ஊராளிக் கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊராளிக் கவுண்டர் (Urali Gounder) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். தமிழில் ஆளி என்ற சொல்லுக்கு சிங்கம் என்று பொருள். சேர, சோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் இவர்கள் ஆட்சியாளர்களாக பணியாற்றினர். இவர்கள் துணிச்சலுக்காக அறியப்பட்டவர்கள் மற்றும் குதிரை சவாரி செய்வதில் திறமையானவர்கள். இவர்கள் சிறந்த நிர்வாக திறன்களைக் கொண்டிருந்தனர். இதனால் இவர்களுக்கு ஊராளிக்கவுண்டர் என்று பெயரிடப்பட்டது. இவர்கள் முத்தரையர் குலத்தின் உட்பிரிவில் வரும் சாதிகளில் ஒருவராக அறியப்படுபவராவர். இருப்பினும் இவர்கள் தங்கள் தனிப்பட்ட பெயர்களில் கவுண்டர் என்றே சாதிப்பட்டம் போட்டுக்கொள்கிறார்கள்.

சோழர் காலத்தின் ஆரம்பத்தில், ஊராளிக் கவுண்டர் சமூகத்தின் தலைவர்கள் தமிழகத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்தை ஆட்சி செய்தனர். பிற்கால சோழர்கள் ஆட்சிக்கு வந்தபோது, ஊராளி​க்கவுண்டர்கள் நிலப்பிரபுக்களாக மாற்றப்பட்டனர். இவர்கள் சிவன் மற்றும் திருமாலுக்குப் பல கோவில்களைக் கட்டினர்.[சான்று தேவை]

தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்[தொகு]

தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில் இவர்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் பிரிவில் உள்ளனர். இதில் திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளவர்கள் மிகவும் பிற்பட்ட சாதிகள் அல்லது சீர்மரபினர் சாதிகள் பிரிவில் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊராளிக்_கவுண்டர்&oldid=2911895" இருந்து மீள்விக்கப்பட்டது