ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வடக்குப்பட்டி-வடகாடு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வடக்குப்பட்டி-வடகாடு, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடகாடு கிராமத்தில் உள்ள வடக்குப்பட்டித் தெருவில் அமைந்துள்ளது.
நிர்வாகம்[தொகு]
திருவரங்குளம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் நேரடி நிர்வாகத்தில் பள்ளி சிறப்பாகச் செயல்படுகிறது.
மாணவர்கள்[தொகு]
தொடக்க நிலை வகுப்புகளில் 112 மாணவ மாணவிகளும், உயர் தொடக்க நிலை வகுப்புகளில் 132 மாணவ மாணவிகளும் என மொத்தம் 244 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
ஆசிரியர்கள்[தொகு]
தலைமையாசிரியர்,மூன்று பட்டதாரி ஆசிரியா், நான்கு இடைநிலை ஆசிரியர்கள் என எட்டு முழு நேர ஆசிரியர்களும் ஓவியம், தையல்,உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கு தலா ஒரு ஆசிரியர் வீதம் மூன்று பகுதி நேர ஆசிரியா்களும் என மொத்தம் பதினொன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளியில் கொண்டாடப்படும் விழாக்கள்[தொகு]
குடியரசு தின விழா, தேசிய அறிவியல் தினம், சுதந்திர தின விழா, கல்வி வளர்ச்சி நாள், அண்ணா பிறந்த நாள், சமத்துவ பொங்கல் திருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.