ஊருகொடவத்தை மேம்பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊருகொடவத்தை மேம்பாலம்
வகைசாலைவழி
இடம்ஊருகொடவத்தை , கொழும்பு, இலங்கை
அமைத்தவர்இலங்கை வீதி அதிகாரசபை
திறக்கப்பட்ட நாள்டிசம்பர் 20, 2009
நீளம்521 மீட்டர்
வழிகள்4
அகலம்17.4 மீட்டர்

ஊருகொடவத்தை மேம்பாலம் கொழும்பு நகரில் ஊருகொடவத்தை என்ற புறநகர்ப் பகுதியில் உள்ள மேம்பாலம் ஆகும். இது 521 மீட்டர் நீளமான இம்மேம்பாலம் நான்கு சாலைப் போக்குவரத்து வழிகளைக் கொண்டுள்ளது[1].

இந்த மேம்பாலத்தை அமைக்க மொத்தம் 550 மில்லியன் இலங்கை ரூபாய் செலவாகியது[2]. இந்த மேம்பாலத்தை இலங்கை அதிபர் மகிந்த இராசபக்ச திறந்து வைத்தார்[3].

இது இலங்கையின் ஆறாவது மேம்பாலம் ஆகும். இதன் படி ஊருகொடவத்தை மேம்பாலத்திற்கு முன்னர் இராகமை, தெமட்டகொடை, களனி, நுகேகொடை மற்றும் தெகிவளை அகிய பிரதேசங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன[4].

உசாத்துணைகள்[தொகு]

  1. "ஒருகொடவத்தை மேம்பாலம் புள்ளிவிபரங்கள்". Archived from the original on 2010-08-22. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.
  2. "President opens Orugodawatta flyover to public". Archived from the original on 2009-12-24. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.
  3. "அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பு". Archived from the original on 2010-08-24. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.
  4. PRESIDENT INSPECTS ORUGODAWATTA FLYOVER
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊருகொடவத்தை_மேம்பாலம்&oldid=3545485" இலிருந்து மீள்விக்கப்பட்டது