ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அங்கம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அங்கம்பாக்கம்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,அங்கம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் அருகில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அங்கம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள ஒர் இயற்கை எழில் நிறைந்த கிராமம். மரங்கள் நிறைந்த இக்கிராமம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இப்பள்ளியில் சுமார் 150 மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளியில் பயின்ற எ.மஞ்சுப்பிரியா என்னும் மாணவி, அறிவியல் ஆசிரியர் திரு.கு.சிவகவி அவர்களின் வழிகாட்டுதலில் 2014-15 ஆம் கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் நடைபெற்ற இன்ச்பயர் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றார். இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு முழு ஈடுபாட்டுடன் பணிபுரிந்து வருகின்றனர்.