானின் ஆட்சியாளர் Coat of arms of the Egyptian Kingdom 2.png
ஆட்சி10 நவம்பர் 1848 – 13 சூலை 1854[1][2]
முன்னிருந்தவர்இப்றாகீம் பாசா
பின்வந்தவர்எகிப்தின் சயீது
அரச குலம்முகமது அலி வம்சம்
தந்தைதுசுன் பாஷா
தாய்பம்பா காதின்
பிறப்பு1 சூலை 1812
ஜித்தா, ஹெஜாஸ்
இறப்பு13 சூலை 1854(1854-07-13) (அகவை 42)
பன்கா, எகிப்து
அடக்கம்இமாம் ஐ-ஷாஃபி கல்லறை, கெய்ரோ, எகிப்து
சமயம்இசுலாம்

எகிப்தின் முதலாம் அப்பாசு (Abbas I of Egypt) (1 சூலை 1812 – 13 சூலை 1854) [3] இவர் எகிப்து மற்றும் சூடானின் ஆளுநராக இருந்தார். இவர் அல்பேனியரான துசுன் பாஷாவின் மகனும், எகிப்தையும், சூடானையும் ஆண்டுவரும் முகம்மது அலி வம்சத்தை நிறுவியவருமான முகம்மது அலியின் பேரனுமாவார்.

ஆரம்ப ஆண்டுகள்[தொகு]

இவர், 1812 சூலை 1 அன்று ஜித்தாவில் பிறந்தார். கெய்ரோவில் வளர்க்கப்பட்டார். [4] முகம்மது அலியின் பேரன் என்பதால், தனது மாமா இப்ராகிம் பாஷாவுக்குப் பின் 1848 இல் எகிப்தையும் சூடானையும் ஆட்சி செய்தார். [5] [6]

அந்த காலகட்டத்தின் முன்னணி வரலாற்றாசிரியரான அல்-ஜபார்த்தியின் கூற்றுப்படி, முதலாம் அப்பாசு கெய்ரோவில் பிறந்தார். அப்போது இவருடைய தந்தை துசுன் பாஷா வாகாபிச இயக்கத்திற்கு எதிராக ஹெஜாஸ் போராடிக் கொண்டிருந்தார். இவரும்,ஒரு இளைஞனாக, சிரியப் போரில் தனது மாமா இப்ராகிம் பாஷாவின் கீழ் லெவண்டில் போராடினார். [7] மன நலம் குன்றியதால் முகம்மது அலி பாஷா 1848 செப்டம்பர் 1 ஆம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அவரது மகன் இப்ராகிம் பாஷா, 1848 செப்டம்பர் 1 முதல் 1848 நவம்பர் 10 ஆம் தேதி தான் இறக்கும் வரை எகிப்து மற்றும் சூடானின் ஆட்சியாளராக சிலகாலம் ஆட்சி செய்தார். இப்ராகிமின் மரணம் அப்பாசை 1848 நவம்பர் 10 முதல் 1849 ஆகத்து 2 வரை (முகம்மது அலி பாஷா இறந்த தேதி) எகிப்து மற்றும் சூடானின் அரசப்பிரதிநிதியாக்கியது. இவர் எகிப்து மற்றும் சூடானின் ஆட்சியாளராக 1854 ஜூலை 13 வரை இருந்தார். [5]

எகிப்தின் ஆட்சியாளர்[தொகு]

அப்பாஸ் பெரும்பாலும் வெறும் கவர்ச்சிகரமானவர் என்றே வர்ணிக்கப்படுகிறார். [5] இவர் பிற்போக்குத்தனமான, கோபமான மற்றும் அமைதியானவராகக் காணப்பட்டார். மேலும் இவர் தனது பெரும்பாலனா நேரத்தை அரண்மனையிலேயே கழித்தார். [3] இவர் அதிகாரத்தில் இருக்கும் வரை, அவரது தாத்தாவின் பணிகளை அது நல்லதோ அல்லது கெட்டதோ அதை இல்லாததாக்கினார். மற்றவற்றுடன் இவர் வர்த்தக ஏகபோகங்கள், மூடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளை ஒழித்தார். மேலும் பிராந்தியத்தின் இராணுவத்தின் வலிமையை 9,000 வீரர்களாகக் குறைத்தார். நைல் அணையின் கட்டுமானத்தையும் இவர் நிறுத்தி சுயஸ் கால்வாய் அமைப்பதை எதிர்த்தார். [7]

வெளிநாட்டு உறவுகள்[தொகு]

எகிப்தையும் சூடானையும் செல்வத்தை கொள்ளையடிக்கும் சாகசக்காரர்களுக்கு இவர் அணுக முடியாதவராக இருந்தார். மேலும் அனைத்து வெளிநாட்டு வணிகங்களையும் எதிர்த்தார். இருப்பினும், பிரித்தானிய அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில், அலெக்சாந்திரியாவிலிருந்து கெய்ரோவுக்கு ஒரு இருப்புப் பாதை அமைக்க அனுமதித்தார். பதிலுக்கு, உதுமானியர்களுடனான ஒரு தகராறில் ஆங்கிலேயர்கள் இவருக்கு உதவினார்கள். [3] [8]

ஐரோப்பியர்களின் எதிர்மறையான கொள்கைகளாலும், அவர்களின் செல்வாக்கு காரணமாகவும் இவருக்கு அவர்களை பிடிக்காமல் போனது. காலப்போக்கில் இவரது பெயர் மிகைப்படுத்தப்பட்டு, இவர் உண்மையில் இருந்ததை விட மோசமானவராக சித்தரிக்கப்பட்டார். [9] இவர் இறந்த பிறகு எகிப்தில் 1850 இல் 3,000 லிருந்த ஐரோப்பியர்கள் எண்ணிக்கை 1882இல் 90,000 ஆகவும், 1900 வாக்கில் 200,000 ஆகவும் உயர்ந்தது.

கிரிமியப் போர்[தொகு]

கிரிமியப் போரின்போது இவர் துருக்கி சுல்தானுக்கு தனது 12 போர்க்கப்பல்களும், 19,000 துருப்புக்களும், 72 துப்பாக்கிகளையும் கொண்ட தனது கடற்படைக் கப்பலைப் பயன்படுத்த அனுமதித்தார். பின்னர் துருப்புக்களின் எண்ணிக்கை 40,000 ஆக உயர்த்தப்பட்டது. [8]

குதிரை இனப்பெருக்கம்[தொகு]

அப்பாஸின் தனிப்பட்ட விருப்பத்தில்அரேபிய குதிரைகளின் இனப்பெருக்கம் இருந்தது. இது இவரது வாழ்க்கையின் மிகுந்த ஆர்வம் எனக் என்று கூறப்பட்டது. முகம்மது அலி தொடங்கிய இனப்பெருக்கம் திட்டத்தை இவர் தொடர்ந்தார். [10] இவரது வளர்ச்சியும் தரமான குதிரை இனங்களை கையகப்படுத்துவதும் நவீன குதிரை இனப்பெருக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முகம்மது அலியும், இவரும் தனித்துவமான பண்புகளை அங்கீகரித்தனர். மேலும், பெடோயின் பழங்குடியினரால் வளர்க்கப்பட்ட குதிரையினங்களின் மேல் கவனம் செலுத்தினர். 23 வயதில், இவர் தனது தாத்தாவின் குதிரை வளர்ப்பு திட்டத்தின் பொறுப்பை ஏற்றார். [11] ஆட்சியாளரானதும், இவர் கூடுதல் குதிரைகளைக் குவித்து, விலங்குகளின் வரலாறுகளையும் அவற்றின் இனங்களையும் கவனமாக ஆவணப்படுத்தினார். அவை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இறப்பு[தொகு]

13 சூலை 1854 இல், [8] இவர் தனது அரண்மனையில் தனது இரண்டு அடிமைகளால் கொலை செய்யப்பட்டார். [3] இவர் தனது ஊழியர்களிடம் காட்டிய கொடுமை கொலைக்கு ஒரு நோக்கம் என்று கூறப்பட்டது. உதாரணமாக, அரேபிய குதிரை வளர்ப்பாளரான லேடி அன்னே பிளண்ட், என்பவரின் கூற்றுப்படி குதிரையின் கால்களை சரியாக பராமரிக்காமல் போனதால் குதிரை பராமரிப்பாளரின் காலில் ஒரு சூடான குதிரை இலாடத்தை கட்டிக்கொள்ள இவர் ஒருமுறை உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது. [11]

அடிக்குறிப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Abbas I of Egypt
என்பதின் ஊடகங்கள் உள்ளன.