ஊரும் பேரும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியா[தொகு]

    பரதன் என்ற மன்னன் ஆண்ட நாடு என்பதால் இந்த நாட்டிற்கு "பரத கண்டம்" என்ற பெயர் வந்தது.எகிப்தியர்கள் பரத கண்டம் என்று இருந்த இந்த நாட்டில்,வெளிநாட்டவர் குடியேறி வாழ்ந்த அந்த பகுதியை இண்டஸ் என்று அழைத்தனர்.பின்னர் நாளடைவில் மருவி இந்தியா என்று மாறியதாக அறியப்படுகிறது.

தமிழ்நாடு[தொகு]

  நாடு என்னும் சொல் மனிதர்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்தமுறையில் தமிழர் வாழ்ந்த நாடு "தமிழ்நாடு" என்று பெயர் பெற்றது. அந்த நாடு மூன்று பாகம் ஆகிய பொழுது, ஒவ்வொரு பாகமும் தனித் தனியே நாடு என்னும் பெயருக்கு உரியதாயிற்று. சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்ற பெயர்கள் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடுவது சிறப்பு ஆகும்.

சென்னைப் பட்டினம்[தொகு]

  சென்னையில் ஆங்கிலேயர்கள் கோட்டைக் கட்டி வர்த்தகம் செய்யலாம் என்று கருதிய போது சென்னப்ப நாயக்கர் என்பவருக்கு உரியதாக இருந்த சில இடங்களை அவர் மகனிடமிருந்து வாங்கினார்கள். எனவே சென்னப்ப நாயக்கர் நினைவாக அந்த இடத்திற்கு சென்னைப் பட்டினம் என்று பெயர் வைத்தனர்.

மதராஸ் மாகாணம்[தொகு]

1757-ம் ஆண்டு சென்னை உட்பட பல இடங்கள் ஆங்கில ஆட்சியின் கட்டுபாட்டில் இருந்தது. அதை மதராசன் என்பவர் மிகத்திறமையோடு நிர்வகித்து வந்தார். அவரின் நினைவாக சென்னை என்ற பெயரை மதராஸ் என்று மாற்றி அமைத்தனர். அதன்பின்னர் ஆங்லேயர்கள் சென்னைக்கு பதிலாக 'மதராஸ்' என்றும் சென்னை மாகணத்திற்கு பதிலாக 'மதராஸ் ஸ்டேட்'என்றும் பயன்படுத்தி அழைத்தனர். 1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மதராஸ் என்பதை சென்னை என்றும் மதராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்றும் மாற்றி அமைத்தார்.

பார்வை நூல்கள்[தொகு]

1. வட ஆற்காடு மாவட்ட வரலாறு, வேலூர் மா. குணசேகரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரும்_பேரும்&oldid=2803993" இருந்து மீள்விக்கப்பட்டது