ஊழிநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊழிநோய் (சித்த மருத்துவம்)

  விடபேதி,கொள்ளை நோய், வாந்திபேதி, சகப்பு, விசூசி நட்புநோய்,நீர்க்கொம்பன் என்பன இதன் வேறு பெயர்கள்ஆகும். உணவு செரிமானம் ஆகாமல் வாந்தி, கழிச்சல், நீர்வேட்கை, கைகால் குளிர்தல் என்பன நோயின் அறிகுறிகளாகும். இந்நோய் கொம்பன், குடற்பாடுவன் அக்கரன் என்று மூன்று வகையாக வழங்கப்படும். இவை வளிஊழி,அழல், ஊழி, ஐயஊழி என்றும் கூறப்படும். வளி ஊழி காண முப்பது நாழிகையில் இறப்பு ஏற்படும் என்றும், அழல் ஊழியில் மூன்று நாள் செல்ல, உயிர் பிழைக்க சாமம் வரையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உயிர் விடுவதற்குச் சற்றுமுன் வாந்தி கழிச்சல் இவை நின்று விடுவதும் உண்டு. ஆனால் இறுதிவரை நினைவு இருக்கும் என்பர்.
   மருத்துவம்: ஊழி மாத்திரை, கபாட மாத்திரை, ஊழிக்காலமெழுகு, காடிகாரச்செந்தூரம் என்பன பயன்தரலாம். மெழுகுத்தைலம் தடவி, சூடு வரத் தேய்க்கலாம். பூநாகக்கறுக்குக் குடிநீர் தர நீர் வேட்கை நீங்கக்கூடும்.

"திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர் தொகுப்புக் கட்டுரை

பகுப்பு :சித்த மருத்துவம் - நோய் சிகிச்சை முறை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊழிநோய்&oldid=2376581" இருந்து மீள்விக்கப்பட்டது