ஊர்மி பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊர்மி பாசு
Urmi Basu
Urmi Basi 2017 (cropped).jpg
2017 ஆம் ஆண்டில் ஊர்மி பாசு
பிறப்புகொல்கத்தா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுநியூ லைட் அமைப்பு உருவாக்கம்
வாழ்க்கைத்
துணை
2

ஊர்மி பாசு (Urmi Basu) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளர்களைப் பாதுகாத்து வரும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். 2019 ஆம் ஆண்டு ஊர்மிக்கு இந்தியாவில் பெண்களுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

ஊர்மி பாசு கொல்கத்தாவில் பிறந்தார். [1] இவரது பெற்றோர் இருவரும் மருத்துவ வல்லுநர்கள் ஆவர். ஊர்மிக்கு அவரது பெற்றொர் நல்ல கல்வியை அளித்தனர்.

நாரி சக்தி விருது பெற்றவர்கள். பாசு வலதுபுறம்

ஊர்மி 2000 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளர்களைப் பராமரிக்கும் "நியூ லைட்" என்ற ஓர் அமைப்பை நிறுவினார். தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி இவர் இந்த அமைப்பை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஊர்மியின் இரண்டாவது கணவர் இவரது அமைப்புக்கு ஆதரவற்ற நிலையில் இருந்ததால் ஊர்மி அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. [1] நியூ லைட்டின் அடித்தளத்தில் ஒரு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இக்காப்பகத்தில் பெண்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பிற்காகத் தங்கலாம். பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் விபச்சாரத்தைப் பற்றி இவர் கவலைப்படுகிறார், [2] 90% பாலியல் தொழிலாளர்களின் மகள்கள் சராசரியாக பதின்மூன்று வயதில் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். [3]

2012 ஆம் ஆண்டு ஊர்மியும் அவரது அமைப்பும் ஆப் தி இசுகை என்ற ஓர் அமெரிக்கத் திரைப்படத்தில் இடம் பெற்றனர். இவ்வாய்ப்பு அடக்குமுறையை உலகளவில் பெண்களுக்கான வாய்ப்பாக மாற்றியது". [3] நான்கு மணிநேர ஆவணப்படமான இது 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் [4] திரையிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டு பன்னாட்டு மகளிர் தினத்தன்று ஊர்மிக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. "2018" ஆம் ஆண்டுக்கான இவ்விருது இந்திய குடியரசுத் தலைவரால் குடியரசுத் தலைவர் இல்லத்தில் வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Urmi Basu - India | WEF | Women Economic Forum". WEF (ஆங்கிலம்). 2020-04-25 அன்று பார்க்கப்பட்டது."Urmi Basu - India | WEF | Women Economic Forum". WEF. Retrieved 2020-04-25.
  2. "Urmi Basu". thinkglobalschool.org. 2020-04-25 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 ""Prostitution is Absence of Choice" | ITVS". itvs.org (ஆங்கிலம்). 2020-04-25 அன்று பார்க்கப்பட்டது.""Prostitution is Absence of Choice" | ITVS". itvs.org. Retrieved 2020-04-25.
  4. "Independent Lens: Half the Sky". PBS.org. March 22, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. 2020-04-11 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்மி_பாசு&oldid=3400378" இருந்து மீள்விக்கப்பட்டது