உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்கேஷ்

ஆள்கூறுகள்: 37°3′25″N 40°59′50″E / 37.05694°N 40.99722°E / 37.05694; 40.99722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊர்கேஷ்
மோசன் தொல்லியல் மேட்டின் காட்சி
ஊர்கேஷ் is located in சிரியா
ஊர்கேஷ்
Shown within Syria#Near East
ஊர்கேஷ் is located in Near East
ஊர்கேஷ்
ஊர்கேஷ் (Near East)
மாற்றுப் பெயர்மோசன் தொல்லியல் மேடு
இருப்பிடம்அல்-ஹசகா மாகாணம், சிரியா
பகுதிதாரசு மலைத்தொடர்
ஆயத்தொலைகள்37°3′25″N 40°59′50″E / 37.05694°N 40.99722°E / 37.05694; 40.99722
வகைகுடியிருப்புப் பகுதி
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 3,000
பயனற்றுப்போனதுகிமு 1,350
பகுதிக் குறிப்புகள்
நிலைசிதைந்துள்ளது
பொது அனுமதிஆம்

ஊர்கேஷ் அல்லது ஊர்கிஷ் (Urkesh or Urkish), தற்கால சிரியா வடகிழக்கில் உள்ள அல்-ஹசகா மாகாணத்தில், துருக்கி நாட்டின் எல்லைப்புறத்தில் அமைந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். தாரசு மலைத்தொடர்களில் அமைந்த இந்நகரம் கிமு 3,000 முதல் கிமு 1,350 முடிய பொழிவுடன் விளங்கியது. காபூர் ஆறு பாயும் சமவெளியின் இந்நகரத்தை ஹுரியத் மக்கள் நிறுவினர்.[1] அக்காடியப் பேரரசில் ஊர்கேஷ் மற்றும் டெல் பராக் நகரங்கள் சிறப்புடன் விளங்கியது[2][3]. தற்போது இந்நகரத்தின் சிதிலங்கள் மோசன் தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிமு 2,000ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அக்காடியப் பேரரசின் கீழ் ஊர்கேஷ் மற்றும் நாகர் நகர இராச்சியங்களை ஆண்ட ஹூரியத் மன்னர் துப்கிஷ் மற்றும் அவரது இராணி உக்னிதும் பெயர்கள் கொண்ட முத்திரைக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. [4] கிமு இரண்டாயிரம் ஆண்டுகளின் துவக்கத்தில் அக்காடியப் பேரர்சர் ஊர்கேஷ் மன்னர், அக்காடிய இளவரசியை மணந்தார் என நம்பப்படுகிறது. பின்னர் மாரி இராச்சியத்தின் சிற்றரசாக ஊர்கேஷ் நகரம் விளங்கியது. கிமு 1550 முதல் மித்தானி இராச்சியத்தின் சமய வழிபாட்டிடமாக ஊர்கேஷ் நகரம் விளங்கியது. [5] கிமு 1350ல் ஊர்கேஷ் நகரம் சிதைந்து போனது.அதற்கான காரணத்தை தொல்லியல் அறிஞர்களால் அறியப்படவில்லை.[6]

தொல்லியல்

[தொகு]
ஹூரியத் மொழியில் எழுதப்பட்ட கற்பலகையுடன் கூடிய சிங்கம்

பண்டைய ஊர்கேஷ் நகரம் 135 எக்டேர் பரப்பளவு கொண்டது. நகர கோட்டைச் சுவர் 8 மீட்டர் அகலம் மற்றும் 7 மீட்டர் உயரம் கொண்டது.[7]

நெர்கல் கடவுளுக்கு எழுப்பட்ட கோயில் அடிக்கல் கற்பலகையில் ஹுரியத் மொழியில் ஊர்கேஷ் மன்னர் அடல்சென் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.[8]

ஊர்கேஷ் ஆட்சியாளர்கள்

[தொகு]

ஊர்கேஷ் ஆட்சியாளர்கள் பட்டியல்:[9]

  • துப்கிஷ் - (கிமு 2250)
  • திஷ்-அதல் (காலம் அறியப்படவில்லை)
  • ஷாதர்-மாத் -(காலம் அறியப்படவில்லை)
  • அதல்-சென் - (காலம் அறியப்படவில்லை)
  • தெயிரு (கிமு 1800)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Marilyn Kelly- Buccellati. Andirons at Urkesh: New Evidence for the Hurrian Identity of the Early Trans-Caucasian Culture. (2004) [1]
  2. Bryce, Trevor (2009). The Routledge Handbook of the Peoples and Places of Ancient Western Asia: The Near East from the Early Bronze Age to the Fall of the Persian Empire. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134159086.
  3. Margreet L. Steiner, Ann E. Killebrew, The Oxford Handbook of the Archaeology of the Levant: C. 8000-332 BCE. OUP Oxford, 2014 p398
  4. Bryce, Trevor (2009). The Routledge Handbook of the Peoples and Places of Ancient Western Asia: The Near East from the Early Bronze Age to the Fall of the Persian Empire. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134159086.
  5. [2] Kelly-Buccellati, Marilyn. "The Urkesh Mittani Horizon: Ceramic Evidence." talugaeš witteš (2020): 237-256
  6. [3] Giorgio Buccellati and Marilyn Kelly‐Buccellati, Tell Mozan - ancient Urkesh. A visitor’s guide., 2007
  7. Buccellati, Marilyn K. (1990). "A New Third Millennium Sculpture from Mozan". In Leonard, A.; Williams, B. (eds.). Essays in Ancient Civilization Presented to Helene J. Kantor. SAOC. Vol. 47. Oriental Institute. pp. 149–154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-918986-57-5.
  8. "Royal inscriptions". urkesh.org.
  9. Bryce, Trevor (2009). The Routledge Handbook of the Peoples and Places of Ancient Western Asia: The Near East from the Early Bronze Age to the Fall of the Persian Empire. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134159086.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்கேஷ்&oldid=3732939" இலிருந்து மீள்விக்கப்பட்டது