ஊலூரூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆள்கூற்று: 25°20′42″S 131°02′10″E / 25.34500°S 131.03611°E / -25.34500; 131.03611
ஊலூரூ
Uluru (Uluṟu)
ஏயர்ஸ் குன்று
Uluru (Helicopter view)-crop.jpg
ஊலூரூ மலை
நாடு  ஆத்திரேலியா
மாநிலம் வடக்கு ஆஸ்திரேலியா
உயரம் 863 மீ (2,831 அடி)
Prominence 348 மீ (1,142 அடி)
ஆள்கூறு 25°20′42″S 131°02′10″E / 25.34500°S 131.03611°E / -25.34500; 131.03611
Geology களிம நுண்பொடி பாறை
Orogeny பீட்டர்மான்
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களம்
Name Uluṟu – Kata Tjuṯa National Park
Year 1987 (#11)
Number 447
Criteria v,vi,vii,ix
ஆத்திரேலியாவில் அமைவிடம்
ஆத்திரேலியாவில் அமைவிடம்
Locator Red.svg
ஆத்திரேலியாவில் அமைவிடம்
விக்கிமீடியா பொது: Uluru
Website: www.environment.gov.au/...

உலூரு அல்லது உலுறு (Uluru, ஆங்கிலம் பலுக்கல்: /ˌlˈr/), அல்லது ஆயர்சு பாறை, Ayers Rock, அதிகாரபூர்வமாக உலுறு / ஏயர்சு பாறை)[1] என்பது ஆஸ்திரேலியாவின் மத்திய பகுதியில், வட ஆட்புல ஆட்சிப் பகுதியின் தெற்கே அமைந்துள்ள ஒரு பெரும் மணற்கல் பாறையைக் குறிக்கும். இது அலிசு ஸ்ப்றிங்சு நகரில் இருந்து தென்மேற்கே 450 கிமீ (280 மைல்) தூரத்தில் உள்ளது. ஊலூறு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இடத்திற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல தட்ப வெப்ப நிலைக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் குன்று இது. இதனால் இது பச்சோந்திக் குன்று என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் வாழும் அனங்கு இன பழங்குடிகளுக்கு உலுறு ஒரு புனிதமான இடமாகக் கொள்ளப்படுகிறது. முழுவதும் மணற்பாறைகள் மற்றும் சிறு சிறு கற்களால் உருவான பாறைகளால் ஆனது இக்குன்று. முட்டை வடிவம் கொண்ட இப்பாறையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் மிகப் பழமையான பழைய ஓவியங்களும் செதுக்கப்பட்ட சில உருவங்களும் உள்ளன.

ஏயர்சு குன்று உலகிலேயே தனிக் குன்றாக இருக்கும் மிகப் பெரிய பாறைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 338 மீட்டர் உயரமும் அடிப்பாகத்தில் 10 கி.மீ அகலமும் கொண்டது.

ஏயர்சு பாறை-சூரியன் மறையும் போது

பச்சோந்திக் குன்று 1873-ல் டபிள்யு. ஜி. கோஸி என்ற ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஹென்றி ஏயர்சு என்பவர் ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்ததால் அவர் பெயரால் இந்தக் குன்று 'ஏயர்ஸ் பாறை' என அழைக்கப்பட்டது. உண்மையில் இந்தப் பாறை சிவப்பு நிறம் கொண்டதாகும். சூரிய உதயத்தின் போதும், மறைவின் போதும் இதன் நிறம் மாறுகிறது. சூரியன் உதிக்கும்போது அதன் கிரணங்கள் இதில் பட்டு ஊதா மற்றும் அடர்ந்த சிவப்பு நிறத்தில் தக தக என எரிவது போல் தோற்றமளிக்கும். இதேபோல், சூரியன் மறையும் போது ஊதா நிறம் இதில் படிந்திருப்பதைப் பார்க்கலாம். காலையிலிருந்து மாலை வரை சூரியனின் வெப்பநிலை மாற மாற இதன் நிறங்களும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என மாறிக் கொண்டே இருக்கும்.

இந்தப் பாறைக்கு அருகில் மவுன்ட் ஓல்கா தேசியப் பூங்காவை ஆஸ்திரேலிய அரசு அமைத்துள்ளது. இந்தப் பாறையையும், பூங்காவில் உள்ள கங்காரு, பன்டிகூட்ஸ் போன்ற பல அரிய விலங்குகளையும் காண உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர். இது ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் தலமுமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Place Names Register Extract: Uluru / Ayers Rock". Northern Territory Place Names Register. Northern Territory Government (6 November 2002). பார்த்த நாள் 12 July 2013.
  • நாளை நமதே. 'சென்னை நம்ம சென்னை' இதழின் பங்களிப்பு . மாணவர் வழிகாட்டி இலவச மாத இதழ். கிழக்குப் பதிப்பகம்.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊலூரூ&oldid=2443141" இருந்து மீள்விக்கப்பட்டது