உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் பெரிய அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 29°59′42″N 31°07′09″E / 29.9950°N 31.1193°E / 29.9950; 31.1193
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்தின் பெரிய அருங்காட்சியகம்
Grand Egyptian Museum
Map
நிறுவப்பட்டதுஅடித்தளமிட்டது: 2002
கட்டுமானக் காலம்: 2005–2023
அலுவல்பூர்வமாக துவக்கப்பட்ட நாள்:1 நவம்பர் 2025[2]
அமைவிடம்கெய்ரோ-அலெக்சாந்திரியா பாலைவனச் சாலை, கீசா, பெருநகர கெய்ரோ, கிசா பிரமிடுகள் வளாகம் அருகில்
ஆள்கூற்று29°59′42″N 31°07′09″E / 29.9950°N 31.1193°E / 29.9950; 31.1193
வகைதொல்லியல் அருங்காட்சியகம், வரலாற்று அருங்காட்சியம்
சேகரிப்பு அளவு1 இலட்சத்திற்கு மேல்[1]
வருனர்களின் எண்ணிக்கைநாள்தோறும் 4,000 (சோதனை காலத்தில்) (2024)[3]
இயக்குனர்அகமது கோனிம்
பொது போக்குவரத்து அணுகல்கெய்ரோ மெட்ரோ, பாதை 4, பிரமிடு நிலையம்
வலைத்தளம்gem.eg

எகிப்தின் பெரிய அருங்காட்சியகம் (Grand Egyptian Museum), சுருக்கமாக:GEM), எகிப்து நாட்டின் தலைநகரான பெருநகர கெய்ரோவிற்கு அருகில் உள்ள கீசா நகரத்தில் உள்ள கிசா பிரமிடுகள் வளாகத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் (1.2 மைல்) தொலைவில் உள்ளது. இது எகிப்தின் தொல்லியல், வரலாறு மற்றும் தேசிய அருங்காட்சியமாகும். இவ்வருங்காட்சியகத்தின் காட்சிப் பொருட்கள் பண்டைய எகிப்திய நாகரிகத்தை கண் முன் கொண்டு வருகிறது. இது பண்டைய நாகரிகத்திற்கான உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாகும்.[4][5]

இப்பெரிய அருங்காட்சியகத்தை நிறுவ 1992ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.[4] ஆனால் கட்டுமானம் 2005ஆம் ஆண்டில் தொடங்கியது.[6] நிதி நெருக்கடியால் இக்கட்டுமானம் 2023ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவடைந்தது[7]இக்கட்டுமானத்திற்கான மொத்தச் செலவு $1.2 பில்லியன் ஆகும்.[8] சோதனை திறப்பு அக்டோபர் 2024ஆம் ஆண்டில் தொடங்கியது, அதிகாரப்பூர்வ திறப்பு நவம்பர் 1, 2025 அன்று நடந்தது.[9]

இந்த அருங்காட்சியகத்தில், வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (கிமு 6,000 முதல் கிமு 3150) முதல் எகிப்தின் கோப்துகள் (கிபி 7ஆம் நூற்றாண்டு) வரையிலான எகிப்திய நாகரிகத்தின் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த எகிப்திய கலைப்பொருட்களின் தொகுப்பு உள்ளது, இதில் மொத்தம் 1,00,000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் உள்ளது.[10] இதில் குறைந்தது 20,000 கலைப்பொருட்கள் முதல் முறையாக காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பார்வோன் துட்டன்காமன் தொடர்பான 5,398 முழுமையான துண்டுகள் அடங்கும்.[11] பார்வோன் துட்டன்காமன் தொடர்பான பொருட்களை மட்டும் 7,500 சதுர மீட்டர் பரப்பிலான கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.2 section of the museum.[12] அருங்காட்சியகத்தில் 7,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தளத்தில் பார்வோன் துட்டன்காமன் தொடர்பான சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[13] புதிதாக மீட்டெடுக்கப்பட்ட சில துண்டுகள் முதல் முறையாக காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மன்னர் கூபுவின் இரண்டாவது சூரியக் கப்பல்[14] மற்றும் மன்னர் கூபுவின் தாயான ராணி ஹெட்டெஃபெரஸ் தொடர்பான சேகரிப்புகள்[15] மற்றும் அரசி தியே மற்றும் அவரது பெற்றோர்களான யுயா மற்றும் துயு ஆகியோரின் தொகுப்புகள் அடங்கும்.

மொத்தம் 5,00,000 சதுர மீட்டர் (5,381,955 சதுர அடி) பரப்பளவு கொண்ட[16][17]இப்பெரும் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் 1,67,000 சதுர மீட்டர் (17,97,573 சதுர அடி) பரப்பளவில் கட்டிடங்கள் நிறுவப்பட்டுள்ளது.[18] இதன் தரைப் பரப்பளவு 81,000 சதுர மீட்டர் (8,72,000 சதுர அடி)[19]ஆகும். இவ்வளாகத்தில் நிரந்தர அருங்காட்சியகங்கள், நிரந்தரக் கண்காட்சிக் கூடங்கள், தற்காலிக கண்காட்சிக் கூடங்கள், சிறப்பு கண்காட்சிக் கூடங்கள், குழந்தைகள் அருங்காட்சியகங்கள் கொண்டது. மேலும் 32,000 சதுர மீட்டர் (344,445 சதுர அடி) தரைப் பரப்பளவைக் கொண்ட மெய்நிகர் மற்றும் பெரிய வடிவத் திரைகளையும் கொண்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை எகிப்திய ஒராஸ்காம் கட்டுமான நிறுவனம் மற்றும் பெல்ஜியத்தின் பெசிக்ஸ் குழுமத்தின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்டது.[20]

தொல்பொருட்கள்

[தொகு]

இப்பெரும் அருங்காட்சியகத்தில் 1 இலட்சத்திற்கு மேற்பட்ட தொல்பொருட்கள் 12 முக்கிய கூடங்கள் மற்றும் பிற முக்கிய காட்சிக் கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெரிய கூடம் (Atrium)

[தொகு]
பெரிய கூடத்தில் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் சிலை

எகிப்தின் பெரிய அருங்காட்சியகத்தின் முதன்மை நுழைவாயில் அருகே பெரிய காட்சிக் கூடம் உள்ளது. இது 10,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் கூரை கண்ணாடியால் வேயப்பட்டது. பெரிய கூடத்திலிருந்து கீசா பிரமிடுகளைக் காணலாம். பெரிய கூடத்தில் 11 மீட்டர் உயரம், 83 டன் எடை கொண்ட பார்வோன் இரண்டாம் ராமேசஸ் சிலை மற்றும் பணடைய எகிப்திய காலத்திய ஆயிரக்கணக்கானதொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பெரிய திறந்தவெளி படிக்கட்டுகள் 12 முதன்மை காட்சிக் கூடங்களை இணைக்கிறது. [21][22]

12 முதன்மை கூடங்கள்

[தொகு]

இப்பெரும் அருங்காட்சியகத்தின் 12 முதன்மைக் காட்சிக் கூடங்களில் கிமு 3100 முதல் கிபி 400 வரையான 24,000 தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[23][24] நார்மர் கற்பலகை

12 முதன்மை கூடங்கள் பண்டைய எகிப்தின் வரலாற்றைக் காட்டும் தொல்பொருட்கள்
கூடங்கள் (1-2-3)
நார்மெர் கற்பலகை, கிமு 3200 – கிமு 3000

வரலாற்றுக்கு முந்தைய எகிப்து, எகிப்தின் துவக்க கால அரச மரபுகள், பழைய எகிப்து இராச்சியம், எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்

கூடங்கள் (4-5-6)
கீழ் எகிப்தின் செம்முடியை சூடிய பார்வோன் முதலாம் செனுஸ்ரெத் (கிமு1878-1839), லிஸ்டு நகரம்

எகிப்தின் மத்தியகால இராச்சியம், எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்

கூடங்கள் (7-8-9)
இராணி ஆட்செப்சுட்டு, கிமு 1479-1458

புது எகிப்து இராச்சியம்

கூடங்கள் (10-11-12)
மம்மியின் தங்க முகமூடி
எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம், பிந்தைய கால எகிப்திய இராச்சியம், கிரேக்க எகிப்து, ரோமானிய எகிப்து காலங்கள்

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Metropolitan Museum Launches New and Expanded Web Site" பரணிடப்பட்டது 28 நவம்பர் 2016 at the வந்தவழி இயந்திரம், press release, The Met, 25 January 2000.
  2. நீண்டகாலமாக கட்டுமானத்தில் இருந்த மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் திறப்பு
  3. "Grand Egyptian Museum to open main galleries for trial run to 4,000 visitors". The Guardian. 15 October 2024.
  4. 4.0 4.1 "Grand Egyptian Museum (GEM) | History, Collection, Opening, Architect, & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). 2025-08-05. Retrieved 2025-08-07.
  5. Gaskins, Ty (2025-04-24). "Inside the Grand Egyptian Museum: A First Look at the World's Largest Museum Dedicated to a Single Civilisation". Vogue Arabia (in ஆங்கிலம்). Retrieved 2025-08-07.
  6. "The Grand Egyptian Museum is about to open". We Build Value (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-01-17. Retrieved 2025-08-07.
  7. Read, Johanna (2023-03-16). "Giza and Saqqara, Egypt". TIME (in ஆங்கிலம்). Retrieved 2025-08-07.
  8. Knell, Yolande; Hussein, Wael (2025-11-01). "Egypt's Grand Museum opens, displaying Tutankhamun tomb in full for first time". BBC News (in ஆங்கிலம்). Retrieved 2025-11-01.
  9. "Grand Egyptian Museum to open on 1 November - Society - Egypt". Ahram Online. Retrieved 2025-08-07.
  10. Khaled, Fatma (2025-05-26). "Egyptian archaeologists discover three tombs in Luxor". AP News (in ஆங்கிலம்). Retrieved 2025-08-07.
  11. "Grand Egyptian Museum partially opens to public". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2024-10-16. Retrieved 2025-08-07.
  12. "العناني يكشف عن مكونات المتحف المصري الكبير والموقف التنفيذي لعملية نقل القطع الأثرية". مصراوي.كوم (in அரபிக்). Retrieved 2025-08-07.
  13. "العناني يكشف عن مكونات المتحف المصري الكبير والموقف التنفيذي لعملية نقل القطع الأثرية". مصراوي.كوم (in அரபிக்). Retrieved 2025-08-07.
  14. "Khufu's boat to be reassembled - Heritage - Al-Ahram Weekly". Ahram Online. Retrieved 2025-08-14.
  15. Sarkar, Somudranil (2024-12-07). "Grand Egyptian Museum in Giza Partially Opens: Explore New 15,000 Artifacts Showcasing Egypt's Ancient Civilization Near the Pyramids - Travel And Tour World" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-08-07.
  16. presidency.eg, presidency.eg. "إنشاء المتحف المصري الكبير".
  17. "Grand Egyptian Museum to serve as int'l hub for Egyptology studies: Tourism minister - Tourism - Egypt". Ahram Online. Retrieved 2025-08-07.
  18. "Grand Egyptian Museum – Integratedfs" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-08-07.
  19. "المتحف المصرى الكبير .. حكـاية حضارية عظيمـة - جريدة الجمهورية". algomhuria.gomhuriaonline.com (in அரபிக்). 2025-04-18. Retrieved 2025-08-07.
  20. "Grand Egyptian Museum". www.besix.com (in டச்சு). Retrieved 2025-08-07.
  21. الرحمن, محمد عبد (2025-11-01). "تمثال رمسيس.. رحلة الفرعون من ميت رهينة إلى المتحف المصري الكبير". اليوم السابع (in அரபிக்). Retrieved 2025-11-02.
  22. "The Grand Egyptian Museum (GEM)". Experience Egypt (in ஆங்கிலம்). Retrieved 2025-10-21.
  23. Keyes, Allison (21 December 2016). "For the First Time, All 5,000 Objects Found Inside King Tut's Tomb Will Be Displayed Together". Smithsonian.com. Retrieved 21 December 2016.
  24. "Two Royal Statues Placed in GEM's Great Staircase". Egypt Today. 26 August 2020.