ஊராளி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊராளி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளாவின், இடுக்கி மாவட்டம், உப்புத்தர, காஞ்சியார், வண்ணாப்புறம், வெள்ளியாமத்தம், ஐயப்பன்கோவில் ஆகிய பஞ்சாயத்துக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6,440 (இனத்தவர்)  (2001)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3url


ஊராளி மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென்திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் இம்மொழி பேசப்படுகிறது. இது ஊராழி, ஊர்ளி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. முதல் மொழியாக இம்மொழியைப் பேசுபவர்கள் குறித்த தகவல்கள் இல்லை. ஆனால், 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மொழி சார்ந்த இனத்தவரின் எண்ணிக்கை 6,440.[1]

இம்மொழி, தமிழ், இருளா, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுடன் பல அம்சங்களின் ஒத்ததாக உள்ளது. இம்மொழிக்குத் தமிழ், மலையாளம் ஆகியவற்றுடன் அதிக அளவான சொல்லொப்புமை உண்டு. மலையாளத்துடன் 60%-71% வரையான சொல்லொப்புமையும், தமிழுடன் 54%-58% வரையிலான சொல்லொப்புமையும் காணப்படுகிறது.[2] இம்மொழியைப் பேசுவோர் தற்காலத்தில் மலையாளத்தையே கைக்கொண்டு வருவதால் இது படிப்படியாக அழிந்து வருகிறது. 2001 ஆம் ஆண்டு நிலவரப்படி இம்மொழியை முதல் மொழியாகப் பேசுபவர்கள் மத்தியில், இரண்டாம் மொழியான மலையாள மொழிக் கல்வியறிவு வீதம் 73% ஆக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊராளி_மொழி&oldid=2462771" இருந்து மீள்விக்கப்பட்டது