ஊர்வு அளவுகோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணிப்பொறி (computer) கணிப்பான் (calculator) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதற்குமுன் பல்லாண்டுகளாகக் கணிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட கருவி ஊர்வு அளவு கோல் (Slide rule) ஆகும். இதில் அசையாக இரு சட்டத்திற்கிடையில் ஊரக்கூடிய ஒரு சட்டம் பொருத்தப்பட்டிருக்கும். இவ்விரு சட்டங்களிலும் பல்வேறு அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். நகரும் சட்டத்திலும் பல அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகோல் நெப்பியர் என்பவர் கண்டறிந்த மடக்கை (logarithm) அடிப்படையில் இயங்குகின்றது.

  A,B,C,D என்ற பலவகையான அளவுகோல்களிருக்கும். இரு எண்களைப் பெருக்குவதற்கும், வகுப்பதற்கும் 227 போன்றவற்றின் மதிப்புகளைக் கண்டறிவதற்கும் பயன்படும் இது பொறியியல் வல்லுநர்களுக்கு ஒரு சிறந்த கணிப்பொறியாக விளங்கியது. இதில் பயன்படும் சட்டங்கள் வெப்பத்தினாலோ ஈரப்பசையினாலோ பாதிக்கப்படாத மின்னணுவியல் கணிப்பான்கள், கணிப்பொறிகள் பெரும்பான்மையாக வந்த பின்னர் இவை பயனற்றுப் போய்விட்டன.ஏனெனில் மின்னணுவியல்  கணிப்பான்களில் கணிப்பை மிகவும் எளிமையாகவும் நுட்பமாகவும் விரைவாகவும் செய்யமுடியும். எனினும் கணிப்பொறியியல் வரலாற்றி்ல இது சிறப்பிடம் பெறுகிறது.
McGraw - Hill Encyclopedia of Chemistry, Fifth Edition, 1983.
   தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு;
   அறிவியல் களஞ்சியம் தொகுதி - I பக்கம் - 
   பதிப்பாசிரியர்; பி.எல்.சாமி

"திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர் தொகுப்புக் கட்டுரை

பகுப்பு : இயற்பியல் துறை - அளவீடுகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்வு_அளவுகோல்&oldid=2723357" இருந்து மீள்விக்கப்பட்டது