ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செவ்வாய்ப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செவ்வாய்ப்பட்டி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தின் கறம்பக்குடி என்ற ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. அரசு நடுநிலைப்பள்ளி ஆகும்.

நிா்வாகம்[தொகு]

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக 23.1.1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின் நடுநிலைப்பள்ளியாக 6.6.2008 அன்றுதரம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கறம்பக்குடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலா் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள்[தொகு]

இப்பள்ளியில் 262 மரணவா்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமையாசிரியா் மூன்று பட்டதாாி ஆசிாியா்கள் நான்கு இடைநிலை ஆசிரியா்கள் என எட்டு ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் வளா்ச்சியில் இவ்வூர் மக்களின் பங்களிப்பு அளப்பறியது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்களான பாடநுால் சீருடை குறிப்பேடுகள் காலணிகள் எழுதுபொருட்கள் கல்வி உதவித்தொகைகள் போன்றவை வழங்கப்படுகின்றன.2010-2011 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கை 134 லிருந்து 2017-2018 ல் மாணவர் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.

கற்றல் முறைகள்[தொகு]

இப்பள்ளியில் ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை செயல்வழி கற்றல் முறையிலும் ஐந்நாம் வகுப்பு மாணவா்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி முறையிலும் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது.பாடத்திறன்கள் கணினி தொடுதிரை வகுப்புகள்[1] பாிசோதனைகள் மூலமும் கற்பிக்கப்படுகிறது.

பள்ளி புரவலர்கள்[தொகு]

பள்ளியானது பொதுமக்களின் ஒத்துழழைப்பால் மேம்பாடு அடைந்து வருகிறது.பள்ளிக்கு விழா மேடை ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் புதிய கட்டிடம் மின்விசிறி நாற்காலி தையல் இயந்திரம் பள்ளி புரவலர்கள் 102 பேர் மற்றும் ரோட்டரி சங்கம்மூலம் ஆழ்துளை கிணறு போன்றவை நன்கொடையாக பள்ளிக்கு அளித்துள்ளனர்.

தொடுதிரை அரங்கம்[தொகு]

செவ்வாய்ப்பட்டி பள்ளியின் மாணவரும் தற்பொழுது சென்னையில் ஆடிட்டராக உள்ள திரு ந.பழனிவேல் அவர்கள் பள்ளிக்கு ரூ.60000 மதிப்பில் தொடுதிரை அரங்கம் அமைத்துக்கொடுத்துள்ளார். மற்றும் பள்ளியின் நுழைவாயில் ரூ.60000 மதிப்பில் கட்டிக்கொடுத்துள்ளார். பள்ளி புரவலராக ரூ.10000 கொடுத்துள்ளார்.

விழாக்கள்[தொகு]

இப்பள்ளியில் ஆண்டுதோறும் உணவுத்திருவிழா அறிவியல் கண்காட்சி ஆண்டுவிழா போன்ற விழாக்கள் நடைபெறுகிறது. இப்பள்ளியானது மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக தோ்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பள்ளிக்கான விருதை 2014-2015 கல்வியாண்டில் பெற்றுள்ளது.

பள்ளி சிறப்பு[தொகு]

 • குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
 • வகுப்பறை சுவரோவியங்கள்
 • கணினி வழிக்கல்வி
 • இணையதள வசதி
 • கோளரங்க வகுப்பறை
 • தொடுதிரை வகுப்பறை

பள்ளி பெற்ற விருதுகள்[தொகு]

 • பள்ளி தலைமையாசிரியா் ஆ.சந்திரா-- மாநில நல்லாசிரியர் விருது(2013-2014)
 • மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது (2014-2015 )
 • பள்ளி தலைமையாசிரியரக்கு (ஆ.சந்திரா) பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் வழங்கிய அறிவுச்சுடர் விருது (2016-2017)
 • அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் விருது -2015
 • விப்ரோ குழுமத்தின் பள்ளியைப் பற்றிய காணொளிக்காட்சி-2014
 • விழுது இதழில் பள்ளிக்கட்டுரை (ஜனவரி-பிப்ரவரி 2014)
 • இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பு மற்றும் அறிவியல் இயக்கத்தால் வழங்கப்பட்ட மாவட்டத்தில்

சிறந்த பள்ளிக்கான விருது.(2016-2017)

 • பள்ளிக்கு கறம்பக்குடி பல்லவராயர் பாராட்டு விருது.மேற்கோள்கள்[தொகு]