ஊழியன் (இதழ்)
ஊழியன் என்பது 1930களில் காரைக்குடியில் இருந்து வெளிவந்த ஒரு பத்திரிக்கை. 1920களில் சொ.முருகப்பாவால் தொடங்கப்பட்ட தனவைசிய ஊழியன், 1930இல் இராய.சொவால் ஊழியன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.[1] காந்திய அடிப்படையில் விடுதலைப் போரில் தொண்டு செய்யும் இதழாக இது செயல்பட்டது.[2] புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் வ.ரா, தி.ஜ.ர, புதுமைப்பித்தன் ஆகியோர் இப்பத்திரிக்கையில் துணை ஆசிரியர்களாக இருந்துள்ளனர். கொத்தமங்கலம் சுப்பு, எஸ். எஸ். வாசன் ஆகியோரும் பணி புரிந்துள்ளார்கள்
வரலாறு
[தொகு]இந்து மதாபிமான சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இணைந்து 1919 இல் தனவைசிய ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். அந்தச் சங்கத்தின் சார்பில் சொ.முருகப்பாவை ஆசிரியராகக் கொண்டு 8.9.1920 அன்று தன வைசிய ஊழியன் என்ற பெயரில் இந்த வார இதழைத் தொடங்கப்பட்டது. இதில் 14.7.1922 அன்று முதல் இராய. சொக்கலிங்கம் இதழாசிரியராகப் பொறுப்பேற்றார். 14.7.1925 இல் ஊழியன் என்று பெயர் மாற்றப்பட்டது. 18.7.1940 அன்று அறிவிப்புடன் இதழ் நிறுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார் (PDF). வானதி பதிப்பகம். p. 212. பார்க்கப்பட்ட நாள் 20 October 2023.
- ↑ நகரத்தார் கலைக்களஞ்சியம். மெய்யப்பன் தமிழாய்வகம். p. 83.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help)